விண்டோஸ் லைசன்ஸ் கீ
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2012
00:00

புதியதாக கம்ப்யூட்டர் ஒன்று வாங்குகையில் விண்டோஸ் சிஸ்டம் பதிந்து கொடுக்கப்படுகிறது. கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள், இதற்கான ஒப்பந்தத்தினை மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் மேற்கொண்டு, ஒவ்வொரு கம்ப்யூட்டரில் பதியப்படும் விண்டோஸ் சிஸ்டத்திற்கான உரிமத்தைப் பெற்று அதற்கான எண்ணையும், ஆப்பரேட்டிங் சிஸ்டம் டிஸ்க் அல்லது சிஸ்டம் மீட்பதற்கான ரெகவரி டிஸ்க்கினை வழங்குகின்றன.
கம்ப்யூட்டரை அசெம்பிளிங் செய்து கொடுப்பவர்கள், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பைரசி பதிப்பு என்று அழைக்கப்படும் நகல் பதிப்பினை பதித்துக் கொடுப்பார்கள். இது உரிமம் இல்லை என்பதால், மைக்ரோசாப்ட் இணைய தளத்திலிருந்து எந்த சேவையையும் பெற முடியாது. இவ்வாறு இயங்குவது ஒரு வகையில் திருட்டு வழி என்றே கூற வேண்டும்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் இதனைக் கண்டறிவதற்கென பலரை நியமித்து, அவர்களும் முறையாக உரிமம் இல்லாமல் விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்துவோரைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக நிறுவனங்கள், வர்த்தக மையங்களில் இது போல பயன்படுத்துவது கடுமையாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
முறையாக உரிமம் பெற்று, அதற்கான சிடி பெற்றவர்கள் பலர், உரிமம் குறித்த தகவல்களை தொலைத்துவிடுகின்றனர். சி.பி.யு. கேபினில் ஒட்டப்பட்டு வரும் லேபிள் நாளடைவில் கிழிந்து மறைந்துவிடுகிறது. இதனை எடுத்துப் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும்; அல்லது கீ எண்ணை எழுதி இருக்க வேண்டும். ஒரு சில நிறுவனங்கள் தாங்கள் அளிக்கும் பில்லில் இந்த எண்ணை எழுதித் தருவதும் உண்டு.
சிலர் நிறுவனங்கள் அளிக்கும் சிடியைத் தொலைத்துவிடுகின்றனர். பின்னர் அது தேவைப்படும்போது என்ன செய்வது என விழிக்கின்றனர். நம் வாசகர்கள் பலர் இது குறித்து நிறைய கடிதங்கள் எழுதி உள்ளனர். அந்த கேள்விகளைத் தொகுத்து இங்கே பதில்கள் அளிக்கப்படுகின்றன.

கேள்வி:எனக்கு அளிக்கப்பட்ட விண்டோஸ் ரெகவரி டிவிடியினை தொலைத்துவிட்டேன். இப்போது என் சிஸ்டம் கிராஷ் ஆகிவிட்டது. வேறு ஒருவரிடம் உள்ள சிஸ்டம் டிவிடியை வாங்கிப் பயன்படுத்தி அதில் எனக்கு அளிக்கப்பட்ட உரிம எண்ணைப் பயன்படுத்தலாமா?
பதில்: உங்கள் நண்பரிடம் உள்ள உரிமத்துடன் வந்த டிவிடியை வாங்கிப் பயன்படுத்தலாம். அல்லது http://en.community.dell.com/supportforums/softwareos/w/microsoftos/3316.21microsoftwindows7officialisodownloadlinksdigitalriver.aspx என்ற முகவரியில் உள்ள, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒப்பந்த மையத்தின் இணைய தளத்தில் இருந்து இதற்கான ஐ.எஸ்.ஓ. பைலை தரவிறக்கம் செய்து டிவிடி தயார் செய்து பயன்படுத்தலாம். விண்டோஸ் சிஸ்டம் நன்றாக இயங்கும். மைக்ரோசாப்ட் தரும் அனைத்து அப்டேட் பைல்களும் உங்களுக்குக் கிடைக்கும். ஆனால், இந்த முயற்சி விதிகளுக்குப் புறம்பானது என்று மைக்ரோசாப்ட் கூறுகிறது. ஏனென்றால், நீங்கள் ஒரு சிஸ்டத்திற்கான உரிமத்தினை, இன்னொன்றுக்கு அளிக்கப்பட்ட டிவிடியுடன் பயன்படுத்துகிறீர்கள். இது தவறு என்கிறது மைக்ரோசாப்ட். நீங்கள் உங்களுக்கு கம்ப்யூட்டர் வழங்கிய நிறுவனத்திடம், தொலைந்த டிவிடிக்கான மாற்று டிவிடி கேட்டு வாங்கிப் பயன்படுத்துவதே சரியான, முறையான வழி.

கேள்வி: எனக்கு கம்ப்யூட்டரை விற்பனை செய்த நிறுவனம், அதனுடன் சிஸ்டம் அல்லது ரெகவரி டிவிடி என எதனையும் தரவில்லை. இப்போதுதான் அது ஒரு கட்டாயத் தேவை என உணர்கிறேன். என்ன செய்யலாம்?
பதில்: செலவினை மிச்சப்படுத்த, கம்ப்யூட்டரை விற்பனை செய்திடும் சில நிறுவனங்கள் ரெகவரி டிவிடியைக் கூடத் தருவதில்லை. உங்களுக்கு வழங்கிய நிறுவனம் அதனைத் தரவில்லை எனில், அந்தக் கடமை அதற்கு இல்லை என்றே தெரிகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் அந்நிறுவனம் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தப்படி அது செயல்படலாம். எதற்கும் நிறுவனத்திடம் கேட்டுப் பாருங்கள். அல்லது அதற்கான கீயாவது கேட்டுப் பெறுங்கள். கிடைக்கவில்லை எனில், உங்களுடைய சிஸ்டத்தின் கீ என்ன என்று அறிய சில புரோகிராம்கள் கிடைக்கின்றன. Jelly Bean Keyfinder என்பது ஒன்று. ஆனால், இது சில வேளைகளில் பொதுவான ஒரு கீயைத் தரலாம்.

கேள்வி: என் சி.பி.யு. கேபினில், விண்டோஸ் சிஸ்டத்திற்கான கீயுடன் கூடிய லேபிளை நீக்கிவிடலாமா? அது இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை.
பதில்: இருப்பது நல்லதுதானே. நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் சிஸ்டத்திற்கான உரிமைப் பட்டா இதுதான். எனவே வைத்துக் கொள்ளுங்கள். நீக்க முடிவு செய்தால், நீக்குவதற்கு முன்னர், அதில் உள்ள தகவல்களை நீக்க முடியாத, நினைவில் இருக்கும் இடம் ஒன்றில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

கேள்வி: இபே (eBay) தளத்தில் விண்டோஸ் 7 அல்டிமேட் சிஸ்டம் எடிஷன் குறைவான விலைக்கு உரிமத்துடன் கிடைக்கும் என விளம்பரப்படுத்தப்படுகிறதே! இதனைப் பெற்று பயன்படுத்தலாமா?
பதில்: குறைந்த விலைக்குக் கிடைக்கும் என விளம்பரப்படுத்தப்பட்டால், அந்த விற்பனை குறித்து சந்தேகப்படுங்கள். இவை MSDN subscription என்று சொல்லப்படுகின்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். இவற் றை விநியோக்கிக்கக் கூடாது. இவை தரப்பட்டு, விண்டோஸ் இயங்கலாம்; ஆனால் பிற்காலத்தில் இவை முறையற்றவை என மைக்ரோசாப்ட் அறிவித்து அப்டேட் போன்றவற்றைத் தடுக்கலாம்.மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அத்தாட்சி பெற்ற சில்லரை விற்பனையாளர் ஒருவரிடம் சரியான, முறையான சிஸ்டத்தினைப் பெற்றுக் கொள்ளுங்களேன்.

கேள்வி: நான் ஒரு ஏஜென்சி நடத்தி வருகிறேன். என் அலுவலகத்தில் 20 கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளேன். விண்டோஸ் உரிமத்திற்கான செலவினைக் குறைக்க “Volume Licensing” முறைக்குச் செல்லலாமா?
பதில்: நீங்கள் குறைந்தது 5 கம்ப்யூட்டர் சிஸ்டம் பயன்படுத்தினால், இதனைப் பெறும் தகுதியைப் பெற்றுவிடுகிறீர்கள். ஆனால், வால்யூம் லைசன்சிங் முறை அப்டேட் செய்வதற்குத்தான். முதலில் ஒவ்வொரு கம்ப்யூட்டருக்குமான லைசன்ஸ் பெற்றுவிட்டு, அப்கிரேட்செய்வதற்கு வால்யூம் லைசன்சிங் முறையைப் பின்பற்றலாம். மேலும் இவ்வாறு பெறும் லைசன்சினை ஒரு கம்ப்யூட்டருக்கு ஒதுக்கிய பின்னர், இன்னொன்றுக்கு மாற்றுவது அனுமதிக்கப்படுவதில்லை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X