சின்ன பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2012
00:00

விண்டோஸ் டேப்ளட் பிசி குறித்த செய்திகள் எங்கும் கிடைக்காத நிலையில், மிக விபரமாக, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சரித்திரக் குறிப்புகளோடு, நல்ல படங்களுடன், உடனடியாகத் தகவல் தந்த உங்கள் ஆசிரியர் குழுவிற்கு பாராட்டுக்கள். நிச்சயம் மைக்ரோசாப்ட் ஹார்ட்வேர் பிரிவிலும் வெற்றி பெற்று, முழு தகவல் தொடர்பு உலகை ஆட்சி செய்திடும்.
டாக்டர் என். பெருமாள், மதுரை.

டேப்ளட் பிசி உலகிலும் தனக்கென ஒரு முத்திரையை மைக்ரோசாப்ட் பதிக்கும். விண்டோஸ் பின்பற்றும் வாடிக்கையாளர்கள், மைக்ரோசாப்ட் தரும் டேப்ளட் பிசியை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். தன் விளம்பர யுக்தி, ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் திறன் கொண்டு மைக்ரோசாப்ட் இப்பிரிவிலும் ஜெயிக்கும்.
நீ. பிரம்மராஜன், கோவை.

கூகுளில் தனிநபரைத் தாழ்த்தி வசைபாடும் வீடியோ கிளிப்கள் நிறைய உள்ளன. தனி நபர் சுதந்திரம் என்ற போர்வையில், இவற்றை கூகுள் அனுமதிக்கக் கூடாது. ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் கலாச்சாரத்திற்கு ஏற்ற வகையில், கொள்கைகளை வகுத்துக் கொண்டு கூகுள் செயல்பட வேண்டும். இந்த வகையில், கூகுள் தவறு புரிகிறது என்பதே பலரின் அபிப்ராயம். இதனை உங்கள் செய்தியும் உணர்த்துகிறது.
செ. நீதிராஜன், தேனி.

விண்வெளியில் பெண்கள் என்று தகவல் தந்த தளம் சென்று பார்த்தேன். அதில் கிடைத்திடும் தகவல்கள் பெண்கள் எந்த துறையிலும் வெற்றி பெறலாம் என்பதனை உறுதிப்படுத்துகிறது. தகவலுக்கு நன்றி.
சா. தமிழரசி, திண்டுக்கல்.

பிரசன்டேஷன் ஸ்லைடுகளில் பாடலைப் பதிப்பது குறித்து தந்துள்ள டிப்ஸ், சமய சஞ்சீவியாய் கிடைத்தது. தடுமாறிப் போய் இருந்த எனக்கு மிகவும் உதவியாய் உள்ளது. சிக்கல் எங்கு ஏற்படுகிறது என அறியாமல், இணைக்க முடியாமல் இருந்தேன். நீங்கள் குறிப்பிட்ட ஆட் இன் புரோகிராம் மிகவும் உதவியாய் உள்ளது. நன்றி.
என். தீபக் ராஜ், சென்னை.

வேர்ட் 2003 மற்றும் 2007 தொகுப்புகளில், வரிகளுக்கு இடையே இடைவெளி விடுவதில் இந்த வேறுபாடு உள்ளது எனத் தெரியாமல், ஏன் இப்படி அமைகிறது என்று இரண்டையும் பயன்படுத்தும் நான் குழம்பிப் போய் இருந்தேன். சிறிய தகவல் என்றாலும் மிகவும் முக்கியமான ஒரு பாடத்தை இது காட்டியுள்ளது. நுணுக்கமாக எதனையும் பார்க்க வேண்டும் என்ற படிப்பினையைத் தருகிறது.
டி.கிரேஸ் மெர்சி, புதுச்சேரி.

எனக்கு ஸ்மார்ட் கோட் குறிகள் பயன்படுத்த பிடிக்காது. இருந்தாலும் வேர்ட் மாற்றுவதால், சகித்துப் போயிருந்தேன். நம் இஷ்டப்படி வளைக்கலாம் என்பது எனக்குத் தெரியவில்லை. இப்படி ஒரு வசதி இருப்பது உங்கள் டிப்ஸைப் படித்த பின்னரே தெரிந்தது. தொடர் ந்து இது போல தகவல்களைத் தரவும்.
ஆர். கார்த்திக், ராஜபாளையம்.

வேர்டை நம் வசமாக்க என்று கூறி இன்னும் சில வழிகள் இருப்பதாகக் கட்டுரையினை முடித்திருக்கிறீர்கள். அவற்றையும் கொடுத்திருக்கலாமே. இன்டர்நெட் எடிஷனில் என்ன பக்கக் கணக்கு? அடுத்த வாரம் அவற்றைத் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். முன்கூட்டியே நன்றி.
என்.சுகந்தி, தாம்பரம்.

அரசும், மக்கள் நல அமைப்புகளும், உங்களைப் போன்ற மக்கள் நலம் நாடும் பத்திரிகையாளர்களும் என பல தரப்பில் இருந்து மொபைல் பழக்கம் குறித்த எச்சரிக்கை குவிந்தாலும், வாகனம் ஓட்டிக் கொண்டு பேசுவது, ரயில் ட்ரேக் கடக்கும் போது பேசுவது, சாலையில் நடந்து கொண்டு டெக்ஸ்ட் அமைப்பது போன்ற அபாய பழக்கங்களை மக்கள் விடுகிற மாதிரி தெரியவில்லையே. இருந்தாலும், ஊதுகிற சங்கினை ஊதுகின்ற பழக்கத்தில், அருமையான எச்சரிக்கையினை வழங்கி உள்ளீர்கள். தங்கள் பணி தொடரட்டும். இருப்பினும் அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கினால் தான் இந்த உயிர் வாங்கும் பழக்கம் மறையும்.
டாக்டர்.இரா. சம்பந்த மூர்த்தி, புதுச்சேரி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X