உங்களுக்கு தெரியுமா!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2012
00:00

என்கிரிப்ட் (Encrypt) : கம்ப்யூட்டரில் அனுப்பப்படும் டேட்டாவினை அனுப்புபவரும் பெறுபவரும் மட்டுமே ரகசியமாகக் கையாள உதவும் தொழில் நுட்பம். டெக்ஸ்ட், ஆடியோ மற்றும் வீடியோ ஆக எதுவானாலும் இந்த முறையில் மாற்றிக் கொள்ளலாம். மாற்றிய பின்னர் மாற்றியவர் துணையின்றி யாரும் படித்தறிய முடியாது.
செக்ஸ்டில்லியன் (Sextillion)என்று ஒரு எண் உண்டு. கனடா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இந்த எண்ணைத் தற்போது குறிப்பிடுகின்றனர். இது 1 போட்டு 21 சைபர்களைச் சேர்த்தால் வரும் எண்.
லினக்ஸ் (Linux):இது ஒரு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம். பெர்சனல் கம்ப்யூட்டர் உட்பட அனைத்து வகை கம்ப்யூட்டர்களிலும் இது இயங்கும். இதனை யாரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றி அமைக்கலாம். அதற்கான சோர்ஸ் கோட் இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது.
குயிக் லாஞ்ச் (Quick Launch): டாஸ்க் பாரில் பொதுவாக இடது புறம் உள்ள ஏரியா. அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களின் ஐகான்களை இங்கு வைத்து சிங்கிள் கிளிக் மூலம் அவற்றை இயக்கலாம்.
ஜி.எஸ்.எம். (GSM Global System for Mobile Communi cations): இந்தியா, கிரேட் பிரிட்டன் உட்பட பல நாடுகளில் பெரிய அளவில் பயன்படுத்தப்படும் ஒரு மொபைல் போன் தொடர்பு தரும் சிஸ்டம். இன்னொரு மாற்றான சி.டி.எம்.ஏ. என்ற மொபைல் சிஸ்டம், இதைக் காட்டிலும் சிறப்பான தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இயங்குவது என்றாலும், ஜி.எஸ்.எம். சிஸ்டம் தான் பெரும்பாலான இடங்களில் இயங்குகிறது. இந்தியாவில் இரண்டு சிஸ்டங்களும் இயங்குகின்றன. ஆனால், ஜி.எஸ்.எம். வகைதான் அதிக வாடிக்கையாளர்களையும், நிறுவனங்களையும் கொண்டுள்ளது.
எம்.டி.ஏ. (Mail Transfer Agent): இதைச் சுருக்கமாக MTA என அழைக்கின்றனர். நாம் நம்முடைய இமெயில் கடிதத்தைத் தயார் செய்து அதனை அனுப்புவதற்கு Send பட்டனை அழுத்தியவுடன் கடிதத்தை இதுதான் தன் வசம் எடுத்துக் கொள்கிறது. MTA என்பது ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம் அல்லது சாப்ட்வேர் ஏஜண்ட். உங்களுடைய கம்ப்யூட்டரிலிருந்து இமெயில் உங்கள் நண்பரின் கம்ப்யூட்டருக்கு அனுப்பப்படுகையில் பல கம்ப்யூட்டர்களை, சர்வர்களை அது தங்கி தாண்டிச் செல்கிறது. இந்த பயணத்தை இந்த MTAதான் கவனித்துக் கொள்கிறது. இது Mail Submission Agent மற்றும் Mail User Agent என்பவற்றுடன் இணைந்து செயல்படுகிறது.
ஒவ்வொரு நாளும் நீங்கள் தயார் செய்திடும் இமெயில்களை வகைப்படுத்தி அனுப்புவது இதுதான். இமெயில்கள் வகைப்படுத்தப் பட்டவுடன் அவற்றிற்கு ஒரு ஹெடர் கொடுத்து Mail Delivery Agent (MDA)க்கு அனுப்புகிறது. இந்த இமெயில்கள் அனைத்தும் சரியாக உரிய கம்ப்யூட்டருக்குச் செல்கின்றனவா என்பதனை இந்த Mail Delivery Agentதான் பார்த்துக்
கொள்கிறது.

1.அடுத்தடுத்து வேகமாக டைப் செய்கையில் தொடர்ந்து இருக்கும் கீகள் இணைந்து ஜாம் ஆகி நின்றுவிடக் கூடாது என்பதால் தான், கம்ப்யூட்டர் கீ போர்டாக குவெர்ட்டி கீ போர்டு எடுத்துக் கொள்ளப்பட்டது.
2. இணைய இணைப்பின் வேகம் 8Mb/sec என்று சொன்னால், அது விநாடிக்கு 8 மெகா பிட்ஸ் என்று பொருள். மெகா பைட்ஸ் அல்ல.
3.பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றின் முதலுதவிப் பெட்டியில் எமர்ஜென்ஸி பூட் சிடி அல்லது பிளாஷ் ட்ரைவ் இருக்க வேண்டும்.
4.லேப்டாப்பின் பேட்டரி திறனை நீண்ட நாள் பாதுகாப்பாகப் பெற, திரையின் வெளிச்சத்தைக் குறைப்பது நல்லது.
5.விண்டோஸ் எக்ஸ்பியின் திரைத் தோற்றத்தில் மாற்றப்படா நிலையில் மிகப் பெரிய பச்சைப் புல்வெளி மேடும், பின்னணியில் மலையும் உள்ளதல்லவா? இதனை விண்டோஸ் பிளிஸ் (Bliss) எனப் பெயரிட்டுள்ளது. இந்த அழகான காட்சியைப் போட்டோவாக எடுத்தவர் பெயர் சார்ல்ஸ் ஓ ரியர் (Charles O’Rear). கலிபோர்னியாவில் சொனாமா கவுண்ட்டி என்ற இடத்தில் இந்த போட்டோ எடுக்கப்பட்டது. இதனைப் பின்னர் மைக்ரோசாப்ட் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி, தன் எக்ஸ்பி சிஸ்டத்தில் மாறா நிலையில் உள்ள டெஸ்க்டாப் இமேஜாகப் பயன்படுத்தியது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கார்த்திக் - மதுரை,இந்தியா
05-ஜூலை-201213:06:47 IST Report Abuse
கார்த்திக் மிகவும் பயனுள்ளதாக கருதவில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X