டேப்ளட் பி.சி. வகைகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2012
00:00

சென்ற இதழில் மைக்ரோசாப்ட் வழங்க இருக்கும் டேப்ளட் பி.சி. குறித்து வெளியான தகவல்களை த் தொடர்ந்து பல வாசகர்கள் அது குறித்து பல கேள்விகளை அனுப்பி உள்ளனர். இன்னும் சிலர் டேப்ளட் பி.சி. என்பது என்ன? அதில் பல வகைகள் உள்ளனவா என்று கேட்டும் கடிதங்களை அனுப்பி உள்ளனர். அந்த கேள்விகளுக்கான தகவல்களை இங்கு பார்க்கலாம்.
தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் இந்நாளில் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடிய கம்ப்யூட்டர் (Mobile computing) என்பது நம் வாழ்வின் அன்றாடத் தேவையாய் ஆகிவிட்டது. லேப்டாப் கம்ப்யூட்டர், பெர்சனல் டிஜிட்டல் அசிஸ்டன்ட் (PDA) மற்றும் பிற டிஜிட்டல் தொடர்பு சாதனங்கள் இன்றைய வர்த்தகத்தை நடத்துபவர்களுக்கும், அலுவலர்களுக்கும் அலுவலகத்தில் மட்டுமின்றி, அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பயன்படுத்தும் சாதனங்களாகி விட்டன. இதனால், சில ஆண்டுகளுக்கு முன்னர் நாம் கற்பனையில் கூட எண்ணிப் பார்த்திராத சாதனங்கள் தற்போது கிடைத்து வருகின்றன. அவற்றில் ஒன்று டேப்ளட் பி.சி.
டேப்ளட் பிசி என்பது சிறிய மாற்றத்துடன் வந்துள்ள ஒரு லேப்டாப் கம்ப்யூட்டர். லேப்டாப் கம்ப்யூட்டருடன் நாம் தொடர்பு கொள்ள கீ போர்ட் அல்லது டச் பேட் பயன்படுத்தி வருகிறோம்.
ஆனால் டேப்ளட் பிசியில் புதிய வகை டச் ஸ்கிரீன் அல்லது சில வேளைகளில் ஸ்டைலஸ் பயன்படுத்தி நம் செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். லேப்டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும் மிக எளிதாக நாம் ஒரு டேப்ளட் பிசியை எடுத்துச் செல்ல முடியும்.
ஏனென்றால், இங்கு கீ போர்ட், மவுஸ் அல்லது மடக்கி வைக்கும் மானிட்டர் ஆகியன இல்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு டேப்ளட் பிசியில், மானிட்டரின் உள்ளாகக் கம்ப்யூட்டர் அமைக்கப்பட்டுள்ளது.
டேப்ளட் பிசியில் நான்கு வகையான மாடல்கள் உள்ளன. அவை “booklet”, “slate”, “convertible” மற்றும் “hybrid” ஆகும். தொழில் நுட்பமும் தேவைகளும் வளரும் இந்நாளில் இன்னும் சில மாடல்கள் வெளிவரலாம்.
1.புக்லெட் டேப்ளட்: புக்லெட் டேப்ளட் பிசி ஒரு புத்தகம் போல இருபுறமும் விரியும். இரு புறங்களிலும் திரை இருக்கும். இரண்டு திரைகளிலும் டச் ஸ்கிரீன் செயல்பாடு கிடைக்கும். கூடுதலாக ஸ்டைலஸ் பென் தரப்பட்டிருக்கும். இந்த திரையில் எழுதப்படுபவற்றை அறிந்து கொண்டு செயல்படும் சாப்ட்வேர் (pen writing recognition software) இதில் கட்டாயம் இடம் பெறும். ஒரு பேப்பரில் எழுதுவது போல ஸ்கிரீனில் எழுதினால், கம்ப்யூட்டர் அதனை கட்டளையாக ஏற்றுச் செயல்படும். இதனை மடக்கி வைத்துப் பின் விரித்து பயன்படுத்தலாம். ஒவ்வொரு பக்கம் உள்ள திரையிலும், ஒரு அப்ளிகேஷனை இயக்கலாம். நூல்களைப் படிக்கலாம்; இன்டர்நெட் உலா வரலாம்; மியூசிக் மற்றும் பிற ஊடகங்களை இயக்கலாம்.
2. ஸ்லேட் டேப்ளட் : ஒரு சிறிய தட்டையான டிவியைத் தூக்கிச் செல்வது போல ஸ்லேட் டேப்ளட் பிசி இருக்கும். இதிலும் கீ போர்ட் இருக்காது. ஸ்டைலஸ் அல்லது டச் ஸ்கிரீன் பயன்படுத்தியே டெக்ஸ்ட் மற்றும் கட்டளை அமைத்து செயல்படுத்த வேண்டும். ஆனால் வயர்லெஸ் கீ போர்ட் அல்லது யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்துப் பயன்படுத்தும் கீ போர்டினை இசைவாக இதனுடன் பயன்படுத்தலாம். கீ போர்ட் இல்லாததினால், மிகவும் சிறியதாக எளிதாகப் பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் இந்த வகையினைச் சார்ந்தது.
3. கன்வர்டபிள் டேப்ளட்: டச் ஸ்கிரீன் தொழில் நுட்பத்துடன், கீ போர்டு செயல்பாட்டினையும் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு கன்வர்டபிள் டேப்ளட் பிசிக்கள் உதவியாய் இருக்கும். இதனை மூடி வைத்திருக்கையில், ஒரு லேப்டாப் கம்ப்யூட்டர் போலவே தோற்றம் அளிக்கும். ஆனால், திறந்தவுடன், 180 டிகிரி கோணத்தில் திரும்பும் வகையில் இதன் திரை காணப்படும். வழக்கமான நோட்புக் கம்ப்யூட்டர் போல இதனைச் செயல்படுத்தலாம்.
4. ஹைப்ரிட் டேப்ளட்: ஸ்லேட் மற்றும் கன்வர்டபிள் டேப்ளட் பிசிக்கள் இணைத்து உருவானது போல இது உருவாக்கப்பட்டுள்ளது. இதனுடைய மானிட்டரை மட்டும் பயன்படுத்தி இதனை ஒரு ஸ்லேட் கம்ப்யூட்டர் போல பயன்படுத்தலாம். அல்லது கீ போர்டினை இணைத்தும் பயன்படுத்தலாம். இவற்றைக் கழற்றியும் வைத்துக் கொள்ளலாம். ஸ்டைலஸ் பென் மற்றும் டச் ஸ்கிரீன் வசதிகளும் இதில் உண்டு.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X