கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2012
00:00

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் அமைக்கப்படும் சொற்களில், எழுத்துக்களுக்கிடையே உள்ள இடவெளியைச் சுருக்கி, அவற்றை நெருக்கமாக அமைக்க முடியுமா? வழி காட்டவும்.
சி. ஆறுமுகம், தேனி.
பதில்: முடியும். இந்த செயல்பாட்டினைத் தொழில் நுட்ப ரீதியாக “smushing” எனச் சொல்வார்கள். இது “smashing” மற்றும் “pushing. என்ற இரண்டு சொற்களின் இணைப்பாகும். பொதுவாக இதனை நாம் அடிக்கடி மேற்கொள்வதில்லை என்பதால், இதற்கான வழியை நாம் அறிந்திருப்பதில்லை. முதலில் எழுத்துக்களுக்கிடையே உள்ள இடவெளியைச் சுருக்க வேண்டிய டெக்ஸ்ட்டை தேர்ந்தெடுக்கவும். பின்னர், பாண்ட் டயலாக் பாக்ஸ் பெற வேண்டும். வேர்ட் 2003 / 2007 பயன்படுத்துபவர்கள்,
Format மெனு கிளிக் செய்து அதில் Font தேர்ந்தெடுக்கவும். அல்லது நேரடியாக Ctrl+D அழுத்தவும். இப்போது பாண்ட் மெனு கிடைக்கும். இதில் கிடைக்கும் மூன்று டேப்களில், Character Spacing என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Spacing என்று இருக்கும் இடத்தில் கிடைக்கும் பாக்ஸில் உள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியினை கிளிக் செய்தால், கிடைக்கும் மெனுவில் Condensed என்பதனைத் தேர்ந்தெடுத்து, அருகில் சுருக்கும் அளவு எவ்வளவு இருக்கும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதற்கான Point 1, 1.1., 1.2 என இருக்கும். இதனைத் தேர்ந்தெடுத்து OK கிளிக் செய்து பார்த்தால், உங்களின் டெக்ஸ்ட்டில் உள்ள எழுத்துக்கள் எந்த அளவில் இடித்துப் பிடித்து அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியும். பின்னர், உங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றி அமைக்கலாம்.

கேள்வி: தமிழில் எழுதிய டெக்ஸ்ட்டினை வாசித்துச் சொல்லும் புரோகிராம் உள்ளதா? இலவசமாகக் கிடைக்குமா? இணைய முகவரி தரவும்.
நி. சுதானந்தன், சென்னை.
பதில்: முன்பு ஒருமுறை இது குறித்த கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது. பெங்களூர் இந்திய தேசிய அறிவியல் மையம் இது குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டு, சோதனை அளவில் வெற்றி கண்டுள்ளது. தனியே இன்னும் புரோகிராம் விலைக்கோ, இலவசமாகவோ வரவில்லை. இதனைச் சோதனை செய்து பார்க்க http://mile. ee.iisc.ernet.in:8080/tts_demo என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். இங்கு கிடைக்கும் கட்டத்தில், நீங்கள் சோதனை செய்து வாசித்துக் காட்டப்பட வேண்டிய டெக்ஸ்ட்டை யூனிகோட் தமிழில் டைப் செய்திடவும். பின்னர் கிளிக் செய்திடவும். அடுத்து Speech for your input text has been synthesized. Please click here to download the synthesized speech file என்ற செய்தி கிடைக்கும். இங்கு உங்களின் டெக்ஸ்ட் ஒலியாக மாற்றப்பட்ட பைல் இருக்கும் இடத்திற்கு லிங்க் கிடைக்கும்.
இதில் கிளிக் செய்து அந்த பைலை டவுண்லோட் செய்திடவும். பின்னர் அந்த பைலில் கிளிக் செய்து இயக்கினால், டெக்ஸ்ட் வாசிக்கப்படுவதனைக் கேட்கலாம். குரல் தமிழ் கற்றுக் கொள்ளும் வெளிநாட்டுக்காரர் தமிழ் படிப்பதனைப் போல் இருக்கும். இருப்பினும் இந்த முயற்சி போற்றத்தக்கதே.

கேள்வி: என் விண்டோஸ் எக்ஸ்பி ஸ்டார்ட் நெட்டு வரிசை மிக நீளமாக உள்ளது. இதனை இரு கட்டங்களாக வைத்துக் கொள்ள முடியுமா?
பதில்: முடியும். முதலில் டாஸ்க் பாரில் உள்ள காலி இடம் ஒன்றில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது Taskbar and Start Menu Properties என்ற பாக்ஸ் கிடைக்கும். இதில் இரண்டு டேப்கள் இருப்பதைக் காணலாம். இவற்றில் Start Menu என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து ஸ்டார்ட் மெனு என்பதன் அருகே உள்ள சிறிய பட்டனைக் கிளிக் செய்திடவும். அடுத்து Customize என்பதைக் கிளிக் செய்திடவும். இப்போது இன்னொரு பாக்ஸ் இரண்டு டேப்களுடன் கிடைக்கும். இதில் Advanced என்பதில் கிளிக் செய்திடவும். இந்த பாக்ஸின் நடுவே Start menu இடம் பெற்றுள்ளவை இடம்பெற்றிருக்கும். இதில் கீழாக Scroll Programs என்பதனைக் காணும் வரை செல்லவும். உங்களுக்கு ஒரு நெட்டு வரிசையில் புரோகிராம்கள் வேண்டும் எனில், இந்த பாக்ஸில் ஒரு டிக் அடையாளத்தினை அமைக்கவும். இரண்டு வரிசையில் காட்டப்பட வேண்டும் எனில், பாக்ஸில் டிக் அடையாளம் இருக்கக்கூடாது. மீண்டும் கிடைக்கும் Start Menu Properties பாக்ஸில் Apply என்பதில் கிளிக் செய்து, பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி உங்கள் ஸ்டார்ட் மெனு புரோகிராம்கள், ஒரு நெட்டு வரிசைக்குப் பதிலாக, இரண்டு அல்லது மூன்று நெட்டு வரிசைகளில் கிடைக்கும்.

கேள்வி: பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கியுள்ளேன். அதில் விண்டோஸ் 2007 சிஸ்டம் உள்ளது. இதில் யூசர் அக்கவுண்ட்டில் என் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்துவிட்டேன். ஆனால், அதில் உள்ள படத்திற்குப் பதிலாக வேறு படம் போட இயலவில்லை. என் போட்டோவினை வைக்க முடியுமா? என்ன வழி?
என். கந்தவேல், மதுரை.
பதில்: எளிதாக மாற்றிவிடலாம், கந்தவேல். முதலில் ஸ்டார்ட், கண்ட்ரோல் பேனல் எனச் சென்று, “User Accounts and Family Safety” என்பதில் கிளிக் செய்திடுங்கள். இதன் பின்னர், “Change Your Account Picture” என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இந்த இடத்தில் படங்கள் அடங்கிய திரை காட்டப்படும். இதில் ஒன்று உங்களுக்குப் பிடித்திருந்தால், அதிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து “Change Picture” என்பதில் கிளிக் செய்திடலாம். அல்லது உங்கள் படத்தை வைத்திட விரும்பினால், “Browse for more pictures…” என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்து, பின்னர் ஹார்ட் ட்ரைவில் பிரவுஸ் செய்து, தாங்கள் விரும்பும் பட பைலில் டபுள் கிளிக் செய்து ஓகே செய்திடலாம். இதற்கு உங்கள் போட்டோ பைல் குறைந்த அளவுள்ளதாக ஏற்கனவே தயார் செய்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டத்தில், புதிய போல்டர்களை உருவாக்க ஷார்ட் கட் கீ எது?
சி.பரந்தாமன், திருப்பூர்.
பதில்: எங்கு புதிய போல்டரை உருவாக்க வேண்டுமோ, அங்கு செல்லவும். பின் கண்ட்ரோல் + ஷிப்ட் + என் கீகளை அழுத்தவும். புதிய போல்டர் உருவாகும். அதற்குப் பெயர் ஒன்று சூட்டவேண்டுவதுதான் உங்களின் வேலை.இந்த ஷார்ட் கட் கீயைப் பயன்படுத்தி, டெஸ்க்டாப்பிலும் போல்டரை உருவாக்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அப்துல் ரஹ்மான் ஹாரிஸ் - சென்னை,இந்தியா
07-ஜூலை-201208:50:13 IST Report Abuse
அப்துல் ரஹ்மான் ஹாரிஸ் ஒரு சாங்ல இருந்து வாய்ஸ் தனியா மியூசிக் தனியா பிரிக்க எதாவது பெஸ்ட் ப்ரீ சாப்ட்வேர் இருந்தா சொல்லுங்க ப்ளீஸ்.
Rate this:
Share this comment
Cancel
mohan - cotonou,பெனின்
06-ஜூலை-201219:25:56 IST Report Abuse
mohan ஆக்ஸ்போர்ட் dictionary யின் அடுத்த பதிப்பு அடுத்த ஆண்டு எந்த மாதத்தில் வெளி வருகிறது ? விலை எவ்வளவு ?
Rate this:
Share this comment
Cancel
அப்துல் ரஹ்மான் ஹாரிஸ் - சென்னை,இந்தியா
05-ஜூலை-201212:04:24 IST Report Abuse
அப்துல் ரஹ்மான் ஹாரிஸ் கேள்வி பதில் தலைப்பில் கேள்விகளை எதில் அல்லது ஏந்த இடத்தில கேட்க வேண்டும். எதாவது மெயில் அல்லது போன் நம்பர் இருக்கா? சொல்லுங்க ப்ளீஸ். என்கிட்ட அதிக கேள்விகள் இருக்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X