பயனுள்ள இணையதளங்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2012
00:00

இணைய தளங்களின் முகவரிகளை மட்டுமாவது ஒவ்வொரு இதழிலும் அதிக எண்ணிக்கையில் தருமாறு வாசகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் கடிதத்தில் வேண்டுகோளுக்கான நோக்கங்களை வெவ்வேறாகக் கொண்டுள்ளனர். ஒரு சில வாசகர்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில் சில இணைய தளங்கள் பற்றிய குறிப்பு இங்கே சிறிய அளவில் தரப்படுகிறது. இந்த தளங்கள் அனைவருக்கும் பல விதங்களில் பயன்தரும் தளங்களாகும்.
www.photonhead.com டிஜிட்டல் கேமரா வாங்கிப் பயன்படுத்தாத வாசகர்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம். எளிதாக சிறுவர்கள் கூட இவற்றைக் கையாளத் தொடங்கிவிட்டனர். ஆனால் முழுமையாக அதன் வசதிகளைப் பயன்படுத்துகின்றனரா என்றால், இல்லை என்றே கூற வேண்டும். டிஜிட்டல் கேமராவின் வசதிகள் என்ன? எதனைப் பயன்படுத்தினால் என்ன கிடைக்கும் என்று விலாவாரியாகத் தரும் தளம் இது. அபெர்ச்சர், ஸ்பீட், ரெட் ஐ எனப் பல விஷயங்கள் குறித்து இங்கு தகவல்கள் தரப்படுகின்றன. குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பது போன்ற பல டுடோரியல்கள் உள்ளன. சிமுலேட்டர் முறையில் ஒரு கேமரா ஆன்லைனிலேயே தரப்பட்டு எப்படி இயக்குவது என்பதைச் சொல்லிக் கொடுக்கிறது. ஆனால் கொஞ்சம் பழமையானது போல சில விஷயங்கள் இருக்கின்றன. நவீன தொழில் நுட்பம் தான் எனக்கு வேண்டும் என எண்ணுபவர்கள் www.slrgear.com என்ற தளத்திற்குச் செல்லலாம்.
www.stopbadware.org இது பக்கத்துவீட்டு காவல்காரன் போல செயல்படுகிறது. ஏதேனும் மோசமான விளைவுகளைத் தருவதற்கென்றே உருவாக்கப்படும் தளங்கள் குறித்த தகவல்களைத் தருகிறது. இது போன்ற தளங்களால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் தகவல்களைத் திரட்டி அவற்றின் அடிப்படையில் மோசமான தளங்கள் மற்றும் புரோகிராம்களின் பட்டியலை அளிக்கிறது.
www.gmailtips.com: கூகுள் மெயில்பயன்படுத்துபவர்களுக்கான தகவல் களஞ்சியம். அதிகமான எண்ணிக்கையில் குறிப்புகள்,டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் தரப்பட்டுள்ளன.
www.quotedb.com நீங்கள் சிறந்த பேச்சாளர் ஆக வேண்டுமா? உங்கள் உரை வீச்சுகளில் அடிக்கடி பல பெரிய அறிஞர்கள் மற்றும் பெரிய தலைவர்களின் கூற்றுக்களை கோடிட்டுக் காட்ட வேண்டுமா? அப்படியானால் அதற்கான சிறந்த தளம் இதுதான். 60 வகை பொருள்களில் ஏறத்தாழ 4,000 புகழ் பெற்ற மேற்கோள் உரைகள் உள்ளன.
சிறந்த பேராசிரியராக, மாணவர்களிடத்தில் நற்பெயர் விரும்பும் ஆசிரியர்களுக்கும் இது உகந்த தளம்.
www.techcrunch.com இன்டர்நெட் வெப்சைட் குறித்த செய்திகள் மற்றும் ஆய்வுகள் குறித்த தகவல்களைத் தருகிறது. குறிப்பாக வெப்2.0 குறித்த அண்மைக் காலத்திய செய்திகள் ஏராளம்.
www.tweakguides.com உங்கள் சிஸ்டத்தை ட்யூன் செய்து அதன் திறனை அதிகப்படுத்த வேண்டுமா? இதுதான் நீங்கள் செல்ல வேண்டிய தளம். விளையாட்டுகள், பிரவுசர்கள், டிரைவர்கள் என அனைத்தையும் இந்த தளம் மூலம் மேம்படுத்தி கம்ப்யூட்டர் இயக்கத்தை புதுப்பிக்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.Venkatesan - Bareilly,இந்தியா
14-ஜூலை-201211:10:19 IST Report Abuse
M.Venkatesan அருமையான பதிவு .அடிக்கடி இது மாதிரியான பதிவுகளை வெளியிடவும்.நன்றி.
Rate this:
Share this comment
Cancel
KANNAN - missouricity,யூ.எஸ்.ஏ
12-ஜூலை-201222:22:43 IST Report Abuse
KANNAN The detailed information relevant to computer application will benefit in the long run.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X