கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2012
00:00

கேள்வி: 2014க்குப் பின் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துவது பாதுகாப்பானது இல்லையா? விண்டோஸ் 7 பதிந்து இயக்க, ஹார்ட்வேர் செலவு அதிகம் ஆகும் போல் தெரிகிறதே?
சி. சாமுவேல் ரிச்சர்ட், ராஜபாளையம்.
பதில்: பலரின் மனதில் இந்த சந்தேகம் தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டேயுள்ளது. இதன் பல்வேறு அம்சங்கள் குறித்து கம்ப்யூட்டர் மலரில் ஏற்கனவே எழுதி உள்ளேன். அண்மையில் மதுரை அருகே உள்ள பொறியியல் கல்லூரி சென்ற போது, அங்கு கம்ப்யூட்டர் அறிவியல் பயின்று கொண்டிருக்கும் மாணவர் சொன்ன கருத்து சற்று மாறுபாடாக இருந்தது. அதனை அப்
படியே தருகிறேன். மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பிக்கு சப்போர்ட் தருவதை நிறுத்திய பின்னரும், அதாவது 2014க்குப் பின்னரும், அதனைப் பயன்படுத்தலாம். ஏறத்தாழ 12 ஆண்டுகளாக மைக்ரோசாப்ட் வழங்கிய பேட்ச் பைல்கள் நிச்சயம் கூடுதல் பாதுகாப்புடன் கூடிய ஓர் நிலையை எக்ஸ்பிக்குத் தரும். மேலும் மால்வேர் இயக்கம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேட் ஆவதைக் காட்டிலும் வேகமாக மாறிக் கொண்டு வருகிறது. எனவே மால்வேர் தயாரிப்பவர்கள் யாரும், ஒரு சிலர் பயன்படுத்தும், பழைய, மிகப் பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தாக்கும் வகையில் தயாரிக்க மாட்டார்கள்.
புதிய சிஸ்டத்திற்கு மாறுவதற்கு கூடுதலாகப் பணம் தேவைப்படும் என்பது உண்மை. முதலீடு செய்வது சிக்கலாக இருந்தால், எக்ஸ்பியே தொடர்ந்து பயன்படுத்தலாம். இல்லையேல் புதிய சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ளலாம். மேலும் எக்ஸ்பியில் இயங்கும் புரோகிராம்களை விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயக்கலாம். இது குறித்து அறிய மைக்ரோசாப்ட்டின் தளத்தை அணுகவும்.

கேள்வி: என் டெஸ்க்டாப்பில் உள்ள ஐகான்கள் சிறியதாகக் காட்சி அளிக்கின்றன. கண்ணாடி அணிந்து செயல்படும் எனக்கு, கண்ணாடி இல்லாத வேளைகளில் சற்று சிரமமாக உள்ளது. இதனை இன்னும் சற்றுப் பெரிதாக அமைக்க முடியுமா? பழைய 15 அங்குல மானிட்டர் வைத்திருக்கிறேன். விண்டோஸ் எக்ஸ்பி என் கம்ப்யூட்டரில் செயல்படுகிறது.
டி. ஆராவமுதன், ஓய்வு பெற்ற ஆசிரியர், ஸ்ரீரங்கம்.
பதில்: ஐகான்களைச் சற்றுப் பெரிதாக மாற்றலம். கீழே கொடுத்துள்ளபடி செயல்படவும். டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Appearance என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Advanced என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். Item என்பதன் கீழ் கிடைக்கும் பட்டியலில் Icon என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Size என்ற இடத்தில் கிடைக்கும் அம்புக் குறிகளைப் பயன்படுத்தி, ஐகான்களின் அளவைப் பெரிதாகவோ, சிறியதாகவோ அமைக்கலாம்.
மாற்றங்களை ஏற்படுத்தியபின் Apply என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் விரும்பினால், உங்கள் வசதிக்காக இன்னொரு மாற்றத்தினையும் ஏற்படுத்தலாம். ஐகான்கள் திரைக்காட்சியில் நெருக்கமாகத் தோன்றினால், அவற்றிற்கிடையே உள்ள இடைவெளியை அதிகமாக்கலாம்.
Item என்பதன் கீழ் இரண்டு ஆப்ஷன்கள், Icon Spacing (Horizontal) மற்றும் Icon Spacing (Vertical), இருப்பதனைப் பார்க்கலாம். இவற்றைப் பயன்படுத்தி, ஐகான்கள் அமையும் இட வெளியை அமைக்கலாம்.
இதுவே உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 ஆக இருந்தால், மானிட்டரில் மவுஸ் இருக்கையில், கன்ட்ரோல் கீயை அழுத்தியவாறு, ஸ்குரோல் வீலைச் சுழற்றினால், ஐகான்கள் பெரியதாக மாறுவதனைக் காணலாம். எதிர்த் திசையில் சுழற்றினால், சிறியதாக மாறும்.

கேள்வி: கம்ப்யூட்டரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும்போதே திடீரென ஹார்ட் டிஸ்க்கில் இடம் மிகவும் குறைவாக இருப்பதாகச் செய்தி வருகிறது. பைல்களை நீக்கலாமா? என்றும் கேட்கப்படுகிறது. இடம் குறைவாக இருப்பதனை முன் கூட்டியே எப்படி அறிவது?
க. உமாராணி, தேவாரம்.
பதில்: எளிதாக அறியலாம். ஸ்டார்ட் அழுத்தி மை கம்ப்யூட்டர் அழுத்துங்கள். அல்லது டெஸ்க் டாப் விண்டோவில், மை கம்ப்யூட்டர் ஐகான் மீது டபுள் கிளிக் செய்திடவும். உடன் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து டிரைவ்களுக்கான ஐகான்கள் கிடைக்கும். இதில் நீங்கள் எந்த டிரைவிற்கு செக் செய்திட விரும்புகிறீர்களோ, அதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். அப்போது மெனு ஒன்று கிடைக்கும். இந்த மெனுவில் இறுதியாகக் கிடைக்கும் ப்ராபர்ட்டீஸ் பிரிவினைத் தேர்ந்தெடுத்தால் உடன் டிஸ்க் ஸ்பேஸ் குறித்து வட்ட வடிவில் ஒரு சார்ட் கிடைக்கும். இதில் ஏற்கனவே பயன்படுத்திய அளவு, மற்றும் இன்னும் பயன்படுத்தக் கூடிய அளவு நீலம் மற்றும் சிகப்பு வண்ணங்களில் கிடைக்கும். படத்திற்கும் மேலாக அளவுகளில் தரப்பட்டிருக்கும். அதற்கும் மேலாக அந்த டிரைவில் என்ன வகை பைல்கள் உள்ளன என்று காட்டப்பட்டிருக்கும். டிரைவின் மொத்த கொள்ளளவும் தரப்பட்டிருக்கும்.

கேள்வி: விண்டோஸ் 8 இயக்கத்தில் ஸ்டார்ட் பட்டனை எடுத்தது, மைக்ரோசாப்ட் தன் குழந்தையை தானே மறைப்பது போல் ஆகாதா?
சி. தர்ம பிரகாஷ், கோவை.
பதில்: நல்லாத்தான் கேள்வி கேட்கிறீர்கள். உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஸ்டார்ட் பட்டனைக் கொலை செய்தது மக்கள் தான். என்ன விழிக்கிறீர்களா? மேலே படியுங்கள். சற்று நிதானமாக, நீங்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துவதில் எத்தனை முறை ஸ்டார்ட் பட்டன் பயன்படுத்துகிறீர்கள்? அதிகம் இல்லை, அல்லவா? விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்களின் பழக்க வழக்கங்களை ஆய்வு செய்த பின்னர், மைக்ரோசாப்ட் இந்த முடிவிற்கு வந்தது. டாஸ்க் பாரில் தாங்கள் பயன்படுத்தும் புரோகிராம்களை பின் செய்து பயன்படுத்துவதனையே பலரும் மேற்கொண்டனர்.
ஸ்டார் பட்டன் கிளிக் செய்வது எப்போதாவது தான் நடைபெறுகிறது. எனவே தான் மைக்ரோசாப்ட், விண்டோஸ் 8ல் ஸ்டார்ட் எடுத்துவிட்டு, மெட்ரோ ஸ்கிரீன் தந்துள்ளது. இந்த தகவலை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன் மை புரோகிராம் நிர்வாகி சைதன்ய ஷரீன் தெரிவித்துள்ளார். மக்கள் புரோகிராம்களைத் திறக்க ஸ்டார்ட் பட்டனைக் கிளிக் செய்திடாமல், ஷார்ட் கட் கீகளையே பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி: மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், நம் நாட்டில் இன்டர்நெட் கட்டணம் அதிகமானதா?
சா. ரமேஷ்குமார், தென்காசி.
பதில்: வளர்ந்த நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள் என எந்த நாட்டுடன் ஒப்பிட்டாலும், நம் நாட்டில் கட்டணம் அதிகம் தான். ஒப்பிடுவதை விடுங்கள். இந்த மாதம் முதல் இன்டர்நெட் கட்டணம் இன்னும் அதிகரிக்கப்படலாம். ஜூலை 1 முதல், இன்டர்நெட் சர்வீஸ் வழங்கும் நிறுவனங்களிடம், 4% லைசன்ஸ் கட்டணம் விதிக்க டெலிகாம் கமிஷன் முடிவெடுத்துள்ளது.
இது வரும் ஏப்ரல் மாதத்தில் இரு மடங்காக உயர்த்தப்படுமாம். இந்நிறுவனங்களின் மொத்த வருமானத்தில் 8% வரியாக விதிக்க சட்ட வரைமுறை தயாராகியுள்ளது. இந்த வரி விதிப்பு, டயல் அப் மற்றும் பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு பயன்படுத்துவோரின் மாதாந்திர பில்களில் இனி காட்டப்படும். ஆனால், ட்ராய் இதனை 6% ஆக விதிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எது எப்படி இருந்தாலும், மிகக் குறைந்த கட்டணத்தில் கிடைக்க வேண்டிய இன்டர்நெட் இணைப்பு இனி சற்று கூடுதலான கட்டணத்தில் இருக்கப் போகிறது.

கேள்வி: நமக்கு வரும் இமெயில்களுக்கு, ஆட்டோமடிக் ஆக பதில் அனுப்ப முடியுமா? எப்படி தயார் செய்வது?
சி. ஜான் பிரின்ஸ், திருப்பூர்.
பதில்: இதனை Auto Responder என அழைக்கின்றனர். நீங்கள் தயாரிக்கும் ரெடிமேட் பதிலை அனுப்பும் புரோகிராம் இது. உங்கள் இமெயில் முகவரிக்கு வரும் கடிதங்களுக்குத் தானாக இதன் மூலம் பதில் அனுப்பலாம். இன்டர்நெட் சேவை தரும் நிறுவனங்களும் இமெயில் கிளையன்ட் புரோகிராம்களும் இந்த வசதியை வைத்திருக்கின்றன. நீங்கள் பயன்படுத்தும் இமெயில் கிளையண்ட் புரோகிராமில் இதற்கான வழிமுறைகள் தரப்பட்டிருக்கும்.

கேள்வி: அடிக்கடி யூசர் இன்டர்பேஸ் அல்லது பயனாளர் இடைமுகம் என எழுதுகிறீர்கள். இது எதனைக் குறிக்கிறது? விண்டோஸ் எக்ஸ்புளோரர் வசதியையா?
சி. கவின்ராஜ், கோவை.
பதில்: விண்டோஸ் எக்ஸ்புளோரர் யூசர் இன்டர்பேஸ் இல்லை. நீங்கள் புதிய புரோகிராம் ஒன்றைப் பயன்படுத்துகிறீர்களா? அப்போது யூசர் இன்டர்பேஸ் ஒன்றைப் பயன்படுத்துகிறீர்கள். கம்ப்யூட்டரில் உள்ள ஒரு புரோகிராம் அல்லது சாதனத்துடன் உங்களை இணைப்பதுதான் யூசர் இன்டர்பேஸ். உங்களை எளிதாக வழி நடத்தி, புரோகிராமின் தன்மை மற்றும் வசதிகளைக் காட்டுவதே யூசர் இன்டர்பேஸ். இது எந்த அளவிற்கு உங்கள் பயன்பாட்டினை எளிமையாக்குகிறதோ, அந்த அளவிற்கு அந்த யூசர் இன்டர்பேஸ் சிறந்ததாகும். இதில் சில வகைகளும் உண்டு. கிராபிகல் இன்டர்பேஸ், வெப் அடிப்படையிலான இன்டர்பேஸ், கட்டளை வரிகளில் செயல்படும் இன்டர்பேஸ் எனப் பல வகைகள் உண்டு. புரோகிராம் ஒன்றில் புதிய இன்டர்பேஸ் ஒன்றைப் பயன்படுத்துகையில் முதலில் சற்று புதியதாக, தயக்கமாக இருக்கும். அடிக்கடி பயன்படுத்திய பின்னர், அதுவே பழகிப் போய்விடும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAJARAM - trichy,இந்தியா
12-ஜூலை-201210:58:44 IST Report Abuse
RAJARAM சார் வணக்கம் , நான் விண்டோஸ் 7 அல்டிமேட் பதிப்பு உள்ள 2 சிஸ்டம் பயன்படுத்தி வருகிறேன். இந்த 2 சிஸ்டம் ஷேர் செய்ய முடியவில்லை . அதற்கான வழியை எனக்கு கம்ப்யூட்டர் மலரில் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி !!!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X