அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 ஆக
2010
00:00

*வி.சாமுவேல் ராஜன், சென்னை: பணம் கடன் கொடுத்தால்தான் திரும்பி வராது. புத்தகங்கள் கடன் கொடுத்தாலும், திரும்பி வருவது இல்லையே...
*கடன் கொடுக்கக் கூடாதது மூன்று! பணம் - புத்தகம் - "சி.டி!' தட்ட முடியாது எனும் பட்சத்தில், "அன்பளிப்பாக' கொடுத்து விடுங்கள். திரும்ப எதிர்பார்த்து, மனக்கசப்பையும், பிரச்னையையும் வளர்த்துக் கொள்ளாதீர்கள்!
***
* ஆர்.விமலா, கோவை: தங்களுடைய சொந்தப் பிரச்னைகளுக்கு அறிவுரை கேட்டு வரும் கடிதங்களுக்கு நீர் முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?
*பிரச்னையின் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் அக்கேள்விகளை தேர்வு செய்கிறேன். காரணம், இதே பிரச்னை பல வாசகர்களுக்கும் இருக்கலாம். அவர்களுக்கும் பயன் தரட்டுமே என்ற நோக்கம்தான்!
***
* துரை.ராகவன், சென்னை: கடன் இல்லாமல் வாழ்க்கை நடத்த கணவனுக்கு பொறுப்பு வேண்டுமா? மனைவிக்கும் தேவையா?
*சம்பாத்தியம் முழுவதையும் மனைவியிடம் கொடுத்து, செலவு பொறுப்பையும் அவ்விடமே கொடுக்கும் ஆசாமிகளின் மனைவியருக்கு கண்டிப்பாக அதிக பொறுப்பு தேவை. அவ்விடம் பொறுப்பு சற்று கம்மி என்றால், சம்பாதிப்பவரே லகானை பிடித்துக் கொள்வது உத்தமம்!
***
* கே.ஏஞ்சலின் கரோலினா, சென்னை: பெருகி வரும், "கம்ப்யூட்டர் ஆதிக்கம்' குறித்து என்ன சொல்கிறீர்கள்?
*முன்னேற்ற பாதையில் நாட்டை அழைத்துச் செல்ல மற்றொரு படிக்கல்.
***
* எஸ்.பக்கிரிசாமி, திருவாரூர்: ஆண்களிடம், பெண்களுக்கு ஒரு பயபக்தி இல்லாமல் போய்விட்டதே...
* அப்போ, பெண்களுக்கு சம உரிமை வேகமா கிடைச்சிக்கிட்டு இருக்குன்னு சொல்லுங்க...
***
* அ.பா.சாய்ரிஷி, பசுமலை: "மூஞ்சப் பாரு... விளக்குமாத்தாலே ரெண்டு சாத்து சாத்த...' என்று, ஒரு பெண், நான் தனியாக தெருவில் செல்லும் போது திட்டுகிறார். இந்த, "வர்ணனை' வார்த்தைகளை எப்படி எடுத்துக் கொள்ள...
*உம் மீது அந்த அம்மணிக்கு ஒரு, "பிடிப்பு' ஏற்பட்டு போச்சுன்னு நினைக்கிறேன். "மோதலில் ஆரம்பித்து, காதலில் முடியும்...' என்பரே... (விளக்குமாத்து சாத்து கிடைத்தால் நான் பொறுப்பல்ல...)
***
* பி.எஸ்.பாலு, திருப்பூர்: சில சமயங்களில் நம்மை அறியாமலேயே மற்றவர் மனதை வார்த்தைகளால் புண்படுத்தி விடுகிறோம். இதற்கு என்ன தண்டனை?
*புண்படுத்திவிட்டதை உணர்ந்து வருந்துவதே தண்டனைதான். இப்படிப்பட்ட மனம் இருக்கும்போது, புண்பட்டவரிடம் நேரடியாக மன்னிப்பு கோருவது சிறந்த மருந்தாக அமையும்!
***
* மா.ஜெயச்சந்திரன், சென்னை: அறுவைகளிடமிருந்து தப்பிப்பது எப்படி?
*தவிர்க்கக் கூடிய அறுவைகளா? தவிர்க்க முடியாத அறுவைகளா என்பதைக் கூறவில்லையே... இரண்டுக்கும் வெவ்வேறு வழிகள் உள்ளன.
***


Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.