ஸ்பைஸ் எம்.ஐ. 425
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2012
00:00

அதி நவீன மொபைல் போன் விரும்புபவர்கள் அனைவருமே, ஒரு சாம்சங் காலக்ஸி 3 அல்லது எச்.டி.சி. ஒன் எக்ஸ் மொபைல் போனை வாங்கிட முடியாது. விலை ரூ.32 ஆயிரம் என்ற அளவில், அனைவரும் இந்த போன்களை வாங்கிடத் தயக்கம் கொள்வார்கள். இவர்களின் தேவையை நிறைவேற்றவே இப்போது சில நிறுவனங்களின் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் போன்கள் வந்துள்ளன. அவற்றில் ஸ்பைஸ் நிறுவனத்தின் எம்.ஐ. 425 மொபைல் குறிப்பிடத்தக்கதாய் உள்ளது.
தோற்றத்தில் எச்.டி.சி. நிறுவனத்தின் மொபைல் போனைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் 4 அங்குல டி.எப்.டி. எல்.சி.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் நம் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இதன் ரெசல்யூசன் 480 x 800 பிக்ஸெல்கள். திரை கீழாகத் தரப்பட்டுள்ள நான்கு பேக் லிட் பட்டன்கள் இதற்கு அழகூட்டுகின்றன. இதன் பரிமாணம் 125 x63.5x12.5 மிமீ. எடை 110 கிராம்.
போனை இயக்க ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவால்காம் ஸ்நாப் ட்ரேகன் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர் ப்ரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், அப்கிரேட் செய்யப்படும் வசதியுடன் இயங்குகிறது. போன் மற்றும் செயல் நினைவகம் தலா 512 எம்.பி. தரப்பட்டுள்ளது. நினைவகத்தினை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி அளவிற்கு அதிகப்படுத்தலாம். இதில் ஜி.எஸ்.எம். சிம் இரண்டு அல்லது ஒரு ஜி.எஸ்.எம். சிம்மிற்குப் பதிலாக சி.டி.எம்.ஏ சிம் ஒன்று பயன்படுத்தும் வகையில் உள்ளது. பின்புறமாக பிக்ஸெல் திறனுடன் 5 எம்.பி. ஆட்டோ போகஸ், 3.9 எக்ஸ் டிஜிட்டல் ஸூம் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் கொண்ட கேமராவும், முன்புறமாக 0.3 எம்.பி. திறனுடன் கூடிய வி.ஜி.ஏ கேமராவும் கிடைக்கின்றன. டேட்டா நெட்வொர்க் இயங்க GPRS/EDGE/WiFi/ HSPA தொழில் நுட்பமும், நெட்வொர்க் இணைப்பிற்கு GPRS/EDGE/WiFi/Bluetooth/3G தொழில் நுட்பமும் இயங்குகின்றன. எப்.எம். ரேடியோ மற்றும் மியூசிக் பிளேயர் வழக்கம் போல் சிறப்பாக இயங்குகின்றன. 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளது.
இதன் பேட்டரியின் திறன் குறிப்பிடத்தக்கது. 2000 mAh திறன் கொண்டதாக உள்ளதால், 360 நிமிடங்கள் நேரம் தொடர்ந்து பேசும் சக்தி கிடைக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால், மின்சக்தி 192 மணி நேரம் தக்கவைக்கப்படுகிறது. சந்தையில் இதன் அதிக பட்ச விலை ரூ.9,400.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பகதூர்ஷா - BUSIA,உகான்டா
18-ஜூலை-201213:32:31 IST Report Abuse
பகதூர்ஷா சார் ANTROID சிஸ்டம்னா என்ன என்று கொஞ்சம் விளக்கமா விளக்குங்களேன். நாங்களும் தெரிஞ்சு கொள்ளலாம்லே .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X