மூன்று மாதத்தில் 5 கோடி மொபைல் போன் விற்பனை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2012
00:00

நடப்பு 2012 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், இந்தியாவில் விற்பனையான மொபைல் போன்களின் எண்ணிக்கை 5 கோடியே 2 லட்சமாக இருந்தது. சைபர் மீடியா ரிசர்ச் என்னும் அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இவற்றில் நோக்கியா நிறுவனத்தின் மொபைல் போன்கள் 23% விற்பனை செய்யப்பட்டு முதல் இடத்தைப் பிடித்தது. 14.1% பங்குடன், சாம்சங் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் மைக்ரோமாக்ஸ் 5.8% போன்களுடன் இருந்தது.
ஸ்மார்ட் போன்: ஸ்மார்ட் போன் விற்பனையில், சாம்சங் நிறுவனம் 40.4% பங்குடன் முதல் இடத்தைப் பிடித்தது. இதனை அடுத்து நோக்கியா 25.5% பங்குடன் இரண்டாவது இடத்தையும், பிளாக் பெரி போன்களை விற்பனை செய்திடும் ஆர்.ஐ.எம். நிறுவனம் 12.3% பங்குடன் மூன்றாவது இடத்தையும் கொண்டுள்ளன.
தொடர்ந்து உயர்ந்து வரும் ஸ்மார்ட் போன் விற்பனை, இந்த மூன்று மாதங்களில் 27 லட்சமாக உயர்ந்தது. சாம்சங் ஏழு புதிய ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்தது. இவற்றின் விலை ரூ.7,500 முதல் ரூ.27,000 என்ற அளவில் இருந்ததால், தொடர்ந்து இந்தப் பிரிவில் தன் முதல் இடத்தினைத் தக்க வைக்க முடிந்துள்ளது. இதில் சாம்சங் கேலக்ஸி நோட் போன்றவை கணக்கிடப்படவில்லை. இதனை டேப்ளட் பிசியாக இந்த ஆய்வு கணக்கிட்டது.
இருவகை போன்கள்: இந்திய மொபைல் சந்தையில், வாடிக்கையாளர்களின் விருப்பத்தினை வைத்துக் கணக்கிடுகையில், இரு வகையில் அவை உயர்ந்துள்ளன. அதிவேகம் மற்றும் உயர் திறன் கொண்ட ஸ்மார்ட் போன் மற்றும் மதிப்பும், கூடுதல் வசதிகளும் கொண்ட போன் என இரண்டு வகை போன்களை விரும்புகின்றனர். ஒவ்வொரு மொபைல் தயாரிப்பு நிறுவனமும், இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் மிக உறுதியாக இயங்குகின்றன. சாம்சங் போன்ற நிறுவனங்கள், இந்த இரண்டு வகையிலும் தங்கள் வளர்ச்சியைக் கொண்டுள்ளன. இதற்குக் காரணம், வாடிக்கை யாளர்களின் விருப்பங்களை ஆய்வு செய்து, அவற்றின் அடிப்படையில் தெரியவரும் முடிவுகளை நிறைவேற்றும் வகையில் மொபைல் போன்களை வடிவமைப்பதாகும்.
மோட்டாரோலா மற்றும் சோனி போன்ற நிறுவனங்கள் உயர் மதிப்பு கொண்ட மொபைல் போன் தயாரிப்பில் மட்டுமே இயங்குகின்றன. இந்த சந்தையில், இத்தகைய மொபைல் போன்களின் பங்கு 5.3% மட்டுமே. ஆனால், மொத்த விற்பனை மதிப்பில், இவற்றின் பங்கு 23.4% ஆக இருந்தது. தற்போதைய மொபைல் சந்தையில், வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனங்களிடம், தாங்கள் விரும்பும் அனைத்து வசதிகளையும் கொண்ட, பல நிலைகளிலும் விலையிடப்பட்ட மொபைல் போன்களை எதிர்பார்க்கின்றனர். அதனாலேயே, பன்னாட்டளவில் இயங்கும் நோக்கியா, ஆர்.ஐ.எம். மற்றும் இந்த சந்தையில் புதிதாக நுழைந்துள்ள மைக்ரோமேக்ஸ், கார்பன், லாவா, ஸ்பைஸ் ஆகியவை தங்கள் மாடல் போன்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி உள்ளனர். அப்போதுதான், இந்த சந்தையில் நிலையாக இயங்கி லாபம் ஈட்ட முடியும் என்பதை உணர்ந்துள்ளனர்.
டூயல் சிம் மற்றும் 3ஜி: இந்த முதல் மூன்று மாத காலத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட சிம்களை இயக்கும் மொபைல் போன்களின் விற்பனை வழக்கம் போல உயர்ந்து 67.7% ஐத் தொட்டது. ஆனால், 3ஜி போன் விற்பனை சற்று சரிவடைந்தது. தொடர்ந்து வரும் விழா காலத்தில் இதன் விற்பனை உயரலாம். சென்ற ஆண்டு விழா காலத்தில் 3ஜி போன் விற்பனை 34.3% ஆக இருந்தது. மேலும் பல நிறுவனங்கள் 3ஜி போன் கட்டணத்தைக் கணிசமாகக் குறைத்து ள்ளதால், வரும் விழா காலத்தில் இவற்றின் விற்பனை 70% உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DS - Salem,இந்தியா
16-ஜூலை-201216:31:20 IST Report Abuse
DS இன்னும் கொஞ்ச நாளில் மொபைல் / லாப்டாப் / டாப்லட் - ஐ சாப்பிட்டு பசி ஆரவேண்டியதுதான் . பார்த்தால் பசி தீருமா ? போய் வய காட்டுல வேலை செய்யுங்கள் இந்தியர்களே !
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X