துணுக்கு மூட்டை!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 ஆக
2010
00:00

மலையாளத்தில் பேசி நடித்த அமிதாப்பச்சன்!
மலையாளத்தில் மோகன்லால் நடித்துவரும், "காந்தகர்' படத்தில், அமிதாப்பச்சன் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். அதுமட்டுமின்றி, இந்தி தவிர வேறு எந்த மொழியிலும் வசனம் பேசி நடிக்காத அமிதாப், முதன்முறையாக இப்படத்தில் மலையாளத்தை ஆங்கிலத்தில் எழுதி, மனப்பாடம் செய்து, பேசி நடித்திருக்கிறார்.
— சி.பொ.,
* * *
எதார்த்த கதை தேடும் விமல்!

"களவாணி' படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்துள்ளார் அப்பட நாயகன் விமல். குறிப்பாக, அவரது எதார்த்தமான நடிப்பை சினிமா உலக பிரமுகர் களே பாராட்டுகின்றனர். அதனால், "இனி, சினிமாத்தனமில்லாத எதார்த்தமான கதைகளிலேயே நடிப்பேன். இப்போது நடித்து வரும், "தூங்கா நகரம்' படம் என்னை இன்னும் பெரிய அளவில் பேச வைக்கும்!' என்கிறார்.
* * *
ராசு மதுரவன் இயக்கும் "முத்துக்கு முத்தாக!'
ராசு மதுரவன் இயக்கிய, "கோரிப்பாளையம்' படத்தில் நடித்த ஹரீஸ், அடுத்து அவர் இயக்கும், "முத்துக்கு முத்தாக' படத்திலும் நடிக்கிறார். முந்தைய படத்தில் பொறுக்கியாக நடித்த ஹரீசுக்கு, இந்தப் படத்தில் நல்ல மரியாதைக்குரிய கதாபாத்திரம். கோரிப்பாளையத்தில் ஹரீசுடன் டூயட் பாடிய அதே பூங்கொடிதான், "முத்துக்கு முத்தாக' படத்திலும் அவருடன் டூயட் பாடுகிறார்.
* * *
நான் என்றும் காமெடியன்தான்!
"அம்பாசமுத்திரம் அம்பானி'யைத் தொடர்ந்து, "தங்க மீன்கள்' என்ற படத்திலும் நாயகனாகிறார் கருணாஸ். அவரிடம், "இனி, முழுநேர கதாநாயகன் ஆகி விடுவீர்களோ?' என்று கேட்டால், "நான் கதாநாயகன் அல்ல... கதையின் நாயகன் மட்டுமே. அதுவும் எனக்கு செட்டாகும் கதைகள் வந்தால் மட்டுமே நடிப்பேன். மேலும், கதையின் நாயகனாக நடிப்பதை விட்டாலும், காமெடியனாக நடிப்பதை ஒருபோதும் விடமாட்டேன். காரணம், நான் என்றென்றைக்கும் காமெடியன்தான்!' என்கிறார்.
* * *
அடிதடி படத்தில் ஆதி!
"அய்யனார்' படத்தைத் தொடர்ந்து, "இனி ஆக்ஷன்தான் என் ரூட்!' என்கிறார், "ஈரம்' ஆதி. அதனால், ஆக்ஷன் பட டைரக்டர்களாக தேடிப் பிடித்து கதை கேட்டு வரும் ஆதி, "கும்பமேளா' படத்திற்கு பிறகு ஏ.வெங்கடேஷ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இது நூறு சதவீதம் அடிதடி படம்!
— சி.பொ.,
* * *
"டேக்' வாங்கும் வாரிசு நடிகை!

தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாய வேண்டும்; ஆனால், மாஜி நடிகை ராதாவின் மகள் கார்த்திகாவோ, ஸ்பாட்டில் ஏகப்பட்ட, "டேக்' வாங்குகிறார். இதனால், யூனிட்டுக்கு, மகள் நடிகை மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இப்போது அம்மா நடிகை ஸ்பாட்டுக்கு சென்று, மகளுக்கு ஒத்திகை நடத்திய பிறகே கேமரா முன் அனுப்புகிறார். இதனால், "கோ' பட யூனிட் சற்றே ஆறுதலடைந்துள்ளது. கட்டிக் கொடுத்த சோறும், கற்றுக் கொடுத்த வார்த்தையும் எவ்வளவு நாளைக்கு?
— எலீசா.
* * *
ஸ்ரேயா சொல்லும் புதுக்கதை!

ரவுத்திரம், சிக்குபுக்கு படங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளார் ஸ்ரேயா. "இதுவரை அழகை மட்டுமே ரசித்த ரசிகர்கள், இந்தப் படங்களில் என் பர்பாமென்சை ரசிப்பர்; அந்த அளவுக்கு முதன்முறையாக எனக்குள் ஆழக்கிடந்த நடிப்பாற்றலை இப்படங்களின் இயக்குனர்கள் வெளிக் கொண்டு வந்துள்ளனர்...' என்று, கதை கதையாய் சொல்கிறார். பெருமை ஒருமுறம்; புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை!
* * *
தேவிஸ்ரீ பிரசாத் ஐதராபாத் முகாம்!
"சிங்கம்' படத்தின் வெற்றியால் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்துக்கு மேலும் பல படங்கள் கிடைத்துள்ளது. கமல் நடிக்கும் மன்மதன் அம்பு, விக்ரம் நடிக்கும் வெடி, ஹரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படம் என, அரை டஜன் படங்கள் கிடைத்துள்ளன. இப்படி அதிகப்படியான தமிழ் படங்கள் கிடைத்தபோதும், தன் ரெக்கார்டிங் பணிகளை ஐதராபாத்திலேயே நடத்தி வருகிறார் தேவிஸ்ரீ பிரசாத்.
* * *
தமன்னா ஐதராபாத் விஜயம்!
"தில்லாலங்கடி'யை முடித்துவிட்ட தமன்னாவுக்கு, கார்த்தி, தனுஷûடன் நடிக்கும் இரண்டு படங்கள் மட்டுமே தமிழில் உள்ளன. அதனால், இனி நீண்ட காலம் தமிழில் காலம் தள்ள முடியாது என்பதை புரிந்து கொண்ட தமன்னா, தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே, நாக சைதன்யாவுடன் ஒரு படத்தில் நடிப்பவர், மேற்கொண்டும் படங்களை கைப்பற்ற அடிக்கடி ஐதராபாத்துக்கு விஜயம் செய்கிறார். ஆர் வாழ்வுதான் சதம்?
* * *
பாவனா ஆட்டம் முடிந்தது!
அஜீத்துடன் நடித்த, "அசல்' படத்தோடு பாவனாவின் சினிமா ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. அப்படத்துக்கு பிறகு, யாருமே தன்னை நடிக்க அழைக்காததால், தன் சொந்த ஊரான, கேரளாவிலுள்ள திருச்சூரில் குடியேறிவிட்டார். சினிமாவை மறந்து, தான் சினிமாவில் சம்பாதித்து வாங்கிய தோட்டங்களை பராமரிக்கும் பணிகளில் இறங்கியுள்ளார். ஆடி ஓடி நிலைக்கு வந்தது!
— எலீசா.
* * *


Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.