நோக்கியா ஆஷா 302
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2012
00:00

பெரும்பான்மையான எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்ற இலக்குடன், நோக்கியா நிறுவனம் தன் ஆஷா வரிசையில், ஆஷா 302 என்ற மொபைல் போனை வடிவமைத்து விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. அருமையான வடிவமைப்பு, தெளிவான, வசதியான கீ பேட், வைபி மற்றும் 3ஜி சப்போர்ட், துல்லியமான ஒலி வெளிப்பாடு, எளிமையான யூசர் இன்டர் பேஸ், வெளியேயிருந்தும் இணைக்கக் கூடிய யு.எஸ்.பி.ட்ரைவ், கொடுக்கும் பணத்திற்கான கூடுதல் வசதிகள் என இந்த மொபைல் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது.
இதன் அதிக பட்ச விலை ரூ.7,000 என்றாலும், இந்த செய்தியினை எழுதுகையில், சந்தையில் ரூ.6,000 க்குக் கிடைப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதன் பரிமாணம் 4.3" x 2.3" x 0.5" மிமீ ஆக உள்ளது. எடை 106 கிராம். பார்த்தவுடன் விலை உயர்ந்த நோக்கியா உ6 நினைவிற்கு வருகிறது. இதன் குவெர்ட்டி கீ போர்டு அதிக கவனத்துடன், மிக வசதியாக பயன்படுத்தும்படி அமைக்கப்பட்டுள்ளது. 320x240 பிக்ஸெல் டிஸ்பிளே கொண்ட 2.4 அங்குல திரை பளிச் என இயங்குகிறது. ஆனால், இதன் பிரைட்னஸ் அளவை குறைக்கவோ, அதிகப்படுத்தவோ முடியவில்லை. இதன் சி.பி.யு. 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. ராம் மெமரி 128 எம்.பி. இதில் யு.எஸ்.பியில் இயங்கும் சாதனங்களை இணைக்கலாம். அதற்கான போர்ட் தரப்பட்டுள்ளது. அதாவது உங்கள் பிளாஷ் ட்ரைவினை இதில் இணைத்து செயல் படுத்தலாம். 3.2 எம்பி திறன் கொண்ட கேமரா, நெட்வொர்க் இணைப்பிற்கு வைபி, புளுடூத், 3ஜி, மைக்ரோ எஸ்.டி.கார்ட் ஸ்லாட், ஆடியோ ரசிக்க 3.5 மிமீ ஜாக், நீண்ட நேரம் பேசும் வகையில் மின்சக்தி அளிக்க 1320 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியன கிடைக்கின்றன.
மியூசிக் பிளேயர், எப்.எம். ரேடியோ மிகத் துல்லியமான ஒலியை ரசிக்கத் தருகின்றன. மியூசிக் பிளேயரை மினிமைஸ் செய்து, மற்ற செயல்பாட்டின் போது இசையை ரசிக்கலாம். 3GP, MP4, and DivX வீடியோக்களையும் இந்த போன் கையாள்கிறது. ஆனால், இதன் 2.4 அங்குல திரையில் இவற்றை அவ்வளவாக ரசிக்க இயலவில்லை. இருப்பினும் ரூ.6,000 அளவிலான விலைக் குறியீட்டில், இது பயனுள்ள மொபைல் போன்.

Advertisement

 

மேலும் மொபைல் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜேஷ் - மதுரை,இந்தியா
25-ஜூலை-201217:14:41 IST Report Abuse
ராஜேஷ் செல் விலை அதிகம் என்று தோண்டுகிறது. எனவே இதை வாங்க வேண்டும் என்று ஆசைபடுகிறேன் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X