பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2012
00:00

என்ன வேண்டுமானாலும் எழுதலாம்; யாரையும் வாழ்த்தலாம்; குறை கூறலாம் என்ற மனப்பான்மையில் மக்கள் சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தி வருகையில், நாசூக்காக நல்ல நடத்தைக்கான அறிவுரையைத் தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
சி.கிருஷ்ணமூர்த்தி, மதுரை.

சோஷியல் சைட்கள் குப்பைக் கூடைகள் போல ஆகிவருகின்றன. தங்களுடைய அறிவுரைகள், நல்ல ஒரு ஆசிரியரின் அறிவுரைகளாகும். மக்கள் பொறுப்புணர்ந்து செயல்பட இது வழி வகுக்கும்.
டி.கிரிஜா குமார், செங்கல்பட்டு.

மால்வேர் புரோகிராம்களில் சிக்கிவிடுவோம் என்று தெரிந்தும், என்னதான் நடக்கும் என்று பார்த்துவிடுவோம் என்று பலர் செயல்பட்டுச் சிக்கிக் கொள்கின்றனர். இவர்களுக்கான எச்சரிக்கையாக அமைந்துள்ளது உங்கள் "அசட்டுத் தைரியத்துடன் அணுகாதீர்' கட்டுரை.
ஒய். சந்தானம், திண்டுக்கல்.

மினி கால்குலேட்டர் மிக வசதியாக உள்ளது. எங்கள் நண்பர்கள் குழாம் அனைவரும் இதனை இப்போது போட்டு வைத்து அலுவலகத்தில் பயன்படுத்தி வருகின்றனர். தகவலுக்கு நன்றி.
ஆர். சிவநேசன், சென்னை.

ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இன்னும் பல தொழில்நுட்பச் சொற்களை, அவை என்னவென்று தெரியாமலேயே பயன்படுத்தி வருகிறோம். தயவு செய்து அவற்றையும் விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
டி.அமுதுராஜ், அருப்புக்கோட்டை.

விண்டோஸ் 8 அக்டோபரில் வர இருப்பதனால், நாங்கள் கம்ப்யூட்டர் வாங்குவதனை ஒத்தி போட்டுள்ளோம். நிச்சயம் பல புதுமைகளை விண்டோஸ் 8 தரும் என எதிர்பார்ப்போம். ஏற்கனவே அதன் புதிய வசதிகள் பலவற்றை நீங்கள் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம். இன்னும் தகவல்கள் வருகையில் தெரிவிக்கவும்.
ஆர். சியாமளா, தாம்பரம்.

ஜிமெயிலில் மெயில்களை மொத்தமாக அழிப்பதற்கான வழி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இருப்பினும், இவ்வாறு அழிப்பது எப்போதாவது தான், ஒரு சிலருக்குத்தான் தேவையாக இருக்கும். ஜிமெயில் தான், நிறைய இடம் தருகிறதே.
கா. சுந்தர் பழமலை, காரைக்குடி.

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் உள்ள, பைட்ஸ், பிக்ஸெல் போன்ற அலகுகள் அனைத்தையும் ஒரு கட்டுரையாகத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். படிக்கின்ற எங்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும்.
+2 மாணவர்கள் சார்பாக, திருஞானம், மேலூர்.

சயின்டிபிக் கால்குலேஷன்களுக்கு மட்டும் முக்கியத்துவம் தரும் கால்குலேட்டர்கள் இணையத்தில் இலவசமாகக் கிடைத்தால், அது குறித்த தகவல்களைத் தரவும்.
சா. உதயகுமார், மதுரை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X