சாம்சங் கேலக்ஸி எஸ்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஆக
2010
00:00

இன்னும் மற்ற மொபைல் போன்களில் அறிமுகப்படுத்தப்படாத, பல புதிய வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எஸ். ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த போன் மற்றவற்றிற்குச் சவால் விடும் வகையில் புதிய அனுபவத்தினைத் தருகிறது.
அழகான சுற்றிச் செல்லும் மெட்டல் பிரேமில், முழுவதும் பிளாஸ்டிக்கினால் ஆன அமைப்புடன், ஸ்லிம்மாக, 9.9 மிமீ தடிமனில் உருவாக்கப் பட்டுள்ளது. இதன் திரை 4 அங்குல அகலத்தில் அமைந்திருந்தாலும், எடை 119 கிராம் என அறிவிக்கப்பட்ட போதிலும், கையாளுகையில் அவ்வளவாக கனம் தெரியவில்லை. இதன் மைக்ரோ ஸ்லைடிங் கவர் மற்ற போன்களில் இல்லாத ஒன்றாகும்.
எவ்வளவு சூரிய ஒளியிலும் தெளிவாகக் காட்டும் வண்ணத்திரை இதன் மற்றொரு சிறப்பு. ஒரு கிஹா ஹெர்ட்ஸ் ப்ராசசர், 512 எம்பி நினைவகம், 8 அல்லது 16 ஜிபி ஸ்டோரேஜ் ஆகியவை இணைந்து, எத்தனை அப்ளிகேஷன் களையும் இதில் எளிதாகப் பதிந்து இயக்க வைக்கின்றன. அனைத்தும் நல்ல வேகத்தில் இயங்குகின்றன.
இதில் உள்ள சாம்சங் டச்விஸ் யூசர் இன்டர்பேஸ் 3.0, வை–பி, புளுடூத், சைலன்ட் மோட், வைப்ரேஷன் மோட் எனப் பல புதிய நேரடி இயக்க பட்டன்களைக் கொண்டுள்ளது.
இதில் தரப்பட்டுள்ள கேமரா 5 எம்பி திறன் கொண்டது. ஒரே குறை எல்.இ.டி. ப்ளாஷ் இல்லாததுதான். இரவில் போட்டோ எடுக்க முடியாது. வீடியோ ரெகார்டிங் விநாடிக்கு 30 பிரேம் என்ற அளவில் இயங்குகிறது. இந்த போனின் ப்ராசசர் தரும் வேகத்தில், அகலத் திரையுடன் இன்டர்நெட் பிரவுஸ் செய்வது ஒரு நல்ல இனிய அனுபவமாக உள்ளது. இணையப் பக்கங்கள் வேகமாக இறங்குவதுடன், திரைக்கு ஏற்றவகையில் அவை அட்ஜஸ்ட் செய்யப்படுகின்றன.
சாம்சங் கேலக்ஸி எஸ் 16 ஜிபி மாடல் ரூ. 28,500 என விலையிடப்பட்டு கிடைக்கின்றது. எதிர்காலத் தேவைகள் பலவற்றைக் கொண்டுள்ள இந்த போன், பட்ஜெட் இல்லாமல், வசதிகளை மையமாகக் கொண்டு போன் வாங்கிடத் திட்டமிடுபவர்களுக்கு நல்லதொரு போனாகும்.


Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yogesh - Thanjavur,இந்தியா
07-ஆக-201017:37:58 IST Report Abuse
Yogesh Respected Sir, Iam going to buy a mobile Please give the review of nokia n85 i would like to buy that only Thanking You, Yours Faithfully, V.Yogesh
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X