இந்த வார இணைய தளம் - தட்டச்சின் வேகத்திறனை அதிகமாக்க
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2012
00:00

என்னதான் நாம் கம்ப்யூட்டர் புரோகிராம்களை இயக்குவதில் கில்லாடியாக இருந்தாலும், கீ போர்டினை வேகமாகவும், எளிதாகவும், சிரமம் இன்றி இயக்கினால்தான், கம்ப்யூட்டரில் வேலை செய்வது ஒரு மகிழ்ச்சியான காரியமாக இருக்கும். எனவே குவெர்ட்டி கீ போர்டினைக் கையாளக் கற்று கொள்வது நம் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக உள்ளது. முன்பு டைப்ரைட்டிங் கற்றுக் கொள்ள அதற்கென இயங்கும் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்து இரண்டு மாதங்களாவது குறைந்தது கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கென வடிவமைக்கப்பட்ட பாடங்கள் உண்டு. இப்போது அந்த கவலையே இல்லை. இணையத்திலேயே இதற்கென டைப்ரைட்டிங் ட்யூட்டர் புரோகிராம்கள் உள்ளன. இவற்றைக் கொண்டு ஒரு வாரத்தில் கீ போர்டைக் கையாளக் கற்றுக் கொள்ளலாம். அடுத்த நிலையில் அதனை வேகமாக இயக்க நமக்குப் பல புரோகிராம்கள் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றை அண்மையில் http://keybr.com/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் காண நேர்ந்தது.
இந்த தளத்தில் நுழைந்தவுடன், இது தரும் மூன்று பாடங்களைத் தேர்ந்தெடுத்து, டைப்பிங் கற்றுக் கொள்வதனை ஆரம்பிக்கலாம். படிப்படியாகக் கற்றுக் கொடுக்கிறது. நீங்கள் ஏற்கனவே கீ போர்டினைக் கையாளக் கற்றுக் கொண்டு, வேகமாக டைப் அடிக்க பழக்கம் வேண்டும் எனில், அதற்கான பிரிவினைத் தேர்ந்தெடுத்து அதில் தரப்படும் வேகத்தேர்வினை மேற்கொள்ளலாம். எவ்வளவு சரியாக டைப் செய்கிறீர்கள், எத்தனை தவறுகள் செய்தீர்கள் என்பதனைப் பட்டியல் போடுகிறது. உங்கள் டைப்பிங் வேகத்தினையும் வரைபடமாகக் காட்டுகிறது. சராசரியாக எவ்வளவு வேகம் இருக்க வேண்டும், உங்கள் வேகம் எப்படி எனப் படம் போடுகிறது.
மற்ற டைப்பிங் ட்யூட்டர் புரோகிராம்களில், நமக்குக் கற்றுக் கொடுக்க தாறுமாறாக எழுத்துக்கள் அமைந்த சொற்கள் தரப்படும். இதில் அவ்வாறின்றி, நல்ல டெக்ஸ்ட் தரப்படுகிறது. இதனால் நாம் ஆர்வம் பெற்று, சோதனைகளை மேற்கொள்கிறோம். இதனை இணைய தளத்தில் வைத்துத்தான் இயக்க முடியும். தனி புரோகிராமாக தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்திடத் தேவையில்லை. ஆங்கிலம் தவிர வேறு சில மொழிகளுக்குமான பாடங்களும் இருக்கின்றன. அவை நமக்குத் தேவையில்லையே. சரி, இந்த தளத்தின் மூலம் நம் டைப்பிங் திறனை அதிகப்படுத்தத்தான் வேண்டுமா? என்ற கேள்வி சிலருக்கு எழலாம். நம் தேடல் சொற்கள், உருவாக்கும் ஆவணங்கள் சரியாகவும், வேகமாகவும் அமைக்கப்பட வேண்டுமாயின், இது போன்ற சில பாடங்களும் சோதனைகளும் தேவை தான். ஒரு முறை இந்த தளம் சென்று பாருங்கள். நிச்சயம் உங்கள் டைப்பிங் திறன் கூர்மைப் படுத்தப்படும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X