பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2012
00:00

ஹேக்கர்களுக்கும், அவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிர்த்து புரோகிராம்களைத் தயாரிப்பவர்களுக்கும் இடையேயான யுத்தம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே உள்ளது. நீங்கள் கூறிய பத்து வழிகள் இதில் எங்களுக்கு பலம் ஊட்டுவதாய் அமைந்துள்ளன.
சி.மரியசகாயம், புதுச்சேரி.

பேக் அப் பைல்களாக நாம் எடுத்து வைக்கும் பைல்களுடன் வைரஸ்களும் வந்து இணைந்து கொள்கின்றன. எனவே பேக் அப் போர்ட்டபிள் ஹார்ட் டிஸ்க்கினை வைரஸ் சோதனை செய்திடலாமா என்பதற்கு வழி காட்டவும்.
என். கணேசன், மதுரை.

சமுதாய இணைய தளங்கள் குப்பை கூடைகள் போல ஆனாலும், பல புதிய உறவுகள், நட்பு வளையங்கள் உருவாகவும், அதன் மூலம் பல நல்ல செயல்கள் மேற்கொள்ளப்படவும் வழி வகுக்கின்றன. தீதும் நன்றும் பிறர் தர வரா என்ற மூதுரையைத்தான் இதில் நாம் பின்பற்ற வேண்டும்.
இல. ஜெயராமன், திண்டுக்கல்.

சமுதாய தளங்களை ஒதுக்குவதால், அதன் மூலம் நன்மைகளும் உள்ளன என்பது போல வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தவறு. இதனால் பல நன்மைகளும் உள்ளன.
கிறிஸ்டோபர், மேலூர்.

சமுதாய தளங்கள் குறித்து வாசகர்களின் கருத்துக்கள் அனைத்தையும் தொகுத்து மதிப்பளித்து பிரசுரம் செய்தது, ஒரு நாணயத்தின் இரு பக்கங்களையும் காட்டுவது போல் உள்ளது. நன்றி.
ஆ. முருகேசன், பொள்ளாச்சி.

தட்டச்சு வேகம் பழக நீங்கள் கொடுத்துள்ள தளம் மிக அருமையான ஒன்று. நானும் என் பிள்ளைகளும் அடிக்கடி பயன்படுத்துகிறோம். விளையாட்டாகவும் உள்ளது. தனியே புரோகிராமாக ஏதேனும் கிடைக்கிறதா என்பதற்கும் தகவல் அளிக்கவும்.
என்.கோகிலம், கோவை.

ஒருவழியாக விண்டோஸ் 8 வெளியீட்டிற்கு நாள் குறித்தாயிற்று. இதனை வாங்கி உரிமையுடன் பயன்படுத்த காத்திருக்கிறோம். இதற்காக கம்ப்யூட்டர் வாங்குவதையும் ஒத்தி போட்டு வைத்துள்ளோம்.
கா. சங்கர் ராஜன், பெங்களூரு.

விண்டோஸ் 8 வர இருப்பதால், அரசின் விலையில்லா கணினிகளிலும் இதனைப் பொருத்தித் தரலாமே. நீங்கள் பரிந்துரை செய்து எழுதினால், அரசு நிச்சயம் கவனிக்கும்.
க.மகரிஷி, புழல்.

எக்ஸெல் செல்களுக்கிடையே, நான்கு திசைகளிலும் செல்லும்படி என்டர் கீ தட்டலை அமைக்கலாம் என்பதனை இதுநாள் வரை அறியாமல் இருந்திருக்கிறேன். இது போல சின்ன சின்ன விஷயங்கள் அனைத்தையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தா. வைகை வளவன், பள்ளத்தூர்.

விண்டோஸ் 8 டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ் தொடர்ந்து இப்போதிருந்தே வெளியிடவும். ஒரு நல்ல ஆசிரியர் போல கற்றுத் தரும் உங்களிடமிருந்து இதனை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
ஒய். கமல்ராஜ், புதுச்சேரி.

சமுதாய தளங்களில் ஒரு சிலர் செய்திடும் கூத்து மற்றும் அராஜகம் பலரை ஓட வைக்கின்றன என்பது நம் வாசகர்களின் கருத்துக்களை நீங்கள் தொகுத்து எழுதியதிலிருந்து தெரிகிறது. இனிமேலாவது இது போன்ற நபர்கள் திருந்துவார்களா!
டி.கே. இளையராணி, திருச்சி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தியானேஸ்வரன்.G - Coimbatore,இந்தியா
31-ஜூலை-201215:23:23 IST Report Abuse
தியானேஸ்வரன்.G Its realy very useful.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X