பர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஆக
2012
00:00

ஆபீஸ் 2013 தொகுப்பு வெளியானது குறித்த தகவல்களை முந்தித் தந்தது நம் தினமலரின் கம்ப்யூட்டர் மலர் தான். தகவலாக மடடுமின்றி, எங்களுக்காக, அதனை இயக்கிப் பார்த்து, அதன் புதிய அம்சங்களையும் மிகத் தெளிவாகவும் தந்துள்ளீர்கள். உங்கள் சேவை தொடரட்டும்.
எம். மீனா ராஜ்குமார், கோவை.

விண்டோஸ் 8, சர்பேஸ் டேப்ளட் பிசி, இப்போது ஆபீஸ் 2013 கம்ப்யூட்டர் உலகில் என்றைக்குமே நான்தான் சக்கரவர்த்தி என மைக்ரோசாப்ட் சொல்லாமல் சொல்லியுள்ளது. கூகுள் எப்படி தன் வாடிக்கையாளர்களை வேறு எங்கும் போய்விடாமல், அனைத்து வசதிகளையும் தந்து கட்டிப் போட்டு வைத்துள்ளதோ, அதே போல, ஸ்கைப், பிடிஎப், லைவ் ட்ரைவ் என அனைத்து வசதிகளையும் தந்து பயனாளர்களைத் தன் பக்கம் இழுத்து வைத்துக் கொண்டுள்ளது மைக்ரோசாப்ட்.
கா. அன்புச் செல்வன், கோவை.

வேர்ட் புரோகிராம் தொடர்ந்து, எக்ஸெல் புரோகிராமினையும் ட்யூன் செய்து, நம் வசம் வைத்திட நீங்கள் தந்துள்ள வழிகள் அருமையானவை. மீதம் உள்ள வழிகளை அடுத்த வாரத்தில் தருவதுடன், புதிய ட்ரிக்ஸ் மற்றும் டிப்ஸ்களையும் தருவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.
பேரா. சி. ஆறுமுகம், மதுரை.

நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள நாய்களுக்குப் பயிற்சி தருவது குறித்த தளம், உண்மையிலேயே அற்புதமான விஷயங்களைத் தருகிறது. பொதுவாக, இது போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பது பற்றி தகவல்கள் கிடைப்பதில்லை. இந்த தளம் போல இந்தியாவில், குறிப்பாக நம் மாநிலத்திற்கான தளங்கள் இருந்தால், குறிப்புகளைத் தரவும்.
ஜாஸ்லின் பிரிஸில்டா, மதுரை.

மொபைல் போன் பயன்பாட்டிலும் மக்கள் முன்னேறி, சராசரி நிலை உயர்ந்து வருகிறது. ஸ்மார்ட் போன்கள் வெகுஜன போன்களாகிவிட்டன. இன்டர்நெட்டில் தகவலைப் பெற இவற்றைப் பயன்படுத்துவதை, சிறிய நகரங்களில் கூடப் பார்க்க முடிகிறது. நீங்கள் குறிப்பிட்டுள்ள ஸ்மார்ட் போன்கள், இதனை இன்னும் முன்னுக்குக் கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை.
டாக்டர் எஸ். பிரகாஷ் குமார், அவிநாசி.

தூங்கும் கம்ப்யூட்டருக்கு அலாரம் தேவையான ஒன்றுதான். எங்கள் அலுவலகத்திலும், ஸ்லீப் போட்டுவிட்டு தூங்கிவிடும் நபர்களும் உண்டு. நீங்கள் தந்த கட்டுரையை பிரிண்ட் செய்து,
என் நண்பர்களின் மேஜையில் வைத்து, தாங்கள் கொடுத்த தகவலைப் பின்பற்றச் சொன்னேன். நன்றி.
க.அருள்ராஜ், காரக்கால்.

இன்டர்நெட்டில் நம் உறவுமுறைக்கு வழி வகுத்த டிம் பெர்னர்ஸ் லீ யின் கண்டுபிடிப்பு, மனித சமுதாயத்திற்கு மகத்தான சேவை செய்துள்ளது. இதனை உரிய நேரத்தில் சுட்டிக் காட்டியது தங்களின் பண்பைக் காட்டுகிறது. இதே போல தகவல் தொழில் நுட்பப் பாதையில் மைல்கற்களை உருவாக்கியவர்களின் வாழ்க்கைக் குறிப்பினைத் தந்தால், மாணவர்களுக்கு தூண்டுதலாக இருக்கும்.
பேரா. டாக்டர் என்.யூசுப், புதுச்சேரி.

பிளாட்டர் என்றால் நான் வேறு ஒன்றை எண்ணிக் கொண்டிருந்தேன். படத்துடனான உங்கள் பதில் தெளிவைத் தந்தது. நன்றி.
சி.சல்மா, திண்டிவனம்.

தொடுதிரை வகைகள் குறித்த விளக்கம் அருமை. நாம் இவற்றை அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தினால், நிச்சயம் இவற்றின் விலை குறைந்து, எல்லாமே தொடுதிரை மானிட்டர்களாக அமைந்துவிடும். விண்டோஸ் 8 இந்த மாற்றத்தினைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.
எஸ். கோபிநாத், பாலக்காடு.

இகால்க் கால்குலேட்டர் சூப்பர் கால்குலேட்டர் சார். வகை வகையாய் கணக்குகளை போட வழி தருவதுடன், கூடுதல் தகவல்களையும் தருகிறது. இது தனி புரோகிராமாகக் கிடைத்தால் கூடுதல் பயனுள்ளதாக இருக்கும்.
ஆ. ஸ்ரீகுமார், வத்றாப்.

இணையம் சிறுவர்களின் அறிவுத் திறனுக்குத் தீனி தருவதாய் அமைந்தாலும், அவர்களை தகாத பாதையில் அழைத்துச் செல்லும் விஷயங்களும் அதிகம் உள்ளன. எனவே கே9 போன்ற பாதுகாக்கும் புரோகிராம்கள் நிறைய தேவை.
சி.முருகேசன், தாம்பரம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X