மைக்ரோமேக்ஸ் அறிமுகம் செய்த மூன்று டூயல் சிம் போன்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஆக
2012
00:00

இரண்டு சிம் இயக்க மொபைல் போன்களை அதிக அளவில் அறிமுகப்படுத்திய மைக்ரோமேக்ஸ் நிறுவனம், சென்ற வாரம் மூன்று டூயல் சிம் போன்களை விற்பனைக்குக் கொண்டு வந்தது. இவற்றில் இரண்டு தொடு திரை இயக்கமும், மூன்றாவது வழக்கமான கீ பேடும் கொண்டுள்ளன. முதல் இரண்டு போன்கள் முறையே எக்ஸ் 445 மற்றும் எக்ஸ் 454 என அழைக்கப்படுகின்றன. மூன்றாவது போன் எக்ஸ் ஒன் ஐ எக்ஸ்ட்ரா என பெயரிடப்பட்டுள்ளது.
மைக்ரோமேக்ஸ் எக்ஸ் 445 மொபைல் போன், 3.2 அங்குல தொடுதிரை கொண்டுள்ளது. 0.3 மெகா பிக்ஸெல் கேமரா, புளுடூத், பதிவு வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ, 4 மணி நேரம் தொடர்ந்து மின் சக்தி தரும் 1000 mAh திறன் கொண்ட பேட்டரி, 8 ஜிபி வரை அதிகப்படுத்தும் திறன் கொண்ட நினைவகம் ஆகிய அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர், மொபைல் டிவி அப்ளிகேஷன் ஆகியவை இன்ஸ்டால் செய்யப்பட்டு தரப்படுகின்றன. இதில் 15 திரைப்படங்கள் முன் கூட்டியே பதிவு செய்யப்பட்டு கிடைக்கின்றன. இதில் ஜி.பி.ஆர்.எஸ். வசதி கிடைக்கிறது. ஆனால் 3ஜி இல்லை. இதன் அதிக பட்ச விலை ரூ.2,799மட்டுமே.
எக்ஸ் 454 மொபைல் போன், ஒரு மல்ட்டி மீடியா மொபைலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள போனின் அனைத்து வசதிகள் இதில் தரப்பட்டுள்ளன. குறிப்பாக பதியக் கூடிய வசதியுடன் கிடைக்கும் ஆடியோ, வீடியோ பிளேயர் இதில் குறிப்பிடத்தக்கது. இந்த போனின்மெமரியை மைக்ரோ எஸ்.டி.கார்ட் மூலம் 16 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். இதன் அதிக பட்ச விலை ரூ.2,999.
மைக்ரோமேக்ஸ் எக்ஸ் ஒன் எக்ஸ்ட்ரா மொபைல் போனின் சிறப்பான அம்சம் அதன் பேட்டரியாகும். இதன் திறன் 1500 mAh. இதனால் தொடர்ந்து 6.5 மணி நேரம் தொடர்ந்து பேச முடியும். ஒருமுறை சார்ஜ் செய்தால், 220 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது. இந்த போனின் மெமரியை எஸ்.டி. கார்ட் மூலம் 4 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். 0.3 மெகா பிக்ஸெல் கேமரா, புளுடூத், எப்.எம். ரேடியோ, எல்.இ.டி. டார்ச், டூயல் சிம் வசதி கொண்ட இந்த போனை மைக்ரோமேக்ஸ் நிறுவனம், ரூ. 1,550 அதிக பட்ச விற்பனை விலை எனக் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X