பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஆக
2012
00:00

வேடிக்கையான தன் டூடில்களைக் கூட, சேர்த்து வைத்து கூகுள் காட்டுவது புதிய தகவல் தான். சமீபத்தில் ஒலிம்பிக்ஸ் குறித்த டூடில்களில், அனிமேஷன் கூட இருந்தது. இந்த சிறிய விஷயங்களைக் கேட்கவா என்று எண்ணிய போது, வாசகர்களின் மனதறிந்து தந்தமைக்கு நன்றி.
சா.கணேசமூர்த்தி, திருமங்கலம்.

தன் புதிய விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மையப்படுத்தி, அதற்கான துணை சாதனங்களை மைக்ரோசாப்ட் தருவது நல்லதுதானே. அவற்றை வரவேற்போம்.
என். மேரி ராணி, ஸ்ரீவில்லிபுத்தூர்.

பயர்பாக்ஸ் பிரவுசரின் வேகத்தை அதிகப் படுத்த தாங்கள் அளித்துள்ள குறிப்புகள், பொதுவாக அனைத்து பிரவுசருக்கும் பொருந்தும் என்று எண்ணுகிறேன். அனைத்து டிப்ஸ்களுக்கும் நன்றி.
கா.சியாமளா, சென்னை.

மொபைல் கோபுரங்கள் குறித்த எச்சரிக்கைகள் அனைத்து மக்களுக்கும் போய்ச் சேர வேண்டும். கிராமங்களில் தன் காசிலேயே சூனியம் வைத்துக் கொள்வது என்று கூறுவார்கள். இன்று பலர் வாடகை கிடைக்கிறது என்பதற்காக, தங்கள் வீடுகளில் மொபைல் கோபுரங்களை அமைத்து வருகின்றனர். அவர்களுக்கு உங்கள் கட்டுரை ஒரு நல்ல எச்சரிக்கை.
டாக்டர் ஆர். டேவிட், கோவை.

கூகுள் தேடல் பக்கத்தில் தரப்படும் கால்குலேட்டர் மிகப் பயனுள்ளதாக உள்ளது. குறிப்பாக சயின்டிபிக் நொட்டேஷன்களுட்ன் இது செயல்படுவது என்னைப் போன்ற மாணவர்களுக்கு அதிகம் உதவுவதாக உள்ளது. தகவலுக்கு நன்றி.
எஸ்.கே. ஷ்யாம் பிரசாத், சென்னை.

ப்ளாஷ் ட்ரைவில் இருந்து ஏன் ஆண்ட்டி வைரஸ் இயக்க முடியாது என்பதனைத் தெளிவாகக் கூறி உள்ளீர்கள்.
என். கார்ல் மார்க்ஸ், திருப்பூர்.

கேப்சா டெஸ்ட்டில் இவ்வளவு இருக்கிறதா? ஏதோ விளையாட்டு போல என்று எண்ணி இருந்தேன்.
சி. இந்திராணி, புதுச்சேரி.

ஒருமுறை பயன்படுத்த ஆட் ஆன் புரோகிராம்களை பதிந்துவிட்டு, பின்னர் பயன்படுத்தாமலும், நீக்காமலும் இருந்தால், பயர்பாக்ஸ் திணறத்தான் செய்திடும். மிக அழகாக ஒவ்வொரு காரணத்தையும் விளக்கியது நன்றாக உள்ளது.
பேரா. என். காதர் முகைதீன், காரைக்கால்.

வேகமாகப் பெருகி வரும் பேஸ்புக் தளம் குறித்த புள்ளி விபரங்கள் ஆச்சரியப்படத்தக்க வகையில் உள்ளன. நான் கூட இரண்டு அக்கவுண்ட் வைத்துள்லேன். அதனை நீக்கும் வழி என்ன?
சி. ஞானப் பிரகாஷ். திண்டுக்கல்.

சில வேளைகளில் பேஸ்புக் இயக்கமும் முடங்குகிறது. இதற்கான காரணம் என்ன என்பதனைக் குறிப்பிடவில்லையே?
சி.கே. உலகநாதன், விழுப்புரம்.

ஆட் ஆன் தொகுப்புகளின் தரவிறக்க எண்ணிக்கை ஆச்சரியப்பட வைக்கிறது. இந்த வகையில் பயர்பாக்ஸ் தான் முன்னோடி. நாம் விரும்பும் அனைத்து வசதிகளுக்கும் ஏதேனும் ஒரு ஆட் ஆன் தொகுப்பு உள்ளது என்பது அதன் சிறப்பாகும். இது ஓப்பன் சோர்ஸ் முறையில் இருப்பதால் தான் சாத்தியமாகிறது. இதனை நீங்கள் எழுதியிருக்க வேண்டும்.
இரா. கிள்ளி வளவன், பொள்ளாச்சி.

கட்டுரைகளுக்கான புட் நோட் அமைப்பது குறித்த விளக்கம், அதற்கான செயல் விளக்கப் படம் அருமை. தக்க சமயத்தில் எனக்கு உதவியது. நன்றி.
கா. ந. சோலைமலை, மதுரை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X