வீடியோகான் வழங்கும் பட்ஜெட் விலை போன்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 ஆக
2012
00:00

அண்மையில் வீடியோகான் நிறுவனம், மூன்று மொபைல் போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. ரூ. 2,500 அதிக பட்ச விலையாகக் குறியிடப்பட்டுள்ள போன் வி 1546 என அழைக்கப்படுகிறது. இரண்டு மினி சிம் இயக்கத்தில் இரண்டு பேண்ட் அலைவரிசையில் இது செயல்படுகிறது. இதன் பரிமாணம் 99து56து13.5 மிமீ. பார் டைப் ஆக இது வடிவமைக்கப் பட்டுள்ளது.
வழக்கம் போல ஆல்பா நியூமெரிக் கீ போர்ட் தரப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் கிரே கலந்த வண்ணத்திலும், கருப்பு மற்றும் பழுப்பு கலந்த வண்ணத்திலுமாக இரண்டு வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதன் திரை டி.எப்.டி. டச் ஸ்கிரீனாகும். 2.8 அங்குல அகலம் உடையது. இதன் பிக்ஸெல் திறன் 240x320 ஆகும்.
லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 4 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தக் கூடிய மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 500 முகவரிகள் கொள்ளும் முகவரி புக் ஆகியவை தரப்பட்டுள்ளன. புளுடூத், யு.எஸ்.பி. கிடைக்கின்றன. கேமரா 1.3 எம்.பி. திறன் கொண்டதாக அமைந்துள்ளது. இதன் பிக்ஸெல் திறன் 1280து1024. பதிவு செய்யக் கூடிய எப்.எம். ரேடியோ, எம்பி 4 மற்றும் எம்பி3 பிளேயர்கள், இ-புக் ரீடர் கிடைக்கின்றன. கொடுக்கப்பட்டுள்ள பேட்டரி தொடர்ந்து 4.5 மணி நேரம் பேசும் திறனை அளிக்கிறது.
இரண்டாவதாக வெளியாகியுள்ள வீடியோகான் மொபைல் வி1528. இதன் அதிக பட்ச விலை ரூ. 1,700. இரண்டு மினி சிம் இயக்கம் மற்றும் இரண்டு பேண்ட் அலை வரிசை இயக்கம் கிடைக்கிறது. இதன் பரிமாணம் 113.2x51.3x14.3 மிமீ. பார் டைப் ஆக இது வடிவமைக்கப் பட்டுள்ளது. வழக்கம் போல ஆல்பா நியூமெரிக் கீ போர்ட் தரப்பட்டுள்ளது. 2.4 அங்குல டி.எப்.டி. டிஸ்பிளே ஸ்கிரீன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பிக்ஸெல் திறன் 240x320 ஆக உள்ளது. லவுட் ஸ்பீக்கர், 8 ஜிபி வரை மெமரியை அதிகப்படுத்தும் வசதி, 1000 முகவரி கொள்ளும் முகவரி புக், புளுடூத், யு.எஸ்.பி., 1.3 எம்பி திறன் உள்ள கேமரா 1280 x1024 பிக்ஸெல் மற்றும் டிஜிட்டல் ஸூம் திறனுடன் கிடைக்கிறது. பதிவு செய்திடும் வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ, எம்பி3 மற்றும் எம்பி 4 பிளேயர் ஆகியவை உள்ளன. பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களுக்கான நேரடி தொடர்பு தரப்பட்டுள்ளது. 1500 ட்அட திறனுடன் கூடிய லித்தியம் அயன் பேட்டரி தொடர்ந்து பத்து மணி நேரம் பேசக் கூடிய வசதியைக் கொடுக்கிறது.
மூன்றாவதாக வி1533 என்ற போனை வீடியோகான், அதிக பட்ச விலையாக ரூ.1,900 என்ற அறிவிப்புடன் வெளியிட்டுள்ளது. இரண்டு சிம் இயக்கத்தில் இரண்டு பேண்ட் அலைவரிசையில் இயங்குகிறது. இந்த போனின் திரை 2.2 அங்குல அகலத்தில் உள்ளது. 8 ஜிபி வரை இதன் மெமரியை அதிகப்படுத்தலாம். 1000 முகவரிகளை இதன் அட்ரஸ் புக் கொள்கிறது. புளுடூத்,
யு.எஸ்.பி. வசதிகள் உள்ளன. 1.3 எம்.பி. திறனுடன் கேமரா, வீடியோ பதியும் வசதி, டிஜிட்டல் ஸூம் ஆகியவற்றுடன் தரப்படுகிறது. பதிவு செய்யக் கூடிய எப்.எம். ரேடியோ இயங்குகிறது. எம்பி3 மற்றும் எம்பி 4 பிளேயர்கள் உள்ளன. 1500 mAh திறனுடன் கூடிய லித்தியம் அயன் பேட்டரி தொடர்ந்து ஐந்து மணி நேரம் பேசக் கூடிய வசதியைக் கொடுக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 300 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது.
மேற்குறிப்பிட்டுள்ள மூன்று பட்ஜெட் போன்களும் அனைத்து மொபைல் கடைகளிலும் கிடைக்கின்றன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X