தொடங்கும்போதே "என்னைத் தொடராதே'
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 ஆக
2012
00:00

வர இருக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10ல் “என்னைத் தொடராதே” (“Do Not Track”) என்னும் வசதியினை, பிரவுசர் இயங்கத் தொடங்கும் போதே, மாறா நிலையில் அளிக்க, மைக்ரோசாப்ட் முடிவெடு த்துள்ளது. இதன் மூலம் இதனைப் பயன்படுத்துபவர்களின் தனிமை காப்பாற்றப்படுகிறது. இதன் மூலம் எந்த தளங்களை நாம் பார்க்கிறோம், எத்தகைய பொருள் குறித்து தேடுகிறோம் என்ற தகவல்களை தர்ட் பார்ட்டி புரோகிராம்கள் அறிய முடியாது. நாம் சில வசதிகளுக்காக, சில கூடுதல் புரோகிராம்களை பிரவுசரில் பதியும் போது, அவை நம் தனிநபர் தேவைகளைக் கண்டறிய சில குக்கீஸ்களை பதித்து வைக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளன. இதன் மூலம், நம் விருப்பங்களை அவை சார்ந்த நிறுவனங்களுக்கு அளித்து வந்தன. அந்நிறுவனங்கள் தங்கள் பொருள் குறித்த தகவல்களை நாம் கேட்காமலேயே அளித்து வந்தன. எடுத்துக் காட்டாக, நீங்கள் விளையாட்டுக்குத் தேவையான பொருட்கள் குறித்து, பிரவுசர் மூலம் தகவல்களைத் தேடுகையில், நீங்கள் தேடும் பொருட்கள் குறித்த தகவல்கள், இந்த பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுப்பப்படும். அந்நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகள் குறித்த தகவல்களை தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருக்கும். இதற்கான கட்டணத்தை, நம் பிரவுசரில் இதற்கென குக்கீஸ்களைப் பதிந்த நிறுவனம் வாங்கிக் கொள்ளும். ஆனால், “Do Not Track” வசதி, பிரவுசரிலேயே மாறா நிலையில் கொடுக்கும் பட்சத்தில், இந்த தகவல் அறியும் வசதி கிடைக்காது. எனவே தான், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த முடிவிற்கு, இணையத்தில் விளம்பரங்களை வெளியிடும் நிறுவனங்கள் தங்கள் கவலையைத் தெரிவித்துள்ளன.
இந்த வசதியின் மூலம், நிறுவனங்களுக்கு என்னைத் தொடராதே என்ற வேண்டுகோள் தான் அனுப்பப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. சரியான சட்ட விதிமுறைகள் இருந்தால்தான், தனிநபர் உரிமையை மீறல் என்ற பிரிவில் இத்தகைய அத்து மீறல்களைத் தண்டிக்க முடியும் எனவும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ல் இது தேவைப்பட்டால் அமைத்துக் கொள்ளும் வசதியாகத்தான் தரப்படுகிறது.
பதிப்பு 10ல், இந்த வசதி மாறா நிலையில் தரப்பட்டாலும், பயன்படுத்துபவர்கள் விரும்பினால், இந்த வசதி இயங்குவதனை நிறுத்தலாம். அவ்வாறு நிறுத்துவதன் மூலம், தங்கள் விருப்பங்களை மற்றவர்கள் அறியத் தரும் வாய்ப்பினை வழங்குகிறார்கள் என்பது பொருளாகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X