சாம்சங் டெப்ளட் பிசி நோட் 800
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 செப்
2012
00:00

உலகில் பத்து நாடுகளில் மட்டுமே சாம்சங் தன் கேலக்ஸி டேப்ளட் பிசி நோட் 800 ஐ விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் இந்தியாவும் ஒன்று. இதனை காலக்ஸி நோட் 10.1 எனவும் அழைக்கின்றனர். பேனா, பேப்பர் கொண்டு இயக்குவது போல துல்லியமான இமேஜ் இதன் 10.1 அங்குல திரையில் கிடைக்கிறது. அடோப் நிறுவனத்தின் போட்டோ ஷாப் டச் இதில் பதியப்பட்டு இயங்குகிறது. இதன் அகல திரையின் ஒரு பாதியில் புரோகிராம் ஒன்றையும், இன்னொரு பாதியில் மற்றொரு புரோகிராமினையும் இயக்க முடியும். இதனால், பயனாளர்கள் வீடியோ ஒன்றைப் பார்த்துக் கொண்டே, இணைய தளப் பயன்பாட்டினையும் மேற்கொள்ள முடியும்.
இந்த திரையில் எஸ் நோட், இன்டர்நெட் பிரவுசர், வீடியோ பிளேயர், இமெயில், கேலரி, போலாரிஸ் ஆபீஸ் ஆகிய புரோகிராம்கள் சப்போர்ட் செய்யப்படுகின்றன. இவற்றுடன் அலாரம், எஸ்நோட், மியுசிக் பிளேயர், இமெயில், கால்குலேட்டர், வேர்ல்ட் கிளாக் ஆகியவற்றிற்கான மினி அப்ளிகேஷன் ட்ரே தரப்பட்டுள்ளது.
இதில் 1.4 கிகா ஹெர்ட்ஸ் குவாட் கோர் ப்ராசசர், 2 ஜிபி ராம் நினைவகம் தரப்பட்டுள்ளன. இதனால், மல்ட்டி டாஸ்க்கிங், உயர் ரக கிராபிக்ஸ் அப்ளிகேஷன், வேகமான செயல்பாட்டினை மேற்கொள்ள முடிகிறது. இதில் 5 எம்.பி. திறனுடன் கூடிய கேமரா இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் முன்புறமாக 1.9 மெகா பிக்ஸெல் கேமரா தரப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.39,900. இதனுடன் இணைத்துப் பயன்படுத்த டெஸ்க்டாப் ஸ்டாண்ட், பவுச், புக் கவர், வேகாம் பேனா, கார் சார்ஜர், ஸ்டைலஸ் பேனா, எச்.டி.டி.வி. அடாப்டர் ஆகியவை தனியே விலைக்குக் கிடைக்கின்றன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X