லினக்ஸ் வளர்ந்த வெற்றிப் பாதை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 செப்
2012
00:00

ஆகஸ்ட் 25ஆம் நாளை, லினக்ஸ் சிஸ்டத்தின் பிறந்த நாளாகக் கொண்டாடுவது வழக்கம். லினக்ஸ் தன் 20 ஆவது பிறந்த நாளை சென்ற ஆண்டில் கொண்டாடியது. அப்போது அதிக ஆரவாரமும் கலகலப்பும் இருந்தன. இப்@பாது இணையம், க்ளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் மொபைல் பிரிவுகளில்,லினக்ஸின் ஆட்சி பரவலாக உள்ளது. எனவே லினக்ஸ் ஆதரவாளர்கள் நிச்சயம் இந்த ஆண்டு இதனை அதிக மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம்.
1991 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் உருவெடுத்த லினக்ஸ், பல வெற்றி மைல்கற்களைத் தாண்டி பெரிய அளவில் வந்துள்ளது என்றால் அது மிகையாகாது. லினக்ஸ் கடந்து வந்த அந்த வேகமான முன்னேற்ற பாதையைச் சற்று இங்கே பார்க்கலாம்.
லினஸ் டோர்வால்ட்ஸ் ஆகஸ்ட் 25, 1991ல் லினக்ஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். செப்டம்பர் 17ல், முதல் கெர்னல் வெளியானது. அக்டோபர் 5ல் பொதுமக்களுக்கு லினக்ஸ் தரப்பட்டது.
அதே ஆண்டு, நவம்பரில் மான்செஸ்டர் கம்ப்யூட்டர் மையம், தன் இணைய தளத்தில், மக்களுக்கு லினக்ஸ் கெர்னலை இலவசமாக வழங்கியது. இப்போது இருப்பதைப் போல டிஸ்ட்ரிபியூஷன் என்று எதுவும் இல்லை. அப்போதிருந்த 5.25 அங்குல டிஸ்க்கெட்டில் இருந்து லினக்ஸை இயக்கலாம். பூட் டிஸ்க் கொண்டு முதலில் கம்ப்யூட்டரை இயக்கிவிட்டு, பின் கேட்கும் போது, அதனை எடுத்துவிட்டு, லினக்ஸ் டிஸ்க்கைச் செருகி, இயக்கலாம்.
1992 பிப்ரவரியில், முதல் முதலாக இன்ஸ்டால் செய்யக் கூடிய லினக்ஸ் வெளியிடப்பட்டது. டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக் கழகம் (Texas A&M University) TAMU என்ற லினக்ஸ் பயனாளர் குழுவினைக் கொண்டு வந்தது. அடுத்த பெரிய லினக்ஸ் வெற்றி, முதல் வர்த்தக ரீதியான வெளியீடு நவம்பர் 1992ல் கிடைத்தது. அடுத்ததாக, 1994ல், Debian GNU/Linux, S.u.S.E, மற்றும் Red Hat Linux எனத் தொடர்ந்து வெளியாயின. இவை இன்றும் தொடர்ந்து இயங்குவதுடன், மாற்றங்களையும் வசதிகளையும் தந்து கொண்டிருக் கின்றன. தொடர்ந்து வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றியின் ரகசியம் என்ன? காரணம் சொல்வதென்றால், டஜன் கணக்கில் நிறைய சொல்லலாம்.
லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முதுகெலும்பாக லினக்ஸ் கெர்னல் உள்ளது. இதன் குறியீடுகள் மிகச் சிறப்பும் எளிமையும் கொண்டவை. இவற்றைச் சுற்றி பல சாப்ட்வேர் தொகுப்புகள் அமைந்து, அவற்றை கெர்னல் இயக்கும் வகையில் அமைந்துள்ளன. எந்த கம்ப்யூட்டர் கட்டமைப்பிலும், எவ்வளவு பெரிய அமைப்பிலும் இயங்குவதே இதன் சிறப்பு.
லினக்ஸ் கம்யூனிட்டி என அழைக்கப்படும் குழுவில் பல வல்லுநர்களும், இதற்கென உழைப்பவர்களும் இன்னும் இயங்கி வருகின்றனர். இவர்களைச் சுற்றி, இவர்களின் திறனை உணர்ந்து, இவர்களை உற்சாகப்படுத்தி, லினக்ஸை மேம்படுத்துபவர்களும் உள்ளனர். எனவே லினக்ஸ் என்பது ஒரு சாப்ட்வேர் மட்டுமல்ல; அது ஒரு தொழில் நுட்ப வல்லுநர்களின் சமுதாயத்தின் பெயர் என்றால் மிகையாகாது. இதற்கு இணையாக ஒன்றை நாம் குறிப்பிட்டுக் கூற இயலவில்லை என்பதே இதன் வெற்றியின் ரகசியம் ஆகும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivaraman.B - Bangalore,இந்தியா
04-செப்-201218:00:36 IST Report Abuse
Sivaraman.B ஆம். தாங்கள் லினக்ஸ் பற்றியும் , இனி வரும் இதழ்களில் ஒரு பயிற்சி தொகுப்பு தொடங்கினால் நன்றாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
சிவமணி - பரேயல்லிஉத்தர்பிரதேஷ்,இந்தியா
03-செப்-201213:54:29 IST Report Abuse
சிவமணி விண்டோஸ் பற்றிய பல தகவல்கள் வழங்கும் நீங்கள் லினக்ஸ் பற்றியும் கொஞ்சம் தந்தால் நன்றாக இருக்கும். விண்டோஸ் ஓ.எஸ். பெற ரூ அறு ஆயிரங்கள் செலவாகிறது, அனால் லினக்ஸ் முற்றிலும் இலவசம். வெகு குறைவனவர்கலே லினக்ஸ் பயன் படுத்துவதால் இதனை மக்களிடம் மெதுவாக அறிமுகபடுத்தும் பணியை செய்தால் நன்று.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X