மாற்றப்பட்ட மைக்ரோசாப்ட் இலச்சினை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 செப்
2012
00:00

"பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்ற நம் பண்பாட்டு பழக்கத்தை, அண்மையில் மைக்ரோசாப்ட் மேற்கொண்டுள்ளது. சென்ற 25 ஆண்டுகளாக மாற்றாமல் வைத்திருந்த, தன் நிறுவனத்தின் இலச்சினையை, மைக்ரோசாப்ட், சென்ற ஆகஸ்ட் 23 அன்று மாற்றியுள்ளது. நான்கு வண்ண சதுர கட்டங்கள், முன்பு இருந்த எந்த வளைவும் இன்றி, தட்டையாகத் தரப்பட்டுள்ளன. அதே வரிசையில் இவை தரப்பட்டாலும், இப்போது இவை அனைத்தும் ஒரு கட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன. சம சதுரங்களாய், 90 டிகிரி கோணத்தில் அமைந்துள்ளன. இவை விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் தொடக்க திரையைப் போல் காட்சி அளிக்கின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பெயர், புதியதாக இந்நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ள மெட்ரோ Segoe எழுத்துவகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது முன்பு பயன்படுத்திய எழுத்து வகையைக் காட்டிலும், தடிமன் சற்று குறைவானது. விண்டோஸ் 8 இலச்சினையில் உள்ளதுவே இங்கும் உள்ளது.
இந்த ஆண்டு முழுவதும், பல்வேறு புதிய சாப்ட்வேர் தொகுப்புகள் அறிமுகப்படுத்தப் படும் நிலையில் இருக்க, தற்போது தன் நிறுவன இலச்சினையை மாற்றி, அதற்கு ஒரு தொடக்கத்தினைத் தந்துள்ளது மைக்ரோசாப்ட். விண்டோஸ் 8, சர்பேஸ் டேப்ளட், விண்டோஸ் போன் மற்றும் தொடர்ந்து அடுத்த ஆண்டில் ஆபீஸ் 2013 என முக்கியமான பல தொகுப்புகள் வெளியாக இருக்கின்றன. இந்த மாற்றம் இப்போது இலச்சினையில் தொடங்கி உள்ளது.
""கடந்த 25 ஆண்டுகளாக மாற்றாமல் இருந்த இலச்சினையை மாற்ற, இதுவே சரியான தருணம் என்று எண்ணி இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம்'' என்று மைக்ரோசாப்ட் பிராண்ட் பிரிவு நிர்வாகி ஜெப் ஹேன்சன் தெரிவித்துள்ளார்.
இலச்சினையில் தரப்பட்டுள்ள வெவ்வேறு வண்ணங்களில் அமைந்துள்ள சதுரங்கள், மைக்ரோசாப்ட் வெவ்வேறு வகையான சாப்ட்வேர் தயாரிப்புகளில் ஈடுபடுவதனைக் காட்டுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனாலும், இந்த இலச்சினை அனைத்து பிரிவுகளிலும் அமல்படுத்த சில வாரங்கள் ஆகலாம்; சில இடங்களில் பழைய இலச்சினை இருக்கலம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X