அதிகம் பார்க்கப்பட்ட இணைய தளங்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 செப்
2012
00:00

இந்தியாவில் இணைய பயன்பாட்டினை ஆய்வு செய்து வரும் காம் ஸ்கோர் நிறுவனம், அண்மையில் சமூக வலைத் தளங்கள் பயன்பாடு குறித்த முடிவுகளை அறிவித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் இணையம் பயன்படுத்தும் மொத்த நேரத்தில் நான்கில் ஒரு பங்கு நேரம் சமூக வலைத் தளங்களில் பயன்படுத்தப்படுவதாகக் கூறியுள்ளது.
சென்ற ஜூன் மாதத்தில், இந்திய இணையத்தைப் பயன்படுத்தியவர்களில், 95% பேர் கூகுள் தளங்களைப் பயன்படுத்தி உள்ளனர். அடுத்த நிலையில், 25.2% பேர் சமூக வலைத் தளங்களில் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளனர். கூகுள் தளத்தைப் பயன்படுத்தியவர்கள் 5 கோடியே 78 லட்சம் பேர். இவர்கள் 15 வயதுக்கும் மேற்பட்டவர்கள். பேஸ்புக் தளத்தைக் கண்டவர்கள் எண்ணிக்கை 5 கோடியே 9 லட்சம் பேராவர். இது மொத்த இணையப் பயனாளர்களில் 83.4% பேராகும். அடுத்ததாக, யாஹூ தளத்தை 65.5% பேர் பயன்படுத்தி உள்ளனர். மைக்ரோசாப்ட் தளத்திற்கு 48.1% பேர் வருகை புரிந்துள்ளனர்.
இந்த தளங்களுக்குச் சென்றவர்களில், அதிக நேரம் பயன்படுத்திய தளம் பேஸ்புக் தான். ஜூன் மாதத்தில், சராசரியாக நாளொன்றுக்கு 4 மணி நேரம் இந்த தளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் தளங்களில் இது 2.5 மணி நேரமாக இருந்துள்ளது. கூகுள் தளங்களில் அதிகம் பார்க்கப்பட்ட தளம் யு-ட்யூப் ஆகும்.
மேலே தரப்பட்டுள்ள புள்ளி விபரங்களில், பொது இணைய மையங்கள், மொபைல் போன்கள் மற்றும் பி.டி.ஏ சாதனங்கள் வழியாக இணையம் சென்றவர்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X