கம்ப்யூட்டரை மால்வேர் தாக்கினால் . . .
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 செப்
2012
00:00

தினந்தோறும் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் மால்வேர் புரோகிராம்கள் உருவாக்கப்பட்டு கயவர்களால் வெளியிடப்படுகின்றன. இவை நம் கம்ப்யூட்டரை வந்தடைந்து, நாம் அறியாமல், நம் பெர்சனல் தகவல்களைத் திருடி, இதனை அனுப்பியவர்களுக்கு அனுப்பி வைக்கின்றன. பல வேளைகளில் நம் கம்ப்யூட்டரையும் முடக்கி வைக்கின்றன.
இதில் என்ன வேடிக்கை என்றால், இத்தகைய மால்வேர் புரோகிராம்கள் தங்களைக் காத்துக் கொள்ளும் வேலியுடன் வடிவமைக் கப்பட்டு வருகின்றன. இதனால், புதிய ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் எதனையும், இந்த மால்வேர் பாதித்த கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட முடியாது. ஏற்கனவே பதிந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை, அப்டேட் செய்திடவும் முடியாது. அப்படியானால், எப்படித்தான், நம் கம்ப்யூட்டரை இந்த மால்வேர் புரோகிராமிடமிருந்து காப்பாற்றுவது? மால்வேரை அழிப்பது?
வேறு வழியில்லை; அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை சிடியில் இருந்தவாறே இயக்க வேண்டியதுதான். கம்ப்யூட்டரை இயக்கவும் முடியாமல், மால்வேர் முடக்கிவிட்டால் என்ன செய்திடலாம்? பல ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள், கம்ப்யூட்டரை இயக்கும் சிஸ்டத்துடனேயே (bootable malware scanners) கிடைக்கின்றன. இவற்றை, இன்னொரு கம்ப்யூட்டர் மூலம், இணையத்திலிருந்து சிடியில் பதிவு செய்து, எடுத்து வந்து, பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டரின் சிடி ட்ரைவ் மூலம் இயக்கி, மால்வேரை நீக்கலாம்.

இவற்றின் தள முகவரிகள்:



சிடி மட்டுமின்றி, பிளாஷ் ட்ரைவில் பதிந்து கூட இதே போல இயக்கலாம். இந்த வகையில் இரண்டு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் சிறப்பாக இயங்குகின்றன. அவை "காஸ்பெர்ஸ்கி ரெஸ்க்யூ டிஸ்க்' மற்றும் "எப்செக்யூர் ரெஸ்க்யூ சிடி'. இவை இயக்குவதற்கு எளிது என்பதுடன், தயாரித்த நிறுவனத்தால், பல்வேறு சோதனைகளுக்குட் படுத்தப்பட்டு கிடைக்கின்றன. இவற்றின் தள முகவரிகள்:
http://support.kaspersky.com/viruses/rescuedisk/
http://www.fsecure.com/en/web/labs_global/removaltools//carousel/view/142
இந்த இரண்டு புரோகிராம்களும் ஐ.எஸ்.ஓ. பைல்களாக, இந்த தளங்களில் கிடைக்கின்றன. இவற்றின் மீது கிளிக் செய்தவுடன், ஒரு யூசர் இன்டர்பேஸ் தரப்பட்டு, சிடியில் இதனை பதிவதற்கென வழி நடத்துகிறது. இதன் மூலம் பதிந்து எடுக்க இயலவில்லை என்றால், Active@ ISO Burner என்ற யுடிலிட்டி புரோகிராம் மூலம், சிடியில் பதிந்து எடுக்கலாம். இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்த பின்னர், கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட வேண்டும். அதன் பின்னர், மேலே கூறப்பட்ட ஐ.எஸ்.ஓ. பைல் மீது டபுள் கிளிக் செய்து, சிடியில் அதனைப் பதிய வேண்டும்.
இவற்றை யு.எஸ்.பி. ட்ரைவில் வைத்தும் இயக்கலாம். ஆனால், இந்த ஐ.எஸ்.ஓ. பைல்களை, பிளாஷ் ட்ரைவில் பதிந்து இயக்க, சில புரோகிராம்கள் தேவைப்படுகின்றன. காஸ்பெர்ஸ்கி ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஐ.எஸ்.ஓ. பைலைப் பதிய Utility to record Kaspersky Rescue Disk 10 to USB devices என்னும் புரோகிராம் தேவைப்படுகிறது. இதனை http://rescuedisk.kasperskylabs.com/rescuedisk/updatable/rescue2usb.exe என்னும் தளத்திலிருந்து பெற்றுக் கொண்டு, இன்ஸ்டால் செய்து, பயன்படுத்தலாம். எப் செக்யூர் ஆண்ட்டி வைரஸ் ஐ.எஸ்.ஓ. பைலை, யு.எஸ்.பி. ட்ரைவில் பதிந்து பெற, Universal USB Installer என்னும் புரோகிராம் தேவைப்படும். இதனை http://www.pendrivelinux.com/downloads/UniversalUSBInstaller/UniversalUSBInstaller1.9.0.6.exe என்ற முகவரியில் பெற்று, இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X