நோக்கியாவை முந்தும் சாம்சங்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 அக்
2012
00:00

கொரிய நாட்டைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம், மொபைல் போன் விற்பனையில், நோக்கியாவை பின்னுக்குத் தள்ளி, இந்தியாவில், முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மொபைல் போன் விற்பனை குறித்து ஆய்வு நடத்திய கார்ட்னர் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது, 2011 ஆம் ஆண்டில், 8 கோடியே 66 லட்சம் மொபைல் போன்களை சாம்சங் விற்பனை செய்துள்ளது. இதன் ஆண்டு விற்பனை உயர்வு 25.9%. மொத்த மொபைல் போன் விற்பனையில், 2012 ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில், 20.7% பங்கினைக் கொண்டுள்ளது. 8 கோடியே 32 லட்சம் போன்களை விற்பனை செய்த நோக்கியா 19.8% பங்கினைக் கொண்டிருந்தது.
உலக அளவில், 2012 முதல் மூன்று மாதங்களில், விற்பனை 2% குறைந்து, 41 கோடியே 91 லட்சம் மொபைல் போன்கள் விற்பனையாயின. இதற்குக் காரணம், நிறுவனங்கள் புதிய மாடல்களைக் கொண்டு வராததுதான். தங்கள் போன்களை மேம்படுத்த விரும்பியவர்கள், அடுத்த மூன்று அல்லது ஆறு மாதங்களில் வர இருக்கும் புதிய மாடல்களுக்காகக் காத்திருக்கின்றனர். அண்மையில் அறிமுகமாகி வரும் ஆப்பிள் ஐபோன் 5, புதிய ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் போன் சிஸ்டங்கள், வாடிக்கையாளர்கள் நடுவில் புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன.
முதல் மூன்று மாதங்களில், ஸ்மார்ட் போன் விற்பனை வெகு வேகமாக உயர்ந்திருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் விற்பனையானதைக் காட்டிலும் 44.7% அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. விற்பனையான ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கை 14 கோடியே 44 லட்சத்தினைத் தொட்டது. இந்த ஸ்மார்ட் போன்களில், பாதிக்கும் மேலாக (56.1%) ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தைக் கொண்டிருந்தன. ஆப்பிள் நிறுவனத்தின், ஐ.ஓ.எஸ். சிஸ்டம் 22.9% போன்களில் இருந்தன. சிம்பியன், படா, ஆர்.ஐ.எம். ஆகியவை முறையே 8.6%, 2.7% மற்றும் 6.9% பங்கினைக் கொண்டிருந்தன. மைக்ரோசாப்ட் 1.9% போன்களில் மட்டுமே இடம் பெற்றிருந்தது.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜா Abdul - madurai,இந்தியா
14-அக்-201218:26:58 IST Report Abuse
ராஜா  Abdul I love samsung. I said to my frie n ds that samsung had beated Nokia. But no one beleived. But this msg can believe my frnds. Thanks for Dinamalar. Very very thanks.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X