இரண்டில் ஒருவர் தான் விண்டோஸ் 8
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 அக்
2012
00:00

விண்டோஸ் 8 இந்த மாதம் 26 ஆம் நாள் பொதுமக்களுக்கு வர்த்தக ரீதியாக வெளியிடப்பட இருக்கிறது. ஏற்கனவே விண்டோஸ் 8 நுகர்வோர் பதிப்பினை, பல லட்சம் பேர் உலகெங்கும் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கென ஊணிணூதட்ண்தீடிணஞீணிதீண்8.ஞிணிட் என்ற முகவரியில் ஒரு தளம் இயங்கி வருகிறது. விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு உதவும் தளம் எனத் தானாகவே பிரகடனப்படுத்திக் கொண்டு, சந்தேகங்களைத் தீர்த்து வருவதுடன், விண்டோஸ் 8 பயன்பாடு குறித்த கருத்துக்களையும் கேட்டு வருகிறது.
இந்த தளத்தில் உறுப்பினர்களாகப் பதிந்தவர்களிடையே, அண்மையில் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை எத்தனை பேர் தொடர்ந்து பயன்படுத்துவீர்கள் என்று கேட்டு ஒரு கணிப்பு எடுக்கப்பட்டது. அதில் கருத்து தெரிவித்தவர்களில், இரண்டுக்கு ஒருவர் தான் விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறுவோம் எனச் சொல்லி இருக்கின்றனர். விண்டோஸ் 7 53%, விண்டோஸ் 8 25%, எக்ஸ்பி 20%, மற்ற சிஸ்டம் 2%. விண்டோஸ் 7 சிஸ்டத்தினை இன்னும் முழுமையாகவும், நம்பிக்கையுடனும் பயன்படுத்திய பின்னர், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு தாவலாம் என்று பலரும் கூறி உள்ளனர். இதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கையிலேயே, விண்டோஸ் 8 சிஸ்டத்தினையும் பயன்படுத்திப் பார்க்க பலர் முடிவு செய்துள்ளனர். ஆனால், விண்டோஸ் 7 சிஸ்டம் மேம்படுத்தப்படுகையில், அதனை விட்டுவிடாமல் மேம்படுத்திப் பயன்படுத்த வேண்டும். விண்டோஸ் 8 சிஸ்டம் வரவால், அதன் பயன்பாடு முடிந்துவிடக் கூடாது எனவும் பல வாடிக்கையாளர்கள் கூறி வருவதாக, இந்தக் கணிப்பு தெரிவிக்கிறது.
நிறுவனங்களைப் பொறுத்தவரை, விண்டோஸ் 8 சிஸ்டத்தை முழுமையான பயன்பாட்டுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள், 20% முதல் 25% வரைதான் இருப்பார்கள் என்று தெரிய வந்துள்ளது. எனவே, விஸ்டாவிற்குக் கிடைத்த வரவேற்பு தான் விண்டோஸ்8 சிஸ்டத்திற்கும் கிடைக்கலாம். விண்டோஸ் எக்ஸ்பி அல்லது விண்டோஸ் 7 போல ஒரு அமோக வரவேற்பினை விண்டோஸ்8 பெறாது எனவும் தெரிய வந்துள்ளது.
இதற்குக் காரணம் என்ன? விண்டோஸ் 8 தொழில் நுட்ப ரீதியாக ஒரு பெரிய மாற்றத்தைத் தந்துள்ளது. ஆனால், பயனாளர் ரீதியாக பெரிய அளவில் முன்னேற்றமும் மேம்பாடும் இல்லை. இதன் இருவகை யூசர் இன்டர்பேஸ், பயனாளர்களைக் குழப்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
விலை ரீதியாகவும் விண்டோஸ் 8, அதிக வரவேற்பினைப் பெறத் தயங்குகிறது. 35% பேர் விலை நிச்சயம் அதிகமாக இருக்கும் என்ற எண்ண ரீதியாக தயங்கியுள்ளனர். புதிய ட்ரைவர்களுக்கும், ஹார்ட்வேர் மேம்பாட்டிற்கும் பணம் செலவழிக்க வேண்டும் எனவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 26% பேர் ஹார்ட்வேர் தேவையால் பின்வாங்குகின்றனர். தாங்கள் பயன்படுத்தும் மற்ற சாப்ட்வேர் புரோகிராம் இதில் இணைந்து இயங்காது என 25% பேர் விலகுகின்றனர்.
அப்படியானால், விண்டோஸ் 8 சிஸ்டம் பயனாளர்கள் வியக்கும் அளவிற்கான சிறப்புகளைக் கொண்டிருக்கவில்லையா என்ற
கேள்விக்கு, பல புதிய அம்சங்கள் பட்டியலிடப்பட்டு வருகின்றன. அவை: 1. வேகமான இயக்க தொடக்கம் மற்றும் முடித்து வைப்பு 55%; எளிதான இன்ஸ்டலேஷன் 50%; இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10 35%; ரீஸ்டார்ட், ரெஸ்டோர் சிறப்பு திறன் 28%; இதனுடன் இணைந்த அப்ளிகேஷன் இணைப்பு 26%; விண்டோஸ் எக்ஸ்புளோரர் 25%; அப்ளிகேஷன் ஸ்டோர் 23% மற்றும் மெட்ரோ 22%.
ஆனாலும், விண்டோஸ் 8 மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று,கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரலாற்றில், குறிப்பாக விண்டோஸ் வரிசையில் மிகச் சிறப்பான ஓர் இடத்தைப் பெறும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X