இந்த வார இணையதளம் - குழந்தைகளுக்கான இணைய தளம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 அக்
2012
00:00

கலை, அறிவியல் மற்றும் நம் மூளை இவை குறித்த தகவல்களை குழந்தைகள் விரும்பும் வகையில், ஓர் அதிசய பயணமாகத் தருகிறது http://wondermind.tate.org.uk/ என்ற முகவரியில் உள்ள ஓர் இணைய தளம். இந்த தளத்தில் நுழைந்தவுடன், இதில் கிடைக்கும் Your Wondermind Play என்ற பட்டனை அழுத்தி காட்டப்படும் விடீயோ காட்சியினை ரசிக்கலாம். இதில் மூளை இயக்கம் குறித்து அனைத்து தகவல்களும் தரப்படுகிறது. இந்த வீடியோவில் பார்ப்பவர்களையும் விடையளிக்கச் செய்கிறது. வீடியோ கேட்கும் கேள்விகள் அனைத்தும் மூளையின் செயல்பாடு குறித்தே உள்ளன.
இந்த வீடியோவினைப் பார்த்து, கேள்விகளுக்குப் பதில் அளித்த பின்னர், தளத்தின் பல பாகங்களுக்குச் செல்லலாம். The Hedge Maze, The Forest, The Tea Party, மற்றும் The Garden எனப் பல பாகங்கள் உள்ளன. ஒவ்வொரு பிரிவின் நுழை வாயிலிலும், மூளையின் இயக்கம் குறித்து அரிய தகவல்கள் தரப்படுகின்றன.
முதல் பிரிவான The Hedge Mazeல் மூளை எப்படி தன்னைச் சுற்றியுள்ள வெளியை உணர்ந்து செயல்படுகிறது என்பது வீடியோவாகவும், விளையாட்டாகவும், கேள்வி பதிலாகவும் காட்டப்படுகிறது. The Forest என்ற இரண்டாவது பிரிவில் தொடங்கும் விளையாட்டு, முயல் ஒன்றைக் காட்டில் பிடித்திட உதவி செய்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வழிகளை அவ்வப்போது மாற்றி மாற்றி அமைக்க வேண்டும். விளையாட்டு முடிந்தவுடன், நம் மூளை எப்படி தன் வழி முறைகளை, நம் அனுபவத்தின் அடிப்படையில் தொடர்ந்து மாற்றி அமைத்து வருகிறது என்பதனைக் காட்டுகிறது.
The Tea Party என்ற பிரிவு இதே போல விளையாட்டு ஒன்றை வழங்கி, இறுதியில் மூளை எப்படி ஒரு மொழியை உணர்ந்து கிரஹித்துக் கொண்டு, பதிய வைத்துக் கொண்டு செயல்படுகிறது என்பதனைக் காட்டுகிறது.
அடுத்ததாக உள்ள The Garden என்பது ஒரு சீட்டு விளையாட்டு. குழந்தைகள் கேள்விகளுக்கான பதிலை கார்டுகளை இணை சேர்ப்பதன் மூலம் தர வேண்டும். இறுதியில் காட்டப்படும் வீடியோவில், மூளையில் எந்தப் பகுதி நினைவகமாகச் செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது.
இன்னும் நிறைய பிரிவுகளில் கலை மற்றும் அறிவியல் குறித்த தகவல்கள் தரப்படுகின்றன. முதல் தொடக்க வழித் திரையிலிருந்தே இவற்றையும் காணலாம். நம்மைக் காட்டிலும் குழந்தைகளுக்கு இந்த தளம் மிக மிகப் பயனுடையதாக உள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X