ஜிமெயில் இணைப்புகளிலும் தேடலாம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 அக்
2012
00:00

நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துபவரா? பயன்படுத்தாதவர் வெகு சிலரே இருக்க முடியும். பல்வேறு வசதிகளைத் தரும் கூகுளின் வெப் மெயில் தளமான ஜிமெயில், இப்போது புதியதாக இன்னொரு வசதியையும் தருகிறது. இதுவரை நமக்கு வந்த இமெயில் செய்திகளைத் தேடல் மூலம் பெற்று, நாம் தேடும் மின்னஞ்சல் செய்திகளைப் பெற முடியும். ஏதேனும் இணைப்பினை மீண்டும் பெற வேண்டும் எனில், அனுப்பியவரின் பெயர் அல்லது அஞ்சல் செய்தியின் சொற்கள் வழி தேடிப் பெற்று வந்தோம்.
தற்போது, மெயில் உடன் இணைக்கப்பட்டுள்ள டாகுமெண்ட்கள் எந்த பார்மட்டில், (டாக், பி.டி.எப்.,) இருந்தாலும், அவற்றிலும் தேடலை நடத்தி நாம் விரும்புவதைப் பெறலாம். தேடல் கட்டத்தில் has:attachment என்றபடி அமைத்து, அதன் பின்னர், தேடலுக்கான சொல்லை அமைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒபாமா (Obama) என்ற சொல் உள்ள இணைப்பு கோப்பினை அறிய, has:attachment Obama எனத் தர வேண்டும். நீங்கள் இந்த தேடலை பி.டி.எப். பைல்களில் மட்டும் தேட விரும்பினால், has:attachment filename:PDF Obama என அமைக்கப்பட வேண்டும்.
முன்பு அட்டாச்மெண்ட் பைல்களில் தேட வேண்டும் எனில், அவை டெக்ஸ்ட் அல்லது எச்.டி.எம்.எல். பைல்களாக இருக்க வேண்டும். Word, Excel, and Powerpoint போன்ற பார்மட் கொண்ட பைல்களில் தேட முடியாது.
தற்போது இந்த வசதி தரப்பட்டுள்ளது. இது இன்னும் பன்னாட்டளவில் தரப்படவில்லை என்றாலும், விரைவில் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X