பர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 அக்
2012
00:00

நாம் வேலை மேற்கொள்ள சரியான மேஜையாக, கூகுள் உள்ளதனை அது கொண்டிருக்கும் சிறப்பு வசதிகளைப் பட்டியல் போட்டு தந்தது சிறப்பாக இருந்தது. இன்னும் இது போன்ற பல வசதிகளை, கூகுள் எதிர்காலத்தில் தரும் என்பது உறுதி.
பீட்டர் டேனியல், பம்மல்.

கூகுள் தளம் கூடுதலாக நமக்கு வழங்கும் சிறப்பு வசதிகளை வழங்கியது போல, அதன் தேடல் வழிகளில் உள்ள சிறப்பு வசதிகளையும் பட்டியலிடவும். தேடலில் சில நுணுக்கமான குறியீடுகளை அமைத்து, நம் தேடல்களையும் நாம் விரும்பும் வகையில் பெறலாம் என்று சொல்கின்றனரே.
என்.டி. அபீதா, திருநின்றவூர்.

கூகுள் தரும் வசதிகளில் மிகவும் பயனுள்ளது அதன் கால்குலேஷன் மற்றும் கன்வர்ஷன் வசதிதான்.
சி. வெங்கடேஷ் மணி, சின்னமனூர்.

இன்டர்நெட்டுக்கு நாடுகளுக் கிடையே நடக்கும் போட்டி யினால், எந்த தீங்கும் வரக்கூடாது என்று எதிர் பார்ப்போம். இன்டர்நெட் முழுமையும் கிராஷ் ஆனால், உலகின் இயக்கமே திசை மாறிவிடும். இந்த ஆபத்தினை உலகெங்கும் உள்ள சிறுவர்களுக்கு தெரியப் படுத்தினால், பிற்காலத்தில் இதன் மூலம் ஒற்றுமையான உலகம் உருவாகும்.
ஆர். ஸ்மிதா செல்வி, மதுரை.

உங்கள் டிப்ஸைப் படித்த பின்னரே, இன்னொரு வெப் மெயிலில் இருந்து புள்ளிகளுடன் ஜிமெயில் மின்னஞ்சலுக்கு மெயில் அனுப்பினேன். எந்த தடையும் இன்றி வந்து சேர்ந்தது. இத்தனை நாட்களாக இது அறியாமல் இருந்திருக்கிறோமே என்ற எண்ணமும் ஏற்பட்டது.
கே. மணிவாசகம், மதுரை.

விண்டோஸ் 8 சிஸ்டம் நம்மிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. அது குறித்த உங்களுடைய தொடர் கட்டுரைகள் தினமலர் வாசகர்கள் அதனை அதிகபட்ச திறனுடன் பயன்படுத்த உதவும் என்பதில் ஐயமில்லை.
செ. அனுப்ரியா, சென்னை.

முதல் முறையாக மொபைல் போன் சந்தாதாரர்கள் குறைந்துள்ளனர் என்ற தகவல், மக்கள் அதனை முறையாகப் பயன்படுத்த தொடங்கி உள்ளதன் அடையாளமே. இது நல்லதற்கே.
சி.கே. உத்தம் குமார், திருப்பூர்.

அளவுகளை மற்ற அலகுகளுக்கு மாற்றித் தரும் இணைய தளம், அனைத்து தேவைகளையும் நிறைவேற்றாவிட்டாலும், மிக எளிமையாகச் செயலாற்றுவதால், பயன்படுத்தும் விருப்பம் அதிகரிக்கிறது.
கே. ஜீனத் பேகம், திருப்பூர்.

மின்னஞ்சல் அனுப்புவது பற்றி நீங்கள் தந்துள்ள டிப்ஸ் யாவும் நல்ல அறிவுரைகளே. நான் ஏற்கனவே இதனால் பாதிக்கப்பட்டதன் அடிப்படையில் இதனைக் கூறுகிறேன். அருமையான ஆலோசனைகளுக்கு நன்றி.
மா. ஆரோக்கியராஜ், புதுச்சேரி.

டாகுமெண்ட்களில் டேப் நீக்க கொடுத்த டிப்ஸ் போல, மற்ற பார்மட்களையும் நீக்க குறிப்புகளைத் தரவும்.
சுந்தர பாண்டியன், சிவகாசி.

சிஸ் ரெக், நிப்பிள் போன்றவை எல்லாம், இத்தனை ஆண்டுகள் கம்ப்யூட்டரில் பழகியும் தெரியாமல் இருந்த சின்னஞ்சிறு விஷயங்கள். தங்கள் மூலம் தெரிந்து கொள்ளும் போது மகிழ்ச்சியாக உள்ளது. இதைப் போல வாராவாரம் நாம் அறியாமல் இருக்கும் சில்லரை விஷயங்கள் குறித்து எழுதவும்.
மே. ஆண்டித்தேவன், உசிலம்பட்டி.

விண்டோஸ் 7 மற்றும் ஆபீஸ் 2007 புரோகிராம்களுக்கான டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் நிறைய தருமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு வாரமும் இவை குறைந்து கொண்டே வருகின்றன.
கா.சிகாமணி, மேலூர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X