கேள்வி- பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 அக்
2012
00:00

கேள்வி: கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் தகவல்கள் உள்ள பைல்களை அழித்த பின்னரும், அதனை மற்றவர்கள் தேடிக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறதே. என் வியாபாரத்தில் பயன்படுத்தி வரும் கம்ப்யூட்டரை விற்பனை செய்தால், அழித்த என் வியாபார பைல்களை மற்றவர்கள் படிக்கும் வாய்ப்பு ஏற்படுமா? இதற்கான தீர்வு என்ன?
சி.எஸ். துரைராஜ், கோயமுத்தூர்.
பதில்:
நீங்கள் சொல்வது உண்மையே. இதனாலேயே, பிறர் படிக்கக் கூடாத தகவல்கள் பதிந்த ஹார்ட் டிஸ்க்கை, பைல்களை அழித்த பின்னரும், கழட்டிக் கொண்டு, கம்ப்யூட்டரை விற்பவர்கள் உள்ளனர். இதற்குப் பதிலாக, பைல்களைப் பிறர் மீண்டும் படிக்க இயலாதவகையில் அழிக்கக் கூடிய சாப்ட்வேர் புரோகிராம்களைப் பயன்படுத்தலாம். தாள்களை இது போல குப்பைக் கூழமாகக் கிழித்துப் போடும் shredder மெஷின்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். அதே போல இந்த புரோகிராம்களும் செயல்படுகின்றன. பல புரோகிராம்கள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றில் http://www.pcworld.com/downloads/file/fid,7768order,1page,1/description.html?tk=picks என்ற தளத்தில் கிடைக்கும், super shredder என்ற புரோகிராம் சிறப்பாகச் செயல்படுகிறது. இதே போல இயங்கும் மற்ற புரோகிராம்களாக, File shredder, Wipe&Delete, DBAN ஆகியவற்றைச் சொல்லலாம். இவை மூலம் அழிக்கும் முன் உங்களுக்குத் தேவைப்படும் பைல்களை ஒதுக்கி வைத்து பேக் அப் காப்பி எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.

கேள்வி: ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் டேப்ளட் பிசி ஒன்றை வாங்கத் திட்டமிட்டுள்ளேன். ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் எந்த பதிப்பு சிறந்தது என்று தெளிவு படுத்தவும். ஒவ்வொரு பதிப்பிற்கும் இடையே செயல்பாட்டில் வேறுபாடு இருக்குமா?
என். சந்தீப் குமார், சென்னை.
பதில்:
ஆண்ட்ராய்ட் டேப்ளட் வாங்கத் திட்டமிடும் உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன். ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் நிறைய வசதிகள் உள்ளன. உங்கள் தேவைக்கேற்ப அதனை அமைத்துக் கொள்ளலாம். பதிப்பு 2 முதல் 4 வரை கிடைக்கின்றன. எதனை வாங்கினாலும், அடுத்த உயர் பதிப்பிற்கு மேம்படுத்திக் கொள்ளலாம். இருப்பினும் சில குறிப்புகளைத் தருகிறேன். 1. ஆண்ட்ராய்ட் 2.3 பதிப்பிற்கு முந்தையதை (Froyo, Eclair, Donut) வாங்க வேண்டாம். இது நன்றாக இயங்கினாலும், தற்போதைய பல அப்ளிகேஷன் புரோகிராம்களை இது இயக்காது. ஜிஞ்சர் ப்ரெட் என அழைக்கப்படும் ஆண்ட்ராய்ட் 2.3, சோஷியல் நெட் வொர்க், வாய்ஸ் ஓவர் ஐ.பி. போன்றவற்றை இயக்கும். ஆண்ட்ராய்ட் 3.0 (Honeycomb) சிஸ்டம் யு.எஸ்.பி. இணைப்புகளை (கீ போர்ட், ஜாய்ஸ்டிக் போன்றவை) எடுத்துக் கொள்ளும். ஐஸ்கிரீம் சாண்ட்விச் என அழைக்கப்படும் ஆண்ட்ராய்ட் 4.0 அண்மைக் காலத்தில் வெளியான ஒன்று. டூயல் மற்றும் குவாட் கோர் ப்ராசசர்களை சப்போர்ட் செய்திடும். குறிப்பிட்ட டேப்ளட் பிசியை வாங்கும் முன், அதனைத் தயாரித்து வழங்கும் நிறுவனம், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் அப்டேட் செய்வதற்கு உதவி செய்திடுமா என்பதனை உறுதி செய்திடவும்.

கேள்வி: பைல்களின் பார்மட்டை மாற்றும் ஒரு தளம் இமெயில் வழியாகவே மாற்றித் தரும் என தகவல் முன்பு தரப்பட்டது. அந்த தளம் குறித்த தகவல்களை மீண்டும் விளக்கமாகத் தரவும்.
சி. சௌம்யா கிருஷ்ணன், கோவை.
பதில்:
இதனை அடிக்கடி நீங்கள் பயன்படுத்தி வந்தால், உங்களுக்கு நினைவிருக்கும். இருப்பினும் மீண்டும் அந்த தகவல்களைத் தருகிறேன். இதனைத் தருவது www.zamzar.com என்ற இணையதளம். முன்பு இந்த தளம் சென்று, பைலை அனுப்பி பின் பார்மட் மாற்றப்பட்ட பைலை, நம் மின்னஞ்சல் வழியாகப் பெற வேண்டும். pdf>doc, docx>doc, jpeg>gif எனப் பலவகை பார்மட்களுக்கிடையேயான மாற்றங்களை இந்த தளம் தருகிறது. இப்போது மின்னஞ்சல் வழியாகவே இதனை மேற்கொள்ளலாம். பிடிஎப் பைல் ஒன்றை டாகுமெண்ட் பைலாக மாற்ற, doc÷zamzar.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் பைலை அட்டாச் செய்து அனுப்ப வேண்டும். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு அட்டாச் செய்து அனுப்பிய பைலை மாற்ற வேண்டும் எனில், இந்த முகவரிக்கு, பார்வேர்ட் செய்து பெறலாம். எந்த பார்மட்டில் வேண்டுமோ, அந்த பார்மட்டின் பெயருடன், இந்த தளத்திற்கான மின்னஞ்சல் முகவரியை அமைத்து அனுப்ப வேண்டும். எந்த பார்மட்களை இந்த தளம் மாற்றும் என, இந்த தளம் சென்று அறிந்து கொள்ளலாம். இலவசமாக மாற்றிப் பெறும் பைலின் அளவு ஒரு எம்பிக்குள்ளாக இருக்க வேண்டும். கூடுதல் எனில், கட்டணம் செலுத்த வேண்டும்.

கேள்வி: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், ஒரு கணக்கின் விடையை செல் ஒன்றில் அமைக்கும் வகையில் பார்முலா கொடுக்கையில், சில வேளைகளில் சரியாகக் கிடைக்கிறது. சில வேளைகளில் ரவுண்ட் ஆப் செய்யப்பட்டு காட்டப்படுகிறது. சில நேரங்களில் சயின்டிபிக் நொட்டேஷனாகக் காட்டுகிறது. ஏன் இப்படி பலவாரியாக அமைகிறது? இதனை எப்படி சரிப்படுத்தவது?
டி.கீர்த்தனன், திருப்பூர்.
பதில்:
எக்ஸெல் மிகத் தெளிவாகத்தான் தன் செயல்பாட்டினை மேற்கொள்கிறது. ஒரு ஒர்க் ஷீட்டை முதலில் உருவாக்குகையில், எக்ஸெல் ஜெனரல் பார்மட்டை பின்பற்றுகிறது. எண்கள் பத்து இலக்கங்களாக அமைக்கும் வகையில் உள்ளதே ஜெனரல் பார்மட். புள்ளிக்கு வலது அல்லது இடது பக்கம் என்றிராமல் மொத்தம் பத்து இலக்கங்கள் அமைக்கப்படும். இலக்கங்கள் 10க்கு மேல் கொண்டதாக அமைக்கப்பட்டாலோ அல்லது கிடைக்கும் விடை 10 இலக்கங்களுக்கு மேல் இருந்தாலோ அது அடுத்த எண்ணுக்கு ரவுண்ட் ஆப் செய்யப்பட்டு காட்டப்படும். புள்ளிக்கு இடது பக்கம் அதிக இலக்கங்கள் இருந்தால், அதற்கேற்ற சயின்டிபிக் நொட்டேஷன் முறையில் எண் காட்டப்படும். இதனை நீங்கள் மாற்ற வேண்டும் என்றால் செல் பார்மட்டினை மாற்ற வேண்டும்.

கேள்வி: ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் பிரவுசர் பல பதிப்புகளில் வருவது போல, நம் வேர்ட் பைல்களையும், திருத்தங்கள் மேற்கொண்டதின் அடிப்படையில் பல பதிப்புகளாக சேவ் செய்திடலாம் என்று படித் துள்ளேன். இதனை எப்படி மேற்கொள்வது?
டி.காஞ்சனா, சென்னை.
பதில்:
மிக அருமையான கேள்வி கேட்டுள்ளீர்கள். பலரும் பயன்படுத்தாத ஒரு வசதி இது. ஆய்வு மாணவர்கள், நிறுவன நிர்வாகிகள் அவசியம் தெரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டிய விஷயம் இது. நன்றி. இனி விஷயத்திற்கு வருவோம். வேர்ட் டாகுமெண்ட்களைத் தயார் செய்கையில், டாகுமெண்ட் ஒன்றில் நாம் ஏற்படுத்தும் மாற்றங்களுக்கேற்ப அதன் வெவ்வேறு பதிப்புகளை (Versions)ஒரே பைலில் தயார் செய்து சேவ் செய்திடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நாம் எப்போது என்ன முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தினோம் என்று அறிந்து அவற்றை ஏற்றுக் கொள்ளலாம். இதற்கு மாற்றங்களை ஏற்படுத்திய பின் File மெனு சென்று Version என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது வெர்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ் காட்டப்படும். அதில் Save Now என்பதைக் கிளிக் செய்திடவும். உடன் Save Version என்ற பாக்ஸ் காட்டப்பட்டு, அதில் அந்த வெர்ஷனுக்கான உங்கள் குறிப்புகளை நீங்கள் அமைக்கலாம்.
இதில் எடுத்துக்காட்டாக, நீங்கள் எதற்காக இந்த வெர்ஷனை, அந்த நிலையில் சேவ் செய்கிறீர்கள் என எழுதி வைக்கலாம். பின் குளோஸ் கிளிக் செய்து மூடினால், வேர்ட் அந்த வெர்ஷனை சேவ் செய்திடும். இது உங்கள் டாகுமெண்ட் அந்த நேரத்தில் எப்படி தோற்றமளிக்கிறது என்பதேயாகும். பின் மீண்டும் நீங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் இதில் ஏறாது. இதில் என்ன சிறப்பு என்றால் அனைத்து வெர்ஷன்களும் ஒரே பைலில் இருக்கும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X