எக்ஸெல் டிப்ஸ்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 ஆக
2010
00:00

ஒர்க்ஷீட்டில் நாளைய தேதி:
எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், மறுநாள் தேதியை அமைக்க விரும்பினால், அதனை மிகச் சிறிய கணக்கினை இணைப்பதன் மூலம் மேற்கொள்ளலாம். நீங்கள் தயாரிக்கும் ஒர்க்ஷீட்டில், சில காரணங்களுக்காக, ஒரு குறிப்பிட்ட செல்லில், மறு நாள் தேதியை அமைக்க விரும்புகிறீர்கள். இதற்கு இன்றைய தேதிக்கான பார்முலாவில் சிறிய மாற்றத்தினை ஏற்படுத்தினால் போதும். அந்த பார்முலா =TODAY() + 1 என அமையும். இந்த பார்முலாவினைக் கவனித்தால் ஒன்று தெரியவரும். பார்முலா, முதலில் அன்றைய தேதியைக் கணக்கிடுகிறது. பின் அதனுடன் 1 ஐக் கூட்டுகிறது. இதனால் மறுநாளைய தேதி கிடைக்கிறது. இவ்வாறே இதில் மேலும் மாற்றங்களை ஏற்படுத்தி, நாம் நமக்குத் தேவையான நாளுக்கான தேதியைக் கொண்டு வரலாம். எடுத்துக் காட்டாக, 14 நாட்களுக்குப் பின்னர் உள்ள நாளுக்கான தேதியைக் கொண்டுவர, +14 எனத் தரலாம்.
விருப்பப்படி பிரித்து பிரிண்ட் செய்திட:
பலவிதத் தகவல்களுடன் ஒரு பெரிய ஒர்க்புக் ஒன்றை எக்ஸெல் தொகுப்பில் உருவாக்கி இருக்கிறீர்கள். இதனை அச்சுக்கு அனுப்புகையில், ஒத்த தகவல்கள் ஒரே பக்கத்தில் பிரிண்ட் செய்யப்பட்டால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் என விரும்புகிறீர்கள். எடுத்துக் காட்டாக ஓரிடத்தில் கொள்முதல் பொருட்கள் குறித்த தகவல்கள் பத்து வரிசையில் உள்ளன. ஆனால் அச்சிடுகையில் அவை மூன்று, ஏழு என பிரித்து அச்சிடப்படுகிறது. இவை அனைத்தையும் ஒரே பக்கத்தில் கொண்டு வர விருப்பம் இருந்தால் கீழே குறித்துள்ளபடி செயல்படவும்.
இதற்கு எந்த வரிசை அடுத்த பக்கத்திற்குத் தள்ளப்பட வேண்டும் என விரும்புகிறீர்களோ அந்த வரிசையில் கர்சரை வைத்து பின் "Insert" தேர்ந்தெடுத்து அதில் "Page Break"  பிரிவில் கிளிக் செய்திடவும். இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த செல் உள்ள வரிசையின் மேலாக புள்ளிகளால் ஆன ஒரு கோடு அமைக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். இந்த வரிசை அச்சில் அடுத்த பக்கத்திற்குச் செல்லும் என்பதைக் காட்டவே இந்த கோடு அங்கு உருவாக்கப்படுகிறது. ஆனால் இந்த கோடு அச்சில் வராது.
எக்ஸெல் – ஆல்ட்+ஷிப்ட்:
இங்கே எக்ஸெல் தொகுப்பில் ஆல்ட்+ஷிப்ட் கீகளுடன் பங்சன் கீகளை அழுத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைப் பார்க்கலாம்
F1 +ALT+SHIFT : புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும்.
F2 +ALT+SHIFT :அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும்.
F3 +ALT+SHIFT :நெட்டு மற்றும் படுக்கை வரிசை லேபிள்கள் பயன்படுத்தி பெயர்களை உருவாக்கலாம்.
F6 +ALT+SHIFT :ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக் விண்டோக்கள் திறக்கப்பட்டிருப்பின் தற்போதைய ஒர்க்புக்கிற்கு முந்தைய ஒர்க்புக் விண்டோ திறக்கப்படும்.
F9 +ALT+SHIFT :திறந்திருக்கும் அனைத்து ஒர்க்ஷீட்களிலும் அனைத்து ஒர்க் புக்குகளிலும் அனைத்து கால்குலேஷன்களும் செயல்படுத்தப்படும்.
F10 +ALT+SHIFT :ஸ்மார்ட் டேக்கிற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட் டேக் திறக்கப்பட்டிருந்தால் அடுத்த டேக் சென்று அதற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும்.
F11 +ALT+SHIFT :மைக்ரோசாப்ட் ஸ்கிரிப்ட் எடிட்டர் திறக்கப்படும்.
F12 +ALT+SHIFT : பிரிண்ட் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.
ஒர்க் ஷீட் செலக்ஷன் :
உங்களிடம் மிகப் பெரிய எக்ஸெல் பைல் உள்ளதா? அதில் நிறைய ஒர்க்ஷீட்கள் உள்ளதா? இவற்றில் நீங்கள் பயன்படுத்த விரும்புவதை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்? ஷீட்களின் ஊடாக முன்னும் பின்னும் செல்கிறீர்கள். இது நிச்சயம் எரிச்சலைத் தரும். அல்லது Ctrl + Page Up / Down என்ற கீ வரிசைகளைப் பயன்படுத்துகிறீர்கள். இந்த வழியிலும் நீங்கள் விரும்பாத பழைய ஒர்க் ஷீட்களில் தான் சென்று நிற்பீர்கள். இதைத் தவிர்த்து விரைவாக ஒர்க் ஷீட்களை எப்படித் தேர்ந்தெடுக்கலாம்? இரண்டு மவுஸ் கிளிக்குகளில் தேவைப்படும் ஒர்க் ஷீட்டிற்கு எப்படிச் செல்லலாம்? இதோ ஓர் எளிய வழி. ஒர்க் ஷீட்டில் படுக்கை வசமாக உள்ள ஸ்குரோல் பாரைப் பாருங்கள். அங்கே ஒவ்வொரு ஷீட்டாகாத் தாவிச் செல்ல அம்புக்குறிகள் உள்ளனவா? அங்கு மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று ரைட் கிளிக் செய்திடுங்கள். இப்போது ஒவ்வொரு ஒர்க் ஷீட்டின் பெயருடன் ஒரு மெனு தோன்றும். இப்போது அந்த மெனுவில் நீங்கள் எந்த ஒர்க் ஷீட்டை விரும்புகிறீர்களோ அங்கு கிளிக் செய்து அதனைப் பெறலாம். எவ்வளவு ஈஸி பார்த்தீர்களா!


Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அன்பு - nellai,இந்தியா
14-ஆக-201002:16:04 IST Report Abuse
அன்பு தினமலர் கம்ப்யூட்டர் மலரில் இது வரை வந்த எக்ஸ்செல், வோர்ட், போன்றவற்றின் கேள்வி பதில்களை தொகுத்து கம்ப்யூட்டர் மலரில் ஒரு போல்டேராக அல்லது புத்தகமாக வைத்தால் அல்லது புதியவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
செல்வ பிரபு - அஹ்மதாபாத்gujarat,இந்தியா
12-ஆக-201019:00:59 IST Report Abuse
செல்வ பிரபு என்னுடைய கருத்து என்னவென்றால் நான் இன்றுதான் தினமலர் பேப்பரை பார்த்தேன்.எச்செல் பற்றி ஒரு சில தகவல் அறிந்து கொண்டேன் .ஆனால் இதில் எச்செல் இன் அறிமுக தகவல்கள் கொடுக்கப்படவில்லை.தினமும் பார்ப்பவர்களுக்கு எந்தவித பிரச்சனை இல்லை.ஆனால் இன்றோ அல்லது நாளையோ பார்பவர்களுக்கு பிரச்சனை .அதனால் ஒரு சில முக்கியமான அறிமுக தகவல்கள் சைடு ல் கொடுக்கவும். தயவு இதை செய்யவும்.
Rate this:
Share this comment
Cancel
s.kumar - Salem,இந்தியா
11-ஆக-201007:55:33 IST Report Abuse
s.kumar Ur web site is Very useful to me.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X