பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 அக்
2012
00:00

சிறுவர்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் இன்டர்நெட் மன நோய் இப்போது ஏற்படுகிறது. என் கணவர், இன்டர்நெட் இணைப்பில் சிக்கல் ஏற்பட்டு கிடைக்கவில்லை எனில், பதற்றம், கோபம், மன எரிச்சல் அடைகிறார். இதற்காக இரு நிறுவனங்களிடம் இன்டர்நெட் இணைப்பு வாங்கி அளித்திருக்கிறோம்.
என். மாலா கணேசன், சென்னை.

இன்டர்நெட் என்பது கிட்டத் தட்ட ஒரு போதையாக மாறி விட்டது என்பது உண்மையே. நீங்கள் எழுதியது பலருக்கு நிச்சயமாக இந்த உண்மையை விளக்கும். நம் மனதை பேலன்ஸ் செய்திட நமக்குத் தெரிய வேண்டும்.
பேரா. கா. சிவராஜ், கோயமுத்தூர்.

ஆப்பிள் ஸ்டோர் இந்தியாவில் அமைவது நல்லதே. இதன் வர்த்தகமும், ஆப்பிள் நிறுவனங்களின் பயன்பாடும் இங்கு பெருகும். ஆனால், ஆப்பிள் நிறுவனம் தன் சாதனங்களின் விலையை இந்தியாவிற்கு ஏற்ற வகையில் குறைக்காத வரை, பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2% ஆகத்தான் இருக்கும்.
டாக்டர் என். தெய்வேந்திரன், மதுரை.

எப்படியும் பல முனை விளம்பரங்களை ஏற்படுத்தி மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 8 சிஸ்டத்தைக் கட்டாயமானதாக உருவாக்கும். இதனால், கம்ப்யூட்டர் தயாரிப்பவர்கள், அப்ளிகேஷன் புரோகிராம் உருவாக்குபவர்களுக்கும் லாபமாகத்தான்
இருக்கும்.
சி. அற்புதராஜ், புதுச்சேரி.

முன்பு விண்டோஸ் 95 வெளியான போது, அனைத்து வழிகளையும், மீடியாக்களையும் பயன்படுத்தி மைக்ரோசாப்ட் தன் சிஸ்டத்தை பெரும் ஜீபூம்பா பூதமாகக் காட்டியது. அதே போல இப்போதும் விண்டோஸ் 8 வந்துள்ளது. காத்திருந்து கவனிக்கலாம்.
பேரா. கரு. நாகராஜன், காரைக்குடி.

"கூகுள் தேடல் வரையறைகள்' அனைத்தும் மிகவும் பயன் தருவதாக உள்ளன. நம் தேடல்களை நாம் விரும்பும் வகையில் அமைக்க உதவும் வழிகளாக உள்ளன. இவற்றின் மூலம் தேவையற்றவை நமக்கு முடிவுகளாகக் கிடைப்பதனைத் தவிர்க்கலாம்.
சி.கே. சிரஞ்சீவி, விழுப்புரம்.

20 ஆண்டுகளுக்கு விண்டோஸ் 8 மட்டுமே பயன்படுத்தப்படும் என்ற உங்கள் கட்டுரை மிகைப்படுத்தப்பட்டதாக உள்ளது. அப்படியானால், மைக்ரோசாப்ட் அடுத்த மேம்படுத்தப் பட்ட தொகுப்பினை வழங்காதா! இப்போதெல்லாம், ஆண்டுக்கு ஒருமுறை புதியனவற்றை மக்கள் எதிர்பார்க்கின்றனர். பிரவுசரில் தான் நாம் இவற்றைப் பார்த்து வருகிறோமே.
கா.கிருஷ்ணமூர்த்தி, தாம்பரம்.

தாங்கள் கேள்வி பதில் பகுதியில் குறிப்பிட்டுள்ள பைல் ஷ்ரெடர் புரோகிராமினை டவுண்லோட் செய்து பயன்படுத்தினேன். மிகச் சிறப்பாக இயங்குகிறது. தகவலுக்கு நன்றி.
ஆர். கமலா மோகன், திருப்பூர்.

இன்னும் எக்ஸ்பி மற்றும் ஆபீஸ் 2003 தொகுப்புகளைப் பயன்படுத்துவோருக்கு பைல் பார்மட் செய்து தரும் ஸம்ஸார் தளம் உற்ற நண்பனாக உதவுகிறது. இமெயில் வழியில் சேவை செய்வது அதன் உண்மையான சேவை மனப்பாங்கினைக் காட்டுகிறது. உடனுடக்குடன் மாற்றித் தருவது அதன் வேகத்தின் சிறப்பு.
ஒய். சிவாஜி ராம். பொள்ளாச்சி.

வேர்ட் புரோகிராம், ஹைபனை தனிச் சொல்லாகத்தான் எண்ணிச் சொல்லும் என்பதே, தங்கள் டிப்ஸ் குறிப்பினைப் படித்த பின்னரே அறிந்து கொண்டேன். இருப்பினும், இதனை விலக்கி எண்ணிச் சொல்ல இவ்வளவு வேலை பார்க்க வேண்டியதுள்ளதே.
கே. உமையாள், பள்ளத்தூர்.

நீங்கள் தந்துள்ள மூளை செயல்பாடு குறித்த இணைய தளம், சிறுவர்களுக்கானது. குழந்தைகளுக்கானதல்ல. ஆனால், இந்தக் காலத்தில் 5 வயது குழந்தை கூட, இந்த தளத்தின் வீடியோ வினைப் பார்த்து ரசிக்கும்.
டி. இன்ப சேகரன், திண்டிவனம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X