பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மறையாது
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 அக்
2012
00:00

ஸ்டீவ் ஜாப்ஸ் தன் ஐபேட் சாதனத்தை அறிமுகப்படுத்திய போது, ""பெர்சனல் கம்ப்யூட்டர் சகாப்தம் முடிந்துவிட்டது. அடுத்த சகாப்தம் தொடங்கிவிட்டது''என்றார். அப்போது அது மிகைப்படுத்தப்பட்டதாகத் தோன்றினாலும், தற்போது விண்டோஸ் ஆர்.டி. டேப்ளட் பிசிக்களைப் பார்க்கையில் எங்கே அது உண்மையாகிவிடுமோ என்ற சந்தேகம் அனைவரின் மனதிலும் தோன்றியுள்ளது. மிகக் குறைவான மின்சக்தியில் இயங்கி, அனைத்துவிதமான ஆபீஸ் புரோகிராம் பைல்களை உருவாக்கித் தரும் இந்த டேப்ளட் பிசிக்களினால், டெஸ்க்டாப் பெர்சனல் கம்ப்யூட்டர் மறைந்துவிடும் என்ற எண்ணம் வலுப்பெறுகிறது. ஆனால், டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் இல்லாமல் நாம் தொடர்ந்து வாழ முடியுமா? என்ற அச்சம் தோய்ந்த கேள்வி நம்மிடம் தொடர்ந்து இருந்து வருகிறது. இது குறித்து ஆழமாகச் சிந்தித்தால், இன்றைய நிலையில் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் இன்னும் தொடர்ந்து நம்முடன் வாழும் என்றுதான் உறுதியாகிறது. அதற்கான காரணங்களை இங்கு காணலாம்.

1. டெஸ்க்டாப் பிசி மலிவானது:






லேப்டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் மலிவானவை. கைகளில் எடுத்துச் செல்லும் டிஜிட்டல் சாதனங்கள் எப்போதும் விலை சற்று அதிகமான வையாகவே உள்ளன. அளவில் சிறியதாக இருப்பதனால், அதற்கேற்ப தொழில் நுட்பம் சார்ந்து விலை அதிகமானதாகவே அமைகிறது. மேலும் லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்குகையில் அதற்கான கீ போர்ட், திரை, ட்ராக் பேட் என அனைத்தும் இணைந்தே வாங்க வேண்டும். டெஸ்க்டாப் பிசியில் அப்படி இல்லை. எனவே இதன் விலை குறைவு.

2. அதிக திறன் கொண்டது டெஸ்க்டாப் பி.சி.:






டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் அமைக்கப்படும் ப்ராசசர்கள், அதற்கு இணையான லேப் டாப் கம்ப்யூட்டர்களில் வைக்கப்படும் ப்ராசசர்களைக் காட்டிலும் திறன் அதிகமானவை. டெஸ்க்டாப் ப்ராசசர் இயங்குகையில் ஏற்படும் வெப்பத்தை தணிக்க அதிக வழிகள் உள்ளன. லேப் டாப் கம்ப்யூட்டரின் பாகங்கள் இறுக்கமான ஒரு சூழ்நிலையில், இயங்குகையில் அதிக வெப்பம் தரும் வகையில் அமைகின்றன. எனவே இவற்றின் திறன் மற்றும் வாழ்நாள் குறைவு.

3. எக்கச்சக்க துணை சாதனங்கள்:






டெஸ்க்டாப் பி.சி.யுடன் அதிகமான எண்ணிக்கையில் துணை சாதனங்களை இணைக்கலாம். லேப்டாப் கம்ப்யூட்டரிலும் இணைக்க வழிகள் இருந்தாலும், அவை எண்ணிக்கையில் குறைவானவையே.

4. திரைக் காட்சி மிகப் பெரியது:






டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களை மிகப் பெரிய திரை கொண்ட மானிட்டரில் இணைத்துக் காணலாம். அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர்களை இணைத்துக் காணலாம். லேப்டாப் கம்ப்யூட்டரின் திரையின் அதிக பட்ச அகலம் 17.3 அங்குல திரை மட்டுமே.

5. உபரி பொருட்கள் இணைப்பது எளிது:






பெர்சனல் கம்ப்யூட்டரில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சாதனம் பழுதடைந்தால், அதனை நீக்கிவிட்டு, புதிய ஒன்றை இணைக்கலாம். இதில் கிராபிக்ஸ் கார்ட், மானிட்டர், ப்ராசசர் ஆகியவையும் அடக்கம்.

6. கற்பனைக்குத் தடையில்லை:






மிகச் சிறந்த கற்பனையில் உருவான ஒரு கேம்ஸ் புரோகிராமினை, டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் மிக அழகாக இயக்கலாம்; ரசிக்கலாம். ஏனென்றால், இவற்றை முழுமையாக இயக்கவும் ரசிக்கவும், அதிக திறன் கொண்ட ப்ராசசர், பெரிய அளவிலான ஸ்கிரீன், இணைந்த கம்ப்யூட்டர் தேவைப்படுகிறது. இவற்றை ஒரு டெஸ்க் டாப் கம்ப்யூட்டரில் மட்டுமே பெற முடியும்.

7. பாதுகாப்பானவை:






டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் எடுத்துச் செல்லக் கூடியவை அல்ல. எனவே உறுதியாகவும் பாதுகாப்பு கொண்டதாகவும் அமைந்துள்ளன. யாரும் திருடி எடுத்துச் செல்ல முடியாது. லேப்டாப் கம்ப்யூட்டர்களை எளிதில் திருடலாம்; தொலைக்கலாம்.

8. நீங்களே உருவாக்கலாம்:






டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ஒன்றை நீங்களே உருவாக்கலாம். இவற்றை எப்படி உருவாக்க வேண்டும் எனக் கற்றுத் தர, நிறைய இணைய தளங்கள் உள்ளன. ஆனால், லேப்டாப் ஒன்றை ஒரு சாதாரண தனி மனிதன் வடிவமைப்பது மிகவும் கடினமான ஒரு செயலாகும்.
லேப்டாப் கம்ப்யூட்டர், டேப்ளட் பி.சி. மற்றும் ஸ்மார்ட் போன் போன்றவை, இன்றைய வாழ்க்கையில் பிரிக்க முடியாத சாதனங்களாக மாறிவிட்டன.
இருப்பினும், டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு மலிவான விலையில், கூடுதல் திறனுடன் கிடைக்கின்றனவோ, அன்று வரை டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் இயங்கும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X