மொபைல் திரைகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 அக்
2012
00:00

TFT (thin film transistor):






இது ஒரு வகையான எல்.சி.டி. (LCD - liquid crystal display) ப்ளாட் பேனல் டிஸ்பிளே தொழில் நுட்பத்தினைச் சேர்ந்தது. மற்ற எல்.சி.டி. தொழில் நுட்பத்துடன் ஒப்பிடுகையில் இது சிறப்பான இமேஜ் தொழில் நுட்பம் கொண்டு காட்சிகளைக் காட்டுவதில் குறைந்த ரெஸ்பான்ஸ் நேரம் எடுத்துக் கொள்ளும். இதனை ஆக்டிவ் மேட்ரிக்ஸ் தொழில் நுட்பம் (activematrix technology) என்றும் சொல்வார்கள். இது எதனைக் குறிக்கிறது? இந்த பேனல் டிஸ்பிளே உள்ள திரையில் ஒவ்வொரு பிக்ஸெல் அருகேயும் ஒரு சிறிய ட்ரான்சிஸ்டர் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு பிக்ஸெல்லும் தானாக இயங்கி அணையும் தன்மையைத் தருகிறது. இதனால் காட்சிகள் வேகமாக இயங்கிக் காட்டப்படும். பாசிவ் மேட்ரிக்ஸ் மேட்ரிக்ஸ் தொழில் நுட்பத்துடன் ஒப்பிடுகையில் இந்த வேகம் புலப்படும்.

TFD (thin film diode):






இதுவும் ஒருவகையான எல்.சி.டி. ப்ளாட் பேனல் டிஸ்பிளே வகையைச் சேர்ந்தது. மேலே சொல்லப்பட்ட TFT தொழில் நுட்பத்தின் அனைத்து அம்சங்களையும் இது கொண்டுள்ளது. இந்த தொழில் நுட்பம் மற்றதைக் காட்டிலும் குறைந்த மின்சக்தியைப் பயன்படுத்துகிறது.

STN (Super Twisted Nematic):






அடுத்ததாக உள்ள இதுவும் ஒரு எல்.சி.டி. தொழில் நுட்பத்தில் இயங்கும் டிஸ்பிளே ஆகும். இதில் CSTN என்பது Color Super Twisted Nematicஐக் குறிக்கும். இந்த தொழில் நுட்பத்தினை ஷார்ப் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் உருவாக்கியது. டி.எப்.டி. போல இல்லாமல் இது பேசிவ் மாட்ரிக்ஸை அடிப்படையாகக் கொண்டது. முதலில் வந்த இந்த தொழில் நுட்பத்தில் வேகம் மிகவும் குறைவான ரெஸ்பான்ஸ் டைம் கிடைத்தது. ஆனால் பின் நாளில் இது சரி செய்யப்பட்டது. தற்போது இந்த தொழில் நுட்பம் வளர்ந்து ஆக்டிவ் மேட்ரிக்ஸ் தொழில் நுட்பத்திற்கு மாற்றாக இயங்குகிறது. புதிய சி.எஸ்.டி.என். தொழில் நுட்பம் 100 எம்.எஸ். ரெஸ்பான்ஸ் டைம் மேற்கொண்டு டிஸ்பிளே காட்டுகிறது. 140 கோணத்தில் காட்சியினைக் கொள்கிறது. டி.எப்.டி. தொழில் நுட்பத்தைப் போட்டிக்கு அழைக்கும் வகையில் வண்ணக் கலவையினையும் கொண்டுள்ளது. இத்தனையும் மற்றவற்றிற்கான விலையில் பாதி விலையில் இதனைக் கொள்ளலாம்.
சி.எஸ்.டி.என். மற்றும் எஸ்.டி.என். இவை இரண்டும் ஒரே மாதிரியான எல்.சி.டி. தொழில் நுட்பத்தையே குறிக்கின்றன. எஸ்.டி.என். குறைவான மின் சக்தியைப் பயன்படுத்துகிறது. விலையும் குறைவாகும். ஆனால் காட்டப்படும் இமேஜ் தன்மை மற்றவற்றைக் காட்டிலும் சற்றுக் குறைவாக இருக்கும். அதே போல இமேஜ் காட்டப்படும் ரெஸ்பான்ஸ் நேரமும் மற்றவற்றைக் காட்டிலும் சற்று அதிகமாக இருக்கும். இதில் உள்ள ஒவ்வொரு பிக்ஸெல்லும் தனித்தனியாக ஒவ்வொரு நொடியிலும் ரெப்ரெஷ் செய்யப்பட வேண்டும். இதனால் தான் ரெஸ்பான்ஸ் டைம் அதிகமாகிறது.

UFB (Ultra Fine & Bright):






இந்த எல்.சி.டி. தொழில் நுட்பத்தினை சாம்சங் நிறுவனம் உருவாக்கியது. 2002 ஆம் ஆண்டில் வெளியானது. இது 3 மில்லி வாட் மின்சாரத்தில் கூட இயங்கும். வழக்கமான டி.எப்.டி., எல்சிடி தொழில் நுட்பத்தில் இயங்கும் திரைகளுக்கான மின்சக்தியைக் காட்டிலும் மிகவும் குறைவான மின்சக்தியைப் பயன்படுத்துகிறது. இதனால் பேட்டரி உழைக்கும் நேரம் அதிகமாகும். இந்த வகை தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தும் மொபைல் போன்கள் இதனால் ஸ்லிம்மாக இருக்கும் வாய்ப்புகள் உருவாகின்றன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X