கம்ப்யூட்டருக்கு புதியவரா! உங்கள் வழியில் எக்ஸெல் தேதி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 அக்
2012
00:00

எக்ஸெல் தொகுப்பில் பணியாற்றுபவர்கள் தேதி காட்டப்படும் விதத்தில் எந்த வித மாற்றமும் மேற்கொள்ளாத நிலையில் எக்ஸெல் காட்டும் தேதி நம் போன்றோருக்கு சற்றுச் சிக்கலாகத் தெரியும். ஏனென்றால் நாம் பழகியுள்ள முறைப்படி அதில் இருக்காது. ஒரு சிலர் தேதியை ஒரு ஸ்தானத்தில் இருந்தால் அப்படியே ஒரு இலக்கத்தில் எழுதுவார்கள். ஒரு சிலர் எந்த தேதியாக இருந்தாலும் இரண்டு இலக்கத்தில் எழுதுவார்கள். அதே போல் மாதம் மற்றும் வருடங்களை எழுதுவதிலும் ஓர் இலக்கம், இரண்டு இலக்கம் என பழக்கங்கள் மாறுபடலாம்.
எக்ஸெல் தொகுப்பில் நம் பழக்கத்திற்கேற்ப இந்த நாள், மாதம் மற்றும் வருடத்தின் எண்ணைத் தோன்றச் செய்திடலாம். இதனை எவ்வாறு செட் செய்வது என்று பார்க்கலாம்.
முதலில் எந்த செல்களில் தேதி அமைய வேண்டுமோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். பின் Format மெனு சென்று அதில் Cells என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது கண்ட்ரோல் + 1 அல்லது ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Format Cells தேர்ந்தெடுக்கலாம்.
பின் கிடைக்கும் பார்மட் செல்ஸ் டயலாக் விண்டோவில் Number டேபினைக் கிளிக் செய்திடவும். இந்த விண்டோவில் இடது பக்கம் கேடகிரி என்பதன் கீழாக Custom என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Type என்பதில் பல ஆப்ஷன்ஸ் கொடுக்கப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம்.
இவற்றில் நீங்கள் விரும்பும் வகையில் தேதி மற்றும் ஆண்டினை அமைக்கும் வகையைக் காணலாம். அவை என்னவென்று இங்கு பட்டியலிடலாம்.

தேதி வகைகள்:






d என்பது ஒரு நாளின் எண்ணைத் தரும் (1, 2, 3, 4 ... 30, 31)
dd என்பது நாளின் எண்ணை இரு இலக்கங்களில் தரும் (01,02,03)
ddd என்பது நாளினைச் சுருக்கித் தரும் (Mon, Tue ....)
dddd என்பது நாளினை அதன் முழு பெயரில் தரும் (Monday, Tuesday, etc).

மாதத்திற்கான குறிப்புகள்:






m என்பது ஒரு மாதத்தின் எண்ணைத் தரும் (1, 2, 3, 4 ... 30, 31)
mm என்பது மாதத்தின் எண்ணை இரு இலக்கங்களில் தரும் (01,02,03)
mmm என்பது மாதத்தினைச் சுருக்கித் தரும் (Jan, Feb,....)
mmmm என்பது மாதத்தினை அதன் முழு பெயரில் தரும் (January, February etc).
mmmmm என்பது மாதத்தின் முதல் எழுத்தினைத் தரும் (J, F, M, A,)

ஆண்டுக்கான குறிப்புகள்:






yy என்பது வருடத்தின் எண்ணை இரு இலக்கங்களில் தரும் (07,08,09)
yyyy என்பது வருடத்தின் எண்ணை நான்கு இலக்கங்களில் தரும்(2007, 2008, 2009)
ஓகே, இப்போது நாள், மாதம் மற்றும் ஆண்டுக்கான குறியீடுகளைக் கற்றுக் கொண்டீர்கள். இனி இவற்றை எப்படி அமைப்பீர்கள் என்று பார்க்கலாம்.
Custom கேடகிரியில் கிளிக் செய்கையில் வலது பக்கத்தில் Type என்ற சொல்லுக்குக் கீழாக ஒரு பீல்டு கொடுக்கப்பட்டு அதில் உங்கள் தேதியின் பார்மட்டை டைப் செய்திட இடம் கொடுக்கப்பட்டிருக்கும். இங்கு ஏற்கனவே நீங்கள் கற்றுக் கொண்டதன் அடிப்படையில் உங்களுக்கு எப்படி தேதி இருக்க வேண்டுமோ அதன்படி அமைக்கவும். பின் நீங்கள் தரும் தேதி அதற்கேற்ற படி அமைக்கப்படுவதனைப் பார்க்கலாம்.
எடுத்துக்காட்டாக dddd, mmmm d, yyyy என நீங்கள் தேர்ந்தெடுத்தால், 52609 என டைப் செய்திருந்தால் அது Friday, May 26, 2009 எனக் காட்டப்படும். ஒன்றைக் கவனித்தீர்களா! நாம் இடையே செருகிய கமாக்களும் அதற்கான இடத்தில் காட்டப்பட்டுள்ளன.
கமா இடத்தில் சிறிய இடைக்கோடு மற்றும் வேறு அடையாளங்களையும் பயன்படுத்தலாம். Type பீல்டின் மேலாக Sample என ஒரு பிரிவியூ பாக்ஸ் இருப்பதனைக் காணலாம். நீங்கள் தேர்ந்தெடுத்த வகையில் செல்களில் உள்ள டேட்டா எப்படிக் காட்டப்படும் என இங்கு காட்டப்படுவதனையும் காணலாம். இதன் மூலம் நீங்கள் விரும்பும் வகைக்கான பார்மட்டினை நீங்கள் அமைக்கிறீர்களா என்று இதில் செக் செய்து கொள்ளலாம். இவ்வாறு செட் செய்துவிட்டு ஒர்க் ஷீட்டிற்குள் நுழைந்தால் நீங்கள் செட் செய்தபடி செல்களில் உள்ள தேதி பார்மட் மாற்றப்பட்டிருப் பதனைக் காணலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X