இந்த வார இணையதளம் - இணைய தளம் வழி வர்த்தகப் பரிவர்த்தனை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 நவ
2012
00:00

ஸ்ரீராம் குழுமத்தைத் தோற்றுவித்தவர்கள், தற்போது ""ஸ்ரீராம் வியாபார்'' என்ற நிறுவனப் பிரிவினைத் தொடங்கி உள்ளனர். இந்நிறுவனம் இன்டர்நெட் வசதியினைப் பயன்படுத்த இயலாத மக்களுக்கு, அதனை முழுமையாகப் பயன்படுத்தித் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்பளிக்கிறது. இதற்கென ""ஸ்ரீராம் வியாபார்'' ("www.shriramvyapar.com") என்ற இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட், வாகன விற்பனை, பயண ஏற்பாடு, கடன் நிதி பெறல், இன்சூரன்ஸ் மற்றும் வர்த்தக நடைமுறைகளுக்கான பணப்பரிமாற்றம் எனப் பல பிரிவுகளை இந்த இணைய தளம் உள்ளடக்கியுள்ளது. இணையதள வழி என்பதால், தமிழ்நாடு மட்டுமின்றி, அனைத்து மக்களும் இந்த சேவையை எளிதாகவும், தாங்கள் விரும்பிய நேரத்திலும், தங்களுக்கு வசதிப்பட்ட போது, வர்த்தகப் பரிமாற்றத்தினை மேற்கொள்ளலாம்.
நம் நாட்டில் 90% மக்களுக்கு இணைய இணைப்பு வசதி கிடைக்கவில்லை. இணையத்தைப் பயன் படுத்துவோரில் சிலர் மட்டுமே, வர்த்தக தேவைகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர். இணைய வŒதி கிடைக்காத அனைவருக்கும் உதவிட, ஸ்ரீராம் வியாபார், சிறிய இணைய மையங்களுடன் முகவர்களை நியமிக்கிறது.
சிறிய ஏ.டி.எம். மைய அளவிலான இடத்தில் அமர்ந்து இவர்கள் இயங்குவார்கள். வாடிக்கையாளர்களை வழி நடத்துவார்கள். வங்கிகளில் பணம் செலுத்த, கடன் பெற, பயணத்திற்கு டிக்கட் வாங்க, இன்சூரன்ஸ் பிரிமியத் தொகை செலுத்த, பொருட்களை வாங்க என அன்றாட அனைத்து பணிகளையும் இணைய வழி செயல்படுத்த முடியும் என்றாலும், ஒரு சிலரே இதனைப் பயன்படுத்துகின்றனர்.
இந்த குறையைப் போக்கும் வகையில் ஸ்ரீராம் வியாபார் இணையதள முகவர்கள் செயல்படுவார்கள். முதல் கட்டமாக சென்னையில் 300 மையங்கள் அமைக்கப்படும். அடுத்த ஆறு மாதங்களில், தென்னிந்திய மாநிலங்கள் மூன்றில் 10 ஆயிரம் மையங்களும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சம் மையங்களும் அமைத்து இயக்க, ""ஸ்ரீராம் வியாபார்'' திட்டமிடுகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X