இந்தியாவில் விண்டோஸ் 8
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 நவ
2012
00:00

உலக அளவில் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட்ட மைக்ரோசாப்ட், இந்தியாவிலும் அதனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
சிஸ்டம் இணைந்த கம்ப்யூட்டர்கள் விற்பனைக்கு வந்திருப்பதுடன், விண்டோஸ் ஸ்டோர் தரும் அப்ளிகேஷன்கள் அனைத்தையும், இந்திய வாடிக்கையாளர்கள், இணையம் வழியாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மைக்ரோசாப்ட் இந்தியா பிரிவின் பாஸ்கர் பிரமானிக் இதனைத் தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிறுவனங்கள் (Acer, Dell, Fujitsu, HCL, Hewlett Packard, Lenovo, Samsung, Sony, Toshiba, Wipr, RP Infosystems, Sai Info System, and Zenith Computers) விண்டோஸ் 8 இணைந்த கம்ப்யூட்டர்களையும், டேப்ளட் பிசிக்களையும் தயாரித்து வழங்கி வருகின்றன. ஏறத்தாழ 250 புதிய விண்டோஸ் 8 கம்ப்யூட்டர் மாடல்கள் கிடைக்கின்றன.
100 நகரங்களில், 2,500 விற்பனை மையங்களில் இவை விற்பனைக்கு உள்ளன.
இந்த சிஸ்டம் Windows anytime upgrade (WAU) என்ற எப்போது வேண்டுமானாலும் சிஸ்டத்தை மேம்படுத்திக் கொள்ளும் வசதியுடன் உள்ளது. கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் இது செயல்படுவதால், இதனை வாங்குபவர்கள் தங்கள் மைக்ரோசாப்ட் யூசர் அக்கவுண்ட் மூலம், இதற்கான தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் மெயில், காலண்டர், காண்டாக்ட், படங்கள் மற்றும் சார்ந்தவற்றைப் பெற முடியும்.
சில்லரை விற்பனையில், விண்டோஸ் 8 இரு வித பதிப்புகளில் கிடைக்கிறது விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் ப்ரோ. விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 சிஸ்டத்தினை, விண்டோஸ் இயங்கக் கூடிய ஹார்ட்வேர் அமைப்புடன் வைத்துள்ளவர்கள், தங்கள் சிஸ்டத்தினை, விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மேம்படுத்திக் கொள்ளலாம். இதற்கான கட்டணம் ரூ.1,999. ஜனவரி, 2013 வரை மட்டும் இந்த சலுகை தரப்படுகிறது.
நீங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றினை, விண்டோஸ் 7 சிஸ்டத்துடன், ஜூன் 2, 2012 லிருந்து 31 ஜனவரி 2013 வரையிலான காலத்தில் வாங்கியிருந்தால், அதனை ரூ.699 செலுத்தி, விண்டோஸ் 8 ப்ரோ பதிப்புக்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம். நீங்கள் கம்ப்யூட்டர் வாங்கியதனையும், அதன் உரிமத்தினையும், மைக்ரோசாப்ட் இணைய தளத்தில் ஜனவரி 31க்குள் பதிந்திருக்க வேண்டும். ஜூன் 2க்கு முன்பு வாங்கியவர்கள் உத்தேசமாக ரூ. 2,150 செலுத்த வேண்டும்.
இதற்கென அணுக வேண்டிய இணைய தள முகவரி www.windowsupgradeoffer.com டிவிடி ஒன்றில் விண்டோஸ் 8 சிஸ்டத்தினைப் பெற்று பயன்படுத்த விரும்புபவர்கள் ரூ.3,499 செலுத்த வேண்டும். இந்த சலுகை வரும் ஜனவரி 31, 2013 வரைதான். அதன் பின்னர், இவ்வகையில் வாங்க ரூ.11,000 செலுத்த வேண்டியதிருக்கும்.
விண்டோஸ் 8 வெளியான கையோடு, விண்டோஸ் ஸ்டோர் தளமும் திறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்திய பயனாளர்கள், விண்டோஸ் ஸ்டோரிலிருந்து பல அப்ளிகேஷன்களை, இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் பெறலாம். இவற்றில் குறிப்பிடத்தக்கவை Bharat Matrimony, BigFlix, BookMyShow, Bookyourtable, Burrp, Dhingana, Fastrack Tees, Flyte MP3, Gaana, Goibibo, ICICI Bank iMobile, ICICIDirect, JustEat, MakeMyTrip Explore, MapmyIndia, my airtel, PVR Cinemas, Tarla Dalal, Yahoo Cricket and Zovi ஆகும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X