விண்டோஸ் 8 வெளியானது
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 நவ
2012
00:00

பல மாதங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வர்த்தக ரீதியாக, மக்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கான விழா அக்டோபர் 25ல் நடத்தப்பட்டது. மைக்ரோசாப்ட் பெர்சனல் கம்ப்யூட்டருக்கான சிஸ்டம் விற்பனையிலிருந்து விலகி, டேப்ளட் பிசி, நோட்புக், ஸ்மார்ட் போன் எனச் செல்லப் போகிறது எனப் பலத்த வதந்தி நிலவி வந்தது. இவை அனைத்திற்கும் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் விழா நடைபெற்றது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கிய வர்த்தக நடவடிக்கைகள், பெர்சனல் கம்ப்யூட்டரை மையமாகக் கொண்டே இருக்கும் என இதன் நிர்வாகிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதுவரை இல்லாத வசதிகளுடன் மிகச் சிறந்த பெர்சனல் கம்ப்யூட்டர் அனுபவத்தினைக் கொடுக்கும் வகையில், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது என இதன் தலைமை நிர்வாகி ஸ்டீவ் பால்மர் குறிப்பிட்டார். பெர்சனல் கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் டேப்ளட் என அனைத்திற்குமாக விண்டோஸ் 8 வெளியாகியுள்ளது. அதே போல, வர்த்தக நடவடிக்கைகளுக்கு மட்டுமின்றி, வாழ்க்கையை ரசிக்கவும் விண்டோஸ் 8 துணை புரியும்.
இந்நிகழ்ச்சியில், பல விண்டோஸ் 8 சாதனங்கள் வெளியிடப்பட்டன. விண்டோஸ் ஸ்டோர் தன் விற்பனையை இணைய வெளியில் தொடங்கியது. தற்போது விண்டோஸ் 7 சிஸ்டத்தைப் பயன்படுத்தும் 67 கோடி பேர், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்திடக் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், 40 கோடி புதிய விண்டோஸ் 8 தொகுப்பு விற்பனை செய்யப்படும் என பால்மர் குறிப்பிட்டுள்ளார். விண்டோஸ் அப்ளிகேஷன் ஸ்டோர், வேறு எந்த அப்ளிகேஷன் ஸ்டோரைக் காட்டிலும் அதிக அப்ளிகேஷன்களைக் கொண்டுள்ளது.
நிர்வாகி சினோப்ஸ்கி விண்டோஸ் 8 சிஸ்டத்தின் பல புதிய மேம்படுத்தப்பட்ட வசதிகளைச் சுட்டிக் காட்டினார். கூடுதலாக அதிக நாட்கள் செயல்படும் பேட்டரி, மிக வேகமாக பூட் ஆகும் செயல்பாடு, தற்போதுள்ள அப்ளிகேஷன்களுடன் இணைந்து செயல்படும் தன்மை ஆகியவற்றைச் சிறப்பானது எனக் குறிப்பிட்டார்.
ஏற்கனவே விண்டோஸ் 8 சிஸ்டத்தில் செயல்படும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடல் கம்ப்யூட்டர் வடிவமைப்புகளை மைக்ரோசாப்ட் அங்கீகரித்துள்ளது. பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மட்டுமின்றி, முதல் முறையாக, விண்டோஸ் 8 சிஸ்டத்தில் மிகச் சிறந்த டேப்ளட் பிசிக்களும் வெளியாகியுள்ளன.
இவற்றின் மூலம் ""இதுதான் பெர்சனல் கம்ப்யூட்டர்'' என்று ஏற்கனவே வகுத்திருந்த எல்லைக் கோடுகள் காணாமல் போய்விட்டன என்று பால்மர் குறிப்பிட்டார். இந்த பல்வேறு வகை சாதனங்கள் இயக்கத்திற்கென,மைக்ரோசாப்ட் பல அப்ளிகேஷன் புரோகிராம்களைத் தயாரித்து வழங்குகிறது.
புதிய எம்.எஸ். ஆபீஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10, பிங் அப்ளிகேஷன்ஸ் (News, Finance, Travel, Maps, Weather and Sports) ஸ்கை ட்ரைவ், ஸ்கைப், எக்ஸ்பாக்ஸ் மியூசிக் என இந்த பட்டியல் நீள்கிறது. நிகழ்ச்சியில் பல நிறுவனங்கள் வடிவமைத்த பெர்சனல் கம்ப்யூட்டர்கள், டேப்ளட் பிசிக்கள் செயல்படுத்திக் காட்டப்பட்டன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X