இந்த வார டவுண்லோட் - வீடியோ பைல் பார்மட் மாற்றம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 நவ
2012
00:00

உங்களிடத்தில் நீங்கள் அடிக்கடி பெர்சனல் கம்ப்யூட்டரில் விரும்பிப் பார்க்கும் வீடியோ பைல் ஒன்றை, உங்கள் மொபைல் போன், டேப்ளட் பிசி, வீடியோ கேம் சாதனம் அல்லது இது போன்ற வேறு மொபைல் சாதனங்களில் பார்க்க விருப்பமா? எது உங்களைத் தடுக்கிறது. பெர்சனல் கம்ப்யூட்டரில் நீங்கள் அந்த வீடியோவினைக் கொண்டிருக்கும் பார்மட், இல்லையா? அதன் பார்மட்டை நீங்கள் பயன்படுத்த விரும்பும் சாதனத்திற்கேற்ப மாற்ற வேண்டும். என்ன செய்யலாம்? இங்கு தான், Miro Video Converter உங்களுக்கு உதவுகிறது. இந்த புரோகிராம், உங்களுடைய வீடீயோ பைலை, நீங்கள் பயன்படுத்த விரும்பும் சாதனத்திற்கேற்ப மாற்றித் தருகிறது. ஆப்பிள் ஐபோன், ஐ பேட், ஐ பாட் டச், நானோ, சோனி பி.எஸ்.பி., வெப் எம் (WebM) எனப் பல சாதனங்களுக்கான பார்மட்டில் மாற்றுகிறது. யுட்யூப் தளத்தில் இட, MP4 video பார்மட்டிலும் மாற்றிக் கொடுக்கும். இவற்றுடன் MKV, H264, MOV, XVID, AVI, FLV மற்றும் சில பார்மட்களையும் மாற்றும்.
என்ன, அப்பாடா, பல வருஷ தேவை நிறைவேறப் போகிறது என்று எண்ணுகிறீர்களா? மேலே படியுங்கள். இது எப்படி செயல்படுகிறது எனப் பார்க்கலாம். முதலில் http://www.mirovideoconverter.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் சென்று, இதற்கான பைலை டவுண்லோட் செய்திடுங்கள்.
முற்றிலும் இலவசமே. பின்னர், உங்கள் கம்ப்யூட்டரில் Miro Video ConverterI இன்ஸ்டால் செய்திடுங்கள். பதிந்த பின்னர், இயக்கவும். முகப்புப் பக்கத்திலேயே, வீடியோ பைல் ஒன்றை தேர்ந்தெடுக்கச் சொல்லியும், அல்லது ட்ராக் செய்து போடும்படியும் கேட்கும். பைல் ஒன்றைத் தேர்ந்தெடுத்தவுடன், அந்த பைலின் பெயர் ஒரு பாக்ஸில் காட்டப்படும். இதுதான் என உறுதி செய்த பின்னர், எந்த சாதனத்திற்கான பார்மட்டிற்கு மாற்றப்பட வேண்டும் எனச் சுட்டிக் காட்ட வேண்டும். பார்மட் பற்றி எல்லாம் குறிப்பிட வேண்டாம். சாதனத்தை மட்டும் கூறினால் போதும். அதற்கான கீழ்விரி மெனு பட்டியலில் அனைத்து சாதனங்களின் பெயர்களும் கிடைக்கும். இதனைத் தேர்ந்தெடுத்த பின்னர், convert என்பதில் கிளிக் செய்திடவும்.
convert என்பதில் கிளிக் செய்தவுடன், இந்த புரோகிராம், வீடியோ பைலின் பார்மட்டினை, நீங்கள் தேர்ந்தெடுத்தபடி மாற்றத் தொடங்கும். எந்த அளவிற்கு மாற்றம் நடந்து கொண்டுள்ளது என ஒரு ப்ராக்ரஸ் பார் காட்டப்படும். மாற்றப்பட்டவுடன், புரோகிராம் Finished converting எனக் காட்டும். பைலின் புதிய பெயரையும் காட்டும். இதற்கு ஒரு லிங்க் “Show File” எனக் காட்டப்படும். இதில் கிளிக் செய்தால், விண்டோஸ் எக்ஸ்புளோரரில் இந்த பைல் காட்டப்படும்.
இந்த புரோகிராமில் 74.6 எம்.பி. வீடியோ பைல் ஒன்றை, ஐபோன் 4க்காக மாற்றினோம். 16.4 மெகா பைட் அளவிலான பைலாக மாற்றிக் கொடுத்தது. ஐபோனில் மிக அருமையாக இயங்கியது. எவ்வளவு வேலை மிச்சம், நமக்கும் சந்தோஷம். உடனே டவுண்லோட் செய்து, பதிந்து இயக்கிப் பார்க்கவும்.

குறிப்பு:






உங்களுடைய சாதனம் இந்த புரோகிராம் தரும் பட்டியலில் இல்லை என்றால், அதனைப் போன்றே இயங்கும் சாதனத்தைத் தேர்ந்தெடுத்து இயக்கிப் பார்க்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X