பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 நவ
2012
00:00

கூகுள் தொடர்ந்து தரும் வசதிகளை வாரா வாரம் கட்டுரையாகத் தரலாம் போல் உள்ளதே. இணைய வாடிக்கையாளர்கள் வேறு எங்கும் எதற்கும் போய்விடக் கூடாது என்பதில் கூகுள் குறியாய் உள்ளது. அது தரும் வசதிகளும் பயன்களும் டிஜிட்டல் உலகில் மிகச் சிறப்பானவையாய் உள்ளன.
டி.கே. பிரேம் கண்ணா, உதகமண்டலம்.

ஜிமெயில் வழி எஸ்.எம்.எஸ். இயக்கிப் பார்த்தேன். மிகவும் அருமையாக வேலை செய்கிறது. அமெரிக்காவில் பணியாற்றும் என் மகளுக்கும் அனுப்பினேன். அவரின் இமெயில் கணக்கில், மெசேஜ் பெற கட்டணம் இல்லை என்பதால், சிக்கலின்றி சென்றது. ஜிமெயில் இவ்வாறு தன் வாடிக்கையாளர்களுக்கு தரும் வசதிகளை, மிகத் தெளிவாக உடனுடக்குடன் தரும் உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
கே.முருகதாஸ், கோவை.

ஜிமெயில் எஸ்.எம்.எஸ். அனுப்புவதனைச் சரியான படங்களுடன் விளக்கியது, செட்டிங்ஸ் அமைக்க மிக உதவியது.
ஆ. சிந்தனைச் செல்வன், பட்டுக் கோட்டை.

டேப்ளட் பிசி மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் ஒரே வகையான ஆப்பரேட்டிங் சிஸ்டம் இருப்பது மிகவும் உதவியாக இருக்கும். எனவே, விண்டோஸ் சர்பேஸ் டேப்ளட் பிசியினை மக்கள் விரும்புவதில் ஆச்சரியம் இல்லை. இந்த மூன்று பிரிவுகளிலும் இனி மைக்ரோசாப்ட் ராஜ்ஜியம் தான் இருக்கப் போகிறது.
என். குணசேகரன், திருச்சி.

ஹார்ட் டிஸ்க்கில் இடம் காட்டும் புரோகிராம்களின் பயன்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இவை காட்டும் வரை படங்கள், தகவல்களை நாம் அடிக்கடி பார்த்து வைத்துக் கொள்வது நல்லது. திடீரென ஒரு நாள், என்ன செய்வது எனக் கைகளைப் பிசைந்து கொண்டு, முழித்துக் கொண்டிருக்க வேண்டாமே.
என்.கே. கல்யாணி, ஊட்டி.

எக்ஸெல் தேதி பார்மட்டுகளை விளக்கியது மிகப் பிரமாதம். படிப்பது ஒரு வகுப்பில் அமர்ந்து கேட்பது போல இருக்கிறது.
ஆர். நரேஷ்குமார், மதுரை.

மொபைல் திரைகளில், நாம் அடிக்கடி கேட்கும் பெயர்கள் மட்டுமின்றி, இதுவரை கேட்டு அறியாத சில பெயர்களுக்கும் விளக்கம் அளித்துள்ளது மிகவும் சிறப்பு. இதனைப் படித்துவிட்டதனால், இனி மொபைல் வாங்குகையில், கடைக்காரர்கள் எங்களை, அது இது என்று சொல்லி ஏமாற்ற முடியாது. நன்றி.
கரு. சிந்தாமணி, பள்ளத்தூர்.

ஜாவா ஒரு காலத்தில் போடு போடு என்று போட்டது உண்மைதான். அனைத்து பிளாட் பாரங்களிலும் இயங்கும் புரோகிராம்களை இன்றும் உருவாக்க முடிகிறது. ஆனால், ஹேக்கர்களுக்கு, வழி விடும் வகையில் புரோகிராம் இருந்தால், யார் தான் இதனை நாடுவார்கள். ஆப்பிள் செய்தது சரி.
சி. சியாமளா கணேஷ், மதுரை.

டி.எல்.எல். பைல்களில் இத்தனை வகைகளா என்று வியக்க வைத்தது உங்கள் விளக்கம். விண்டோஸ் கட்டமைப்பு என்பது எவ்வளவு சிக்கலானது என்றும் தெரிய வந்தது.
ஆர். தியாகு பிரம்மா, ஸ்ரீவில்லிபுத்தூர்.

ஐ.பி. முகவரி அறிய நீங்கள் தந்துள்ள தளம் மிகவும் அருமை. இன்டர்நெட்டில் உள்ள மற்ற விஷயங்கள் குறித்தும் விளக்கத்துடன், அவற்றைப் பற்றிச் சொல்லும் இணைய தள முகவரிகளையும் தரவும்.
சி. கணேஷ், நிலக்கோட்டை.

ஆன்லைன் கால்குலேட்டருக்கு நீங்கள் காட்டிய தளம் அருமை. இதனைப் பயன்படுத்திப் பார்த்த பின்னர், என் நண்பர்களுக்கு இமெயில் மூலம் அறிவித்தேன். அவர்கள் அனைவரும் கூறிய நன்றியைத் தங்களுக்குக் காணிக்கையாக்குகிறேன்.
ச. முத்தையா, திண்டிவனம்.

வெளிநாடுகளில் வாழும் நண்பர்கள், பிள்ளைகளுடன் பேச, பார்க்க ஸ்கைப் மிக மிக உதவியாய் உள்ளது. இப்போது அதற்கும் ஹேக்கர்கள் சோதனையாய் உள்ளனர் என்பதனை அறிய, பயமாகவும் உள்ளது. வேறு மாற்று உண்டா?
சி. ஆர். செல்வராஜ், சிவகாசி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X