லெனோவா தரும் ஸ்மார்ட் போன்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 நவ
2012
00:00

எது அதிகம் விற்பனையாகிறதோ, அதனை உற்பத்தி செய்து, மக்களிடம் கொண்டு சேர் என்பது ஒரு வியாபார தந்திரம். பெர்சனல் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவோர், இப்போதெல்லாம், ஸ்மார்ட் போன்கள் பக்கம் செல்வதால், ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த, பெர்சனல் கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமான, லெனோவா, அண்மையில் ஐந்து ஸ்மார்ட் போன் மாடல்களை இந்தியாவில் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. இவற்றின் விலை ரூ.6,500 முதல் ரூ. 28,500 வரையில் இருக்கும்.
கம்ப்யூட்டர், டேப்ளட் பிசி,மொபைல் போன்கள் மற்றும் தொலைக் காட்சி பெட்டிகள் (சீனாவில் மட்டும்) என நான்கு வகையான திரை கொண்ட சாதனங்களை, லெனோவா தயாரித்து விற்பனை செய்கிறது. சீனாவில், மொபைல் ஸ்மார்ட் போன் வர்த்தகத்தில், லெனோவா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இப்போது இந்தியாவில் தீவிரமாக இறங்க உள்ளது.
லெனோவா கே 860, எஸ்880, எஸ்560, P700i மற்றும் ஏ60+ என இவை பெயரிடப்பட்டுள்ளன. முதல் நான்கு போன்களும், ஆண்ட்ராய்ட் ஐ.சி.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குபவை. ஏ 60+ மாடல், ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டத்தில் இயங்குகிறது.
லெனோவா கே 860: இதில் 1.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் சிபியு இயங்குகிறது. 5 அங்குல வண்ணத்திரை தரப்பட்டுள்ளது. இதன் திரை 178 டிகிரி கோணத்தில் காட்சி தரும் என்று சொல்லப்படுகிறது. இத்துடன் 8 எம்பி கேமரா, 8 ஜிபி ஸ்டோரேஜ் வசதி, 1 ஜிபி ராம் மெமரி, வை–பி, புளுடூத், மைக்ரோ யு.எஸ்.பி. போன்ற நவீன வசதிகளுடன், 2250 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.28,499.
லெனோவா எஸ்880 மாடல் போனில் 5 அங்குல அகலத் திரை உள்ளது. 9.9 மிமீ தடிமன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு சிம் இயக்கம், 512 ராம் மெமரி, 0.3 எம்பி முன்புற கேமரா, பின்புறமாக 5 எம்.பி. கேமரா, ஜி.பி.எஸ்., மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 2250 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவை உள்ளன. இதன் எடை 200 கிராம்.
லெனோவா எஸ்560 மாடலில், டூயல் கோர் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. 5 அங்குல திரை, 5 மெகா பிக்ஸெல் கேமரா ஆகியவற்றுடன் ரூ.14,999 என விலையிடப்பட்டுள்ளது. இவற்றில் மிக விலை குறைவான போனாக ஏ 60+ உள்ளது. இதில் 1 கிகா ஹெர்ட்ஸ் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் 2.3 சிஸ்டம் இயங்குகிறது. 3.5 அங்குல அகலத் திரை உள்ளது. 1,500 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. 32 ஜிபி வரை மெமரியை அதிகப்படுத்தும் வசதி உள்ளது. இதன் ராம் மெமரியின் அளவு 256 எம்பி. ஜி.பி.எஸ். கிடைக்கிறது. இதன் விலை ரூ.6,499 என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் வழங்கும் வர்த்தகத்தினை, எச்.சி.எல். மற்றும் ஏசர் நிறுவனங்களுடன், லெனோவாவும் பெற்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. ரூ. 14,000 விலையில், 9 லட்சம் லேப்டாப் பிசிக்களைத் தமிழ்நாடு வாங்கிக் கொண்டிருக்கிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X