பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 நவ
2012
00:00

விண்டோஸ் 8 சிறப்புகள் என்ற கட்டுரையில் காட்டப் பட்டுள்ளவை முற்றிலும் புதியனவாக உள்ளன. இந்த சிஸ்டம் தரும் செய்திகள் மற்றும் வசதிகள் அனைத்துமே சிறப்பாகத்தான் இருக்கும் என இதனைப் படித்ததும் தெரிகிறது. தொடர்ந்து இவற்றை எழுதவும்.
கே. ஞானராஜ், திருப்பூர்.

இணைய தள வசதி இல்லாமை, இருந்தும் இணைய தள மோசடிகளால் பயன்படுத்த தயக்கம், ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்துவதில் அச்சம் என்பதாலேயே பலர் இணைய வழி வர்த்தக நடவடிக்கைகளை எடுக்க அஞ்சுகின்றனர். இவர்களுக்கு ஸ்ரீராம் தொடங்க இருக்கும் மையங்கள் உதவி புரிந்தால், நிச்சயம் அது ஒரு பெரிய மாறுதலை அளிக்கும்.
சி. ஜெயலஷ்மி, மதுரை.

ஸ்கைப், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வந்த பின்னர், மைக்ரோசாப்ட் பாஸ்போர்ட் இருந்தாலே போதும் என்ற நிலையை நான் முன்பே எதிர்பார்த்தேன். இப்போது கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு மிகத் தாமதம் தான்.
என். சகாய மேரி, தாம்பரம்.

விண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள் என்ற கட்டுரை நல்ல சிந்தனை ஓட்டத்தினைக் காட்டுகிறது. நம்மை கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு பழக்கப்படுத்தி, அதனைக் கொண்டு வர்த்தகம் மேற்கொள்ளும் மைக்ரோசாப்ட் சரியான ஒரு வியாபாரி.
பேரா. சி. சிவப்பிரகாசம், சென்னை.

மொபைல் போன் கதிர்வீச்சு குறித்த எச்சரிக்கை சரியான அறிவுரை. அடிக்கடி இதனை வெளியிட்டு மக்களை உஷார்ப்படுத்தவும்.
க. நீலமேகம், சின்னாளபட்டி.

மொபைல் போன் கதிர் வீச்சு அபாயம் தரும் என்ற எச்சரிக்கை கட்டுரையில், சிறுவர்களின் எலும்பின் மிருதுத் தன்மை, கதிர் வீச்சினை அதிகம் எதிர் கொள்ளும் என்ற தகவல் அதிர்ச்சி தரக் கூடியதாய் உள்ளது. எடுத்து வெளியிட்டதற்கு நன்றி.
என். ராஜேந்திரன், கோவை.

ஹைபன், டேஷ் விஷயத்தில் இத்தனை வகைகளா! ஒவ்வொன்றையும் விளக்கி எழுதியது மிக நன்றாக உள்ளது. படித்த பின்னரே, இத்தனை நாள் இதனைத் தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறோமே என்ற வெட்கம் வந்தது. தகவலுக்கு நன்றி.
கா.சந்திர சேகரன், விழுப்புரம்.

வீடியோ பைல் மாற்ற நீங்கள் தந்துள்ள தகவல், பைல், செயல்பாடு ஆகியவை மிகவும் அருமை. என் பல நாள் தேவை தீர்க்கும் புரோகிராமினைச் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். பயன்படுத்திப் பார்த்துப் பின்னர் முழுமையாகத் தெரிவிக்கிறேன்.
கே. எஸ். சுகுமாறன், ஹோசூர்.

கேள்வி பதில் பகுதியில், மொபைல் போன் விற்பனை குறித்த புள்ளி விபரம், மொபைல் வர்த்தகத்தின் எதிர் காலத்தினைக் காட்டுவதாக உள்ளது. உழைக்கக் கூடியவர்கள் இந்த வியாபாரத்தில் தாராளமாக இறங்கலாம் என்ற நம்பிக்கை வந்துள்ளது.
இரா. பச்சைமால், சிவகாசி.

ஒரு பக்கம் ஸ்கைப் தன் வளர்ச்சியை மேற்கொள்கிறது; இன்னொரு பக்கம் நம் அரசு, ஸ்கைப் பயன்படுத்துவோர், வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி றார்கள் என்று எச்சரிக்கை தருகிறது. வெளிநாடுகளில் உள்ள நம் நண்பர்கள், உறவினர்களுடன் பேச ஸ்கைப் தான் நமக்கு நல்ல உதவியைத் தந்து வருகிறது. இதனை ஆபத்தின்றி பயன்படுத்த வழி கிடைக்கும்போது தெரிவிக்கவும்.
சி. கண்மணி செல்வி, தர்மபுரி.

இன்னும் அவ்வளவாக புழக்கத்தில் வராத விண்டோஸ் 8 குறித்து ஏகப்பட்ட தகவல்களைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறீர்கள். இதனால், அதனைப் பயன்படுத்துவது வாசகர்களுக்கு எளிதாக இருக்கும். குறிப்பாக, அலுவலகத்தில் பணியாற்றுவோருக்கு நல்ல வழிகாட்டியாக உங்கள் டிப்ஸ் மற்றும் கட்டுரைகள் அமைகின்றன. நன்றி.
தி. புண்ணிய மூர்த்தி, செங்கல்பட்டு.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X