பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 நவ
2012
00:00

ஆண்ட்ராய்ட் பயன்படுத்துபவர்களுக்குத் தான் அது தரும் அருமையான வசதிகள் தெரியும். உங்கள் கட்டுரை அது வளர்ந்த தகவலைத் தருகிறது. தொடர்ந்து அதன் சிறப்புத் தன்மைகள் குறித்து எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
டாக்டர. எஸ். ஆசீர்வாதம், புதுச்சேரி.

ஆண்ட்ராய்ட் தொகுப்புகளுக்குப் பெயர் வைத்த விதம் மிகவும் ருசியானதாக உள்ளது. இதே போல இந்த தொகுப்புகள் தரும் பயன்பாடும் இருக்குமா என்று பார்க்கத் தூண்டுகிறது.
பேரா. டி.மகாதேவன், மதுரை.

விண்டோஸ் 8 பயன்பாடு குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எதிர்பார்ப்பு அர்த்தம் நிறைந்ததாகவே உள்ளது. நிச்சயம் அதன் இலக்குகள் நிறைவேறும். இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் இன்னும் பத்து ஆண்டுகளுக்காவது பேசப்படும்.
டி.பவித்ரன், கும்பகோணம்.

தொடர்ந்து எக்ஸ்பி சிஸ்டம் குறித்து செய்தி தந்து, அதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வரும் எங்களை மகிழ்ச்சி படுத்துகிறீர்கள். இந்த சிஸ்டம் வந்து 11 ஆண்டுகள் ஆயினும் இன்னும் பல விஷயங்கள் புதியவையாகவே உள்ளன.
சி. நீதிராஜன், கோவை.

அழிக்கப்படும் பைல்களை எப்படியும் மீட்டுக் கொள்ளலாம் என்று இருந்த என் மனதில் கலவரத்தை ஏற்படுத்திவிட்டீர்கள். ஆனால், நீங்கள் தந்த தகவல்கள் முற்றிலும் உண்மையே. இனிமேல் பைல்களை அழிக்கும் முன் கவனமாக இருக்க வேண்டும்.
என். எழிலரசி, திருப்பூர்.

ஆண்ட்ராய்ட் சிஸ்டம் வந்த வரலாறு, இதற்கான 7 லட்சம் அப்ளிகேஷன்கள், ஆண்ட்ராய்ட் சிஸ்ட மொபைல் போன்கள் என இவ்வார இதழை ஆண்ட்ராய்ட் ஸ்பெஷல் ஆகத் தந்திருக்கிறீர்கள். ஸ்மார்ட் போன் பயன்பாட்டில், ஆண்ட்ராய்ட் தரும் வசதிகளை, வாரம் தோறும் பட்டியலிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கா. தமிழரசன், சிதம்பரம்.

ட்ரிவியா வினாடி வினா தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நம் பொது அறிவினை வளர்த்துக் கொள்ளவும் பயன்படுகிறது. இது போல இன்னும் சில தளங்கள் குறித்து தகவல் தரவும்.
ஆர். மனோ சிவராஜ், மதுரை.

கூகுள் தரும் புதிய கம்போஸ் வசதி மிகவும் சூப்பர், சார். நீங்கள் எழுதியதைப் படித்த பின்னரே, அதில் கிளிக் செய்து பயன்படுத்தினேன். வேறு சில மெயில்களைப் பார்த்து, புதிய மெயில்களை அமைக்க மிக மிக உதவியாய் இருக்கிறது. படங்களுடன் முகவரிகள் வருவது இன்னும் சூப்பர். கூகுள் திடீர் திடீரென புதிய வசதிகள் தருவதைக் காட்டிலும், அவற்றை உடனே தேடிப் பிடித்து வாசகர்களுக்குத் தரும் உங்கள் ஆசிரியர் குழுவிற்கு, வாசகர்கள் சார்பில் நன்றி.
ஆ. பங்கஜ் குமார், சென்னை.

கம்ப்யூட்டர் கிராஷ் ஆனால் ஏற்படும் பதற்றத்திற்கு அளவே இல்லை. நல்ல எச்சரிக்கை கட்டுரையாக தகவல்களைத் தந்துள்ளீர்கள். இனிமேல் கவனமாக இருக்க வேண்டிய பிரிவுகளில் உஷாராக இருக்க பழகிக் கொள்ள வேண்டும் என்ற பாடத்தைக் கற்றுக் கொண்டேன்.
கே. பத்மநாபன், கும்பகோணம்.

இன்ஸ்டால் செய்திடும் புரோகிராம்கள் அனைவருக்கும் கிடைக்க கேள்வி பதில் பகுதியில் காட்டிய வழிகள், என பல நாள் பிரச்னைக்கு தீர்வாய் அமைந்தது. நன்றி.
சி. ஸ்நேகலதா, சென்னை.

மீட்க முடியாத நிலையில் அழிக்கப்படும் பைல்கள் குறித்த விளக்கம், நாம் செய்திடும் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளது. இனிமேல் கவனமாக இருக்க எச்சரிக்கை தருகிறது.
பழ. முத்து ஷண்முகம், காரைக்குடி.

கம்ப்யூட்டர் மலரை நம்பி விண்டோஸ் 8 பதித்த கம்ப்யூட்டரை வாங்கப் போகிறேன். ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து டிப்ஸ், ட்ரிக்ஸ் மற்றும் புதிய பயன்பாட்டிற்கான வழிகளை எதிர்பார்க்கிறேன். வேண்டுகிறேன்.
பெ. பாஸ்கரன், மதுரை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X