எக்ஸெல் கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 நவ
2012
00:00

கேள்வி: சார்ட்களைப் பொறுத்தவரை வண்ணத்தில் ஏற்படுத்தலாம். ஆனால் அவை சாலிட் கலராக இருக்கின்றன. Fill Effects டயலாக் பாக்ஸில் ட்ரான்ஸ்பரன்ஸி கண்ட்ரோல் இருந்தாலும் அவை செயல்படா வண்ணம் உள்ளன. ட்ரான்ஸ்பரன்ஸியுடன் கூடிய கலர் அமைக்க என்ன செய்யலாம்?
பதில்:
சரியாகக் கவனித்திருக்கிறீர்கள். இங்கு ஒரு பார் அல்லது கால வரிசையினை ஒரு படத்தை ஒட்டி அதனை ட்ரான்ஸ்பரன்ட் ஆக வைத்துக் கொள்வது குறித்து டிப்ஸ் தருகிறேன்.
1. முதலில் வழக்கம் போல சார்ட் தயார் செய்து கொள்ளுங்கள். அது பார் சார்ட் அல்லது காலம் சார்ட் ஆக இருக்க வேண்டும்.
2. டிராயிங் டூல் பாரினைக் கொண்டு வரவும். ஒர்க் ஷீட்டில் ஒரு செவ்வக (Rectangle AutoShape)ஆட்டோ ஷேப்பினை இணைக்கவும்.
3. இனி செவ்வக ஆட்டோ ஷேப்பின் உள்ளாக டபுள் கிளிக் செய்திடவும். இப்போது Format AutoShape டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
4. ஆட்டோ ஷேப் டயலாக் பாக்ஸில் Colors and Lines என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
5. கலர் கண்ட்ரோலைப் பயன்படுத்தி ஏதேனும் ஒரு கலரைத் தேர்ந்தெடுக்கவும்.
6. அதன்பின் Transparency ஸ்குரோல் பாரினைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட அளவு ட்ரான்ஸ்பரன்சி செட்டிங்கை அமைக்கவும்.
7. நல்ல ரிசல்ட் வர வேண்டும் என்றால் கண்ட்ரோலினைப் பயன்படுத்தவும். No Line என்பதை அமைக்கவும்.
8. AutoShape டயலாக் பாக்ஸை இனி மூடவும்.
9. இனி AutoShape தேர்ந்தெடுக்கவும். Shift செலக்ட் செய்து Copy Picture தேர்ந்தெடுக்கவும். இந்த கட்டளை ஷிப்ட் கீயை அழுத்தினால் தான் கிடைக்கும். அதில் தரப்பட்டுள்ள டிபால்ட் செட்டிங்ஸை ஒத்துக் கொள்ளவும்.
10. உங்கள் சார்ட்டை இயக்கவும். பாரில் கிளிக் செய்திடவும். அல்லது நெட்டு வரிசையில் வரிசையில் கிளிக் செய்திடவும்.
11. Edit Paste தேர்ந்தெடுத்து காப்பி செய்து வைத்திருக்கின்ற AutoShapeனை பேஸ்ட் செய்திடவும்.
12. AutoShapeனை பார்டர் இன்றி பார்மட் செய்திருந்தால் உங்கள் சார்ட் வரிசைக்கு பார்டர் சேர்க்கலாம். வரிசையில் டபுள் கிளிக் செய்து Format Data Series டயலாக் பாக்ஸில் Patterns டேப்பினைப் பயன்படுத்தவும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Angannachari Thiyagarajan - Chennai,இந்தியா
28-நவ-201219:47:42 IST Report Abuse
Angannachari Thiyagarajan Respected publisher , please accept my hearty wishes for your service to the dinamalar readers (specially for computer users ) there are many advice&39s you giving to the readers ,, i am really surprising that how you gather such valuable information ,since all these software and programmes are d by microsoft , your service is so great and i dont find sui words to appreciate you :) due to your article i learnt a lot and using this my day to day work , ( i proudly say that i so far never take any trainning from outside persons , ( earlier i used to call the software engineer for updating my operating tems ) If you have any books prepared for the computer users ( new and existing users ) please let me know , i want to purchase it thiygagarajan
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X