41 எம்.பி. கேமராவுடன் நோக்கியா 808 ப்யூர் வியூ
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 டிச
2012
00:00

நோக்கியா தன் லூமியா 920 சூப்பர் போனை தீபாவளி கொண்டாட்ட விற்பனைக்குக் கொண்டு வர இயலாமல் போய்விட்டது. ஆனால், தன்னிடம் இருந்து ஏதேனும் சிறப்பாக எதிர்பார்த்த தன் வாடிக்கையாளர்களுக்கு, நல்லதொரு அறிவிப்பினை வழங்கியது.
41 எம்.பி. திறன் கொண்ட கேமராவுடன் வடிவமைக்கப்பட்ட தன் 808 பியூர்வியூ மொபைல் போன் விலையை ரூ.25,000க்குக் குறைத்துள்ளது. முன்பு இதன் விலை ரூ.32,100 ஆக இருந்தது. சென்ற பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட இந்த மொபைல் போன் ஒரு சிம்பியன் சிஸ்டம் கொண்ட போனாகும். சென்ற 2012 மொபைல் உலகக் கருத்தரங்கில், சிறந்த புதிய மொபைல் போன் பிரிவில் முதல் இடத்தைப் பெற்றது. இதன் சிறப்பான கேமரா, மற்ற எஸ்.எல்.ஆர்.கேமராக்களுடன் வைத்து பார்க்கும் அளவிற்குச் சிறப்பாக இயங்குகிறது. மிகச் சிறப்பான கேமரா அமைந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன் வாங்கத் திட்டமிடுபவர்கள், இதனையும் கொஞ்சம் அலசிப் பார்க்கலாம். saholic.com என்ற வணிக இணைய தளம் தான், முதன் முதலில் இதன் குறைந்த விலை விற்பனையைக் காட்டியது. இந்த மொபைல் நான்கு அலைவரிசைகளில் இயங்குகிறது.
இதன் பரிமாணம் 123.9x60.2x13.9 மிமீ. எடை 169 கிராம். இதன் திரை AMOLED கெபாசிடிவ் டச் ஸ்கிரீன். கொரில்லா கிளாஸ் 4 அங்குல திரை டிஸ்பிளே சிறப்பாக உள்ளது. இதில் பின்பக்கமாக 41 எம்.பி. திறன் கேமராவும், முன் பக்கமாக வி.ஜி.ஏ.கேமராவும் உள்ளன. இதன் உள் நினைவகம் 16 ஜிபி. சிஸ்டம் நினைவகம் 1 ஜிபி. ராம் நினைவகம் 512 எம்பி.
மைக்ரோ எஸ். டி. கார்ட் மூலம் நினைவகத்தினை 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் எட்ஜ் தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. வைபி, A2DP இணைந்த புளுடூத் 3.0., என்.எப்.சி. என்னும் அண்மைக் களத் தகவல் பரிமாற்ற வசதி, எப்.எம். ட்ரான்ஸ்மீட்டர், எம்பி3 மற்றும் எம்பி 4 பிளேயர்கள், ஆர்கனைசர், டாகுமெண்ட் வியூவர், வீடியோ/போட்டோ எடிட்டர், லவுட் ஸ்பீக்கர், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ்மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய சிறப்பு வசதிகள் தரப்பட்டுள்ளன. எச்.டி.எம்.ஐ. போர்ட், யு.எஸ்.பி, ஓ.டி.ஜி. மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை இதன் மற்ற சிறப்பம்சங்களாகும்.
கருப்பு, சிகப்பு மற்றும் வெள்ளை ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த போனில் 1400 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி தரப்பட்டுள்ளது. இதன் மூலம், 11 மணி நேரம் தொடர்ந்து பேசலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால், 465 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது. இதன் கதிர் அலைவீச்சு 1.21 W/kg என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X