இன்டெக்ஸ் வழங்கும் இரண்டு போன்கள் - டூயல் சிம் சென்ஸ் 3 + இன்டெக்ஸ் ஆரா
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 டிச
2012
00:00

தொடு திரையுடன் கூடிய, இரண்டு சிம்களில் இயங்கக் கூடிய சென்ஸ் 3 (Sense 3) என்ற மொபைல் போனை, அண்மையில் இன்டெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதனுடன் 2 ஜிபி டேட்டா கார்ட், கூடுதல் விலையின்றி வழங்கப்படுகிறது. இதனுடைய பேட்டரி திறன் 1,500 mAh ஆக இருப்பதால், தொடர்ந்து 5 மணி நேரம் பேச முடிகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், மின்சக்தி 250 மணி நேரம் தங்குகிறது. இதனுடைய திரை 3.2 அங்குல அகலத்தில் அமைக்கப்படுகிறது.
இந்த போனின் சிறப்பம்சமாக, இதனை ரிமோட் கண்ட்ரோலில் இயக்கும் வசதியைக் கூறலாம். போன் பயன்படுத்துவோருக்கு இது ஓர் ஆப்ஷனாகத் தரப்படுகிறது. இதனை ஒரு ரகசிய எஸ்.எம்.எஸ். ஒன்றை ஓர் எண்ணுக்கு அனுப்புவதன் மூலம் மேற்கொள்ளலாம். அதன் மூலம் செய்திகளை அழிக்கலாம்; போன் முகவரிகளை அழிக்கலாம் மற்றும் போன் முழுவதும் பார்மட் செய்திடலாம்.
அழைப்பவர்களை குழுக்களாக அமைத்து இயக்குவது, தானாக அழைப்பு பதிவுகளை ஏற்படுத்துதல், மொபைல் ட்ரேக்கர், 16 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, இபுக் ரீடர், வீடியோ மற்றும் ஆடியோ பிளேயர், பதிவு வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ, சவுண்ட் ரெகார்டர், அழைப்புகளைத் தானாக பதிவு செய்திடும் வசதி, பேட்டரி மேனேஜர் ஆகிய வசதிகள் இதில் தரப்பட்டுள்ளன. ஒரு வெப் கேமராவினை இணைத்து, அதிக நேரம் வீடியோ அழைப்பினை மேற்கொள்ளலாம். 1000 முகவரிகள், 400 குறுஞ்செய்திகளை பதிந்து வைக்கலாம். புளுடூத், ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் WAP வசதிகள் கிடைக்கின்றன.
இதில் தரப்பட்டுள்ள லோமோ (LOMO) கேமரா அப்ளிகேஷன் மற்ற மொபைல் போன்களில் இல்லாத சிறப்பான ஒன்று என இன்டெக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் தரப்பட்டுள்ள பியானோ அப்ளிகேஷன் மூலம், போனை ஒரு பியானோ போல பயன்படுத்தலாம்.
பொன் மஞ்Œள், வெள்ளை மற்றும் சில்வர் வண்ணங்களில், இந்த போன் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 3,450. இன்டெக்ஸ் நிறுவனத்தின் தனிப்பட்ட விற்பனை நிலையங்களாக இயங்கும், இன்டெக்ஸ் ஸ்குயர்களிலும், மற்ற போன்
விற்பனையாளர்களிடமும், இன்டெக்ஸ் நிறுவனத்தின் 15,000 விநியோகஸ்தர்களிடமும் இந்த போன் கிடைக்கிறது.
பட்ஜெட் விலையில் மற்றொரு போனை இன்டெக்ஸ் ஆரா (Intex Aura)என்ற பெயரில் இன்டெக்ஸ் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. அனைத்து வயதினருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு, இந்த போன் உகந்ததாக வடிவமைக்கப் பட்டுள்ளது என இன்டெக்ஸ் அறிவித்துள்ளது.
இதுவும் இரண்டு சிம் இயக்கத்தினைக் கொண்டுள்ளது. 1.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. 1,800 mAh திறன் கொண்ட பேட்டரி தொடர்ந்து 5 மணி நேரம் பேசும் வசதியையும், 360 மணி நேரம் மின்சக்தியைக் கொள்ளும் திறனையும் கொண்டுள்ளது. பதிவு செய்யும் வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ, A2DP இணைந்த புளுடூத், பெர்சனல் கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களுடன் இணைத்து இயக்க யு.எஸ்.பி. போர்ட், வீடியோ மற்றும் ஆடியோ பிளேயர் ஆகியவை கிடைக்கின்றன. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம், இதன் மெமரியை 16 ஜிபி வரை அதிகப்படுத்தலாம்.
அட்ரஸ் புக் 500 முகவரிகள் வரை கொள்கிறது. மொபைல் ட்ரேக்கர் மற்றும் டார்ச் இணைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளை சப்போர்ட் செய்கிறது. சிகப்பு, வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில் கிடைக்கும் இந்த போனில் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 1,690 மட்டுமே.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X