தமிழ் உணவு தயாரிப்பது எப்படி?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 டிச
2012
00:00

சமையல் செய்வது எப்படி என்று சொல்லிக் கொடுப்பது ஒரு கலை. ஆனால், இந்தக் காலத்தில் பெண்கள், ஆண்களுக்கு இணையாக, ஏன், அவர்களுக்கும் மேலாக அலுவலகங்களில் சென்று பணியாற்றுகின்றனர். இதனால், அவர்களுக்கும் விதம் விதமான உணவினைத் தயாரிப்பது குறித்துக் கற்றுக் கொள்ள நேரம் இருப்பதில்லை. தங்கள் மகள்களுக்குக் கற்றுக் கொடுக்கவும், பழக்கப்படுத்தவும் முன் வருவதில்லை. இதனாலேயே பல இணைய தளங்களில் உணவு தயாரிக்கும் முறையினை (Recipe) வெளியிட்டுள்ளனர். ஒவ்வொரு இணைய தளத்திலும் ஒவ்வொரு வகையான உணவுகளைப் பட்டியலிட்டு அவற்றைத் தயாரிக்கும் முறையை விளக்கியுள்ளனர்.
அனைத்து தமிழ் உணவுகளையும், அவற்றைத் தயாரிக்கும் முறையையும் அறிந்து கொள்ள எந்த இணைய தளம் செல்லலாம் என்று தேடினால், அனைத்தும் ஒரே தளத்தில் இல்லை என்றே சொல்லலாம். ஆனால், ஒருவர் தமிழ் உணவு பற்றிக் கூறும் தளம் அனைத்தையும் தேடி, அவற்றைப் பட்டியலிட்டு, அந்த தளங்களுக்கான லிங்க் அனைத்தையும் தன் வலைமனையில் தந்துள்ளார். அந்த தளத்தின் முகவரி http://tamilcuisine.blogspot.in/. இந்த வலைமனைத் தளத்தில் நுழைந்தவுடன் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவது இதன் வகைகள் தான்.
இடை இடையே சாப்பிட குழி பணியாரம், ஊத்தப்பம், வட கறி, புட்டு, அழகர் தோசை என 23 உணவுப் பண்டங்கள், அடுத்து சாதம் வகைகள் 13, கூட்டு வகைகள் 15, குழம்பு வகை 26, சாம்பார் ரசம் வகை 16, பொரியல், வறுவல் 27, முட்டை வகை 6, மீன் வகை 13, ஆட்டுக் கறி உணவு வகை 16, கோழிக் கறி உணவு 14, உணவிற்குப் பின் குடிக்க தாளிச்ச மோரில் தொடங்கி வெட்டி வேர் பானம் வரை 8 வகை பானங்கள், சட்னி, பொடி, ஊறுகாய் என ஒரு தொகுப்பு 24, இனிப்பு வகை 46, நொறுக்குத் தீனி 21 என விதம் விதமாய் உணவு வகைகளுக்கான லிங்க் தரப்பட்டுள்ளன. இவற்றில் கிளிக் செய்தால், நமக்கு அந்த தளங்கள் திறக்கப்பட்டு இவற்றைத் தயாரிக்கத் தேவையான பொருட்கள், முறை ஆகியன விளக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் அவ்வப்போது புதிய வகைகளும் இணைக்கப்பட்டு, எவை புதியவை எனவும் காட்டப்படுகின்றன.
அனைத்தையும் நாம் டவுண்லோட் செய்து ஒரு சிடியில் போட்டு, திருமணமாகி வெளிநாட்டுக்குச் செல்லும் நம் மகளிடம் கொடுத்து விடலாம். திருமணம் செய்திடாமல் தானே சமைத்து சாப்பிட திட்டமிடும் உங்கள் மகனிடமும் அந்த சிடியைக் கொடுக்கலாம். அல்லது இந்த தளம் குறித்த தகவலை அனுப்பலாம். என்ன ரெடியா? முதலில் நீங்கள் இவற்றைப் படித்து, உணவினைத் தயார் செய்து, உண்டு ருசித்து மற்றவருக்கும் பரிந்துரை செய்திடுங்கள்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X