பர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 டிச
2012
00:00

ஏதோ ஒன்று என என்றில்லாமல், 44ஆண்டுகள் வளர்ந்து, நம் வாழ்வின் முக்கிய அங்கமாக இன்று மாறிவிட்ட மவுஸ் வளர்ந்த விதம், ஆச்சரியமாக உள்ளது. அதனை நமக்குத் தந்த எங்கல்பார்ட் அவர்களுக்கு, நாம் அனைவரும் கடமைப் பட்டுள்ளோம். இவர் பெயரில் உள்ள இணைய தளத்தின் மூலம் நாம் அனைவரும் நன்றி தெரிவிக்கலாம்.
கே.லாரா ஜேசுதாஸ், கோவை.

மவுஸ் என்னும் மாய சாதனத்தை நமக்குத் தந்தது ஆப்பிள் அல்லது மைக்ரோசாப்ட் என எண்ணி இருந்த எங்களில் பலருக்கு, உங்கள் கட்டுரை மவுஸ் 44, நல்ல தெளிவையும் தகவல்களையும் தந்தது. நன்றி.
சி.வனிதா ஸ்ரீ, கோவில்பட்டி.

ராம் மெமரியில் இத்தனை தகவல்கள் உள்ளனவா? என்று வியக்கும் அளவிற்கு வினாடி வினா தந்துள்ளீர்கள். இது போல கம்ப்யூட்டர் உலகின் ஒவ்வொரு பிரிவிற்கும் வினாடி வினா தரவும்.
கே.என். சிவப்பிரகாஷ், மதுரை.

ராம் மெமரி குறித்து இன்னும் பல தகவல்களையும், இதில் ஈடுபட்டு பல திருப்பு முனை தந்தவர்களின் படங்களையும் தந்திருக்கலாம். நீண்ட கட்டுரை ஒன்று மெமரி குறித்து உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.
சி.ஆர். சுவாமிதாஸ், செங்கல்பட்டு.

கிட்டத்தட்ட ஒரு எஸ்.எல்.ஆர். கேமரா அளவிற்குத் திறன் கொண்ட கேமரா இணைந்த போனை அல்லவா, நோக்கியா வடிவமைத்துள்ளது. தன் முதல் இடத்தைத் தக்க வைக்க, இது போல பல முயற்சிகளில் நிச்சயம் நோக்கியா ஈடுபடும் என எதிர்பார்க்கலாம்.
எம். சுகவனம், திருபுவனம்.

கால்குலேட்டரில் நாள் கணக்கு போடுவது முடியும் என எண்ணியதே இல்லை. விண்டோஸ் தரும் கால்குலேட்டரிலேயே இந்த வசதி உள்ளது என்பது பயனுள்ள தகவல். இதுவரை இதனைத் தெரியாமல் இருந்துள்ளோம். தகவலுக்கு நன்றி.
எம். அன்பழகன், காரைக்கால்.

நேஷனல் ஜியாக்ரபிக் என்பதே, இயற்கையை நம் கண் முன்னே, தத் ரூபமாகத் தருவதில் பெயர் பெற்ற ஒரு பெயராயிற்றே. இதன் இணைய தளத்திலும், பல்வேறு வசதிகள் உள்ளன என்பதுதான் வியத்தகு தகவல்.
கா.முருகராஜ், திண்டுக்கல்.

கிளிக் செய்தோம், கிடைத்தது என்ற அளவில் தான் விண்டோஸ் இயக்கத்தின் பல்வேறு கட்டங்களைப் பார்த்துள்ளோம். பயன்படுத்தி உள்ளோம். அவற்றின் தன்மைகள், தரும் இயக்க வசதிகள், உள்ளீடு மற்றும் தகவல் அறிவிப்புகள் ஆகியவற்றை மிகத் தெளிவாக விளக்குகிறது விண்டோஸ் பெட்டிகள் கட்டுரை. நன்றி.
ஆ. கிருஷ்ணராஜ், புதுச்சேரி.

திருப்பூர் வாசகி கேட்டுள்ள கேள்வி, உண்மையிலேயே நம் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது. தங்களின் பதிலும் நிறைவாக உள்ளது. அறிவியல் எந்தப் பாதையில் செல்லும் என்பது உடனடியாகக் கணிக்க முடியாதது.
எஸ். பூபாலன், திருப்பூர்.

புதிய இன்டர்நெட் முகவரி அமைப்பினால், எண்ணிக்கை அதிகமாகலாம்; எளிமையாக இருக்குமா? அனைவருக்கும் இதிலிருந்து ஏதேனும் புதிய முறையில் தகவல் கிடைக்குமா?
சீ. பாலா விக்னேஷ், மதுரை.

கீ போர்டு இன்டிகேட்டர், மிகச் சிறந்த உதவியாய் உள்ளது. இது போல, கம்ப்யூட்டர் பயன்பாட்டில் உதவிடும் சின்னச் சின்ன புரோகிராம்கள் குறித்து, சிறிய அளவில் தகவல்களும், கிடைக்கும் இணைய தள முகவரிகளும் தரவும்.
பேரா. சி.முருகேசன், மதுரை.

இந்த வார இதழில், விண்டோஸ் 8 சார்ந்த தகவல்கள், கட்டுரை, டிப்ஸ் எதுவுமில்லை. கேள்வி பதில் பகுதியில் மட்டுமே, பதில்கள் வழியாக சில டிப்ஸ் தரப்பட்டுள்ளது. தயவு செய்து விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டங்கள் குறித்து டிப்ஸ், ட்ரிக்ஸ் ஒவ்வொரு வாரமும் இடம் பெறும்படி அமைக்கவும்.
டாக்டர் இ.செந்தமிழ் அரசு, கோவை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X